எபிரெயர் நிருபத்தின் பேரிலான கேள்விகளும் பதில்களும் பாகம்- I 57-0925 1. தேவனில்லாமல் எப்படி அவளால் அதைச் செய்ய முடியும்? அது உண்மையான ஒன்றாயிருக்கும், அவ்வாறிருக்காதா? அது கர்த்தரில்லாமல் செய்யப்பட முடியாது. அவைகள் எல்லாவற்றிலிருந்தும் நான் பிரசங்கிக்கப் போவதில்லை. ஆனால் ஒருவிதமான கடினமான ஒரு காரியத்தை ஒருகால் நான் பெற்றுக் கொள்ளலாம் என்றும், உங்களுக்குத் தெரியும், எனவே நான் ஆயத்தப்படுவது மேலானதாகும் என்றும் நான் எண்ணியிருந்தேன். ஆனால், ஓ, அதுவோ மிக, மிக இலகுவானதாயிருந்தது. ஆகையால் ஜனங்கள் மத்தியில் மிக அதிகமான கேள்விகள் இல்லாமலிருக்கலாம், அவை மிக எளிமையான, இலகுவான கேள்விகளாகவே உள்ளன. நல்லது, கர்த்தருடைய ஒத்தாசையினால் என்னால் முடிந்தளவு மிகச் சிறந்த முறையில் அவைகளுக்கு பதிலளிக்க முயற்சிப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். 2 சகோதரி ஆர்கன்பிரைட் இன்றிரவு உள்ளே இருக்கிறார்களா?…சகோதரி ரூத். சகோதரி ரூத், நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? இங்கே உள்ளீர்கள். நான்…ஓ, ஆம், நான் இங்கே அந்த முகவரியை வைத்துள்ளேன்,…இல்லை, நான் வைத்திருக்கவில்லை. நான் எதை இங்கிருந்து எடுக்க முடியும். நான் அதை என்னுடைய குறிப்புப் புத்தகத்தில் வைத்திருந்தேன், நான் என்னுடைய குறிப்புப் புத்தகத்தை வீட்டிலேயே விட்டுவிட்டேன். இப்பொழுது, நான் வீட்டிற்கு செல்லும்போது, காவல்துறையினர் என்னை பிடித்தால், சகோதரன் பிளீமேன், நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வரவேண்டும். நான்…என்னுடைய குறிப்புப் புத்தகத்தை வீட்டிலேயே விட்டுவிட்டேன் என்றும், நான் இன்றிரவு ஒரு ஓட்டுனர் உரிமமில்லாமல் வாகனத்தை ஓட்டிச் செல்லப் போகிறேன் என்றும் பில்லியிடம் சொல்லுங்கள். நான் அதை என்னுடைய சட்டைப் பையில் வைத்துவிட்டேன் என்று எண்ணி, நான் என்னுடைய உடைகளை மாற்றிக் கொண்டேன். பின்னர் இந்தப் பிற்பகல் நான் துரிதமாக புற்களை வெட்டிக் கொண்டிருந்தேன். அதன்பின்னர் அதை விட்டுவிட்டு அவசரமாக வீட்டிற்குள் சென்று என்னுடைய உடைகளை துரிதமாக மாற்றிக்கொண்டு இங்கு விரைந்து ஓடி வரவேண்டியதாயிருந்தது. நான்—நான் கிரேக்க வேதாகம அகராதியைக் கொண்டுவந்துள்ளேன், ஆனால் நீங்கள் அதிலிருந்து எடுத்துப் பார்த்து புரிந்து கொள்ள முடியும். 3 அந்த கடிதத்தைக் குற்த்து மோசமாக எண்ணாதீர்கள். நான் அதைப் பார்க்கிலும் மோசமான ஒன்றை ஒருபோதும் பெறாமலிருந்தால், அது ஒரு அருமையான கடிதமாயிருக்கும். அது நன்றாயிருந்தது. அது மிக, மிக அருமையானதாயிருந்தது. நான் அதைப் படிக்கமாட்டேன் என்று உங்களிடம் கூறினேன், ஆனாலும் நான் அதை உங்களுக்கு படித்துக்காட்டிவிட்டேன், ஏனென்றால் உங்களுக்குத் தெரியும், அதை இனிமேலும் என்னால் படிக்காமல் வைத்திருக்க முடியவில்லை. அவள் என்னக் கூறினாள் என்பதைக் குறித்து நான் வியப்புற்றேன். அது மிக, மிக அருமையானதாய், ஒரு உண்மையான பள்ளி ஆசிரியர் எழுதுவதுபோல எழுதப்பட்டிருந்தது. அது நன்றாயிருந்தது, நான் அதைப் பாராட்டுகிறேன். அது—அது உங்களுக்கு…அளிக்கிறது… 4 நீங்கள் பாருங்கள், உங்களோடு சற்று வேறுபட்டுள்ள யாரோ ஒருவருடைய கடிதங்களை நான் விரும்புகிறேன். பாருங்கள், எல்லா நேரத்திலும் உங்களோடு யாருமே வேறுபாடு கொள்ளாமலிருந்தால், அப்பொழுது நீங்கள் சலிப்படைந்து விடுவீர்கள். நீங்கள் ஆழமாய் ஆராய்ந்து புரிந்து கொள்ளும்படி நீங்கள் சற்று வேற்றுமையானவற்றையும் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் எதையுமே கவனிக்காமலிருந்தால், அப்பொழுது நீங்கள் ஒரு தேய்ந்த பாதையில் செல்லுவீர்கள், நீங்கள் அவ்வாறு செல்லும்போது, அப்பொழுது நீங்கள்—நீங்கள் தொல்லைக்குள்ளாவீர்கள். நீங்கள் அந்தவிதமாக தொடர்ந்து செல்லும்போது, நீங்கள் யாருடனாவது வித்தியாசப்பட்டால்தான் ஒருமுறையாவது உங்களுடைய சிறகுகளில் உள்ள புழுதியைத் தட்ட முடியும். 5 நான் ஆப்பிரிக்காவில் இரண்டு சிங்கக் குட்டிகளைக் கண்டேன். அவைகள் ஏறக்குறைய அந்தவிதமான சிறு குட்டிகளாயிருந்தன. புள்ளிகளைக் கொண்ட மிகச் சிறிய சிங்கக் குட்டி; ஒரு ஆண் குட்டி சிங்கம், ஒரு குட்டி பெண் சிங்கம். இப்பொழுது, அவைகளோ பூனைக் குட்டிகளைப் போலக் காணப்பட்டன, அவைகள் அந்தவிதமாக மிகச் சிறியவனவாயும், சிறு…அழகான குட்டிகளாயும் இருந்தன, அவைகள் விளையாடிக்கொண்டிருந்தன. நான் அவைகளை அமெரிக்காவிற்கு கொண்டுவரப் போவதாயிருந்தேன். எனவே நான் அவைகளை ஒரு பறவைக் கூண்டில் வைத்திருந்தேன். நான் அவைகளை இங்கே கொண்டுவரப் போவதாயிருந்தேன். ஆனால் என்னால் அவைகளுக்கு கொடிய விஷ நோயினின்று பாதுகாக்கும்படிக்கு எந்த தடுப்பூசியையும் போட முடியவில்லை. அவைகளுக்கு முதலில் தடுப்பூசி போடப்படாமல் அவைகளை அமெரிக்காவிற்கு நான் கொண்டுவர அனுமதிக்கமாட்டார்கள். எனவே நான் அதற்கு தடுப்பூசி போட ஆப்பிரிக்கா முழுவதிலுமே தேடியும் கண்டறிய முடியவில்லை. ஆனால் அது ஒரு சிங்கமா அல்லது இல்லையா என்பதை நீங்கள் கண்டறிய வேண்டுமென்று விரும்பினால், அதன் பின்புறத்தில் ஒரு குத்துவிட்டிப் பாருங்கள். அப்பொழுது அது சண்டையிட ஆயத்தமாகி, அது ஒரு சிங்கம் என்று உங்களை அறிந்து கொள்ளச் செய்யும். எனவே—எனவே அந்தவிதமான முடிவுகள் அது எந்நிலையில் நின்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளச் செய்யும். 6 அந்தவிதமாக நீங்கள் ஒருமுறையாவது செய்ய வேண்டும், அப்பொழுது ஒரு விதமான புழுதியை உங்களுடைய சிறகுகளிலிருந்து பின்னோக்கி உதறித் தள்ளிவிட அறிந்து கொள்ள நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது நாம் சிங்கத்தைப் போல கோபப்படுகிறதில்லை. நாம் அதை…ஜனங்கள் கேள்விகளைக் கேட்பதை விரும்புகிறோம். சகோதரி ரூத், அந்த விதமான கேள்விகள் எனக்கோ மிக மிக நன்மையானதாகவே உள்ளன. அது ஒரு…நான்—நான் அதை விரும்புகிறேன், பாருங்கள். அவைகளில் உண்மையாக நான் பெற்றுக் கொள்ள வெறுக்கிற ஒரு விதமான மோசமானவை உண்டு. ஆனாலும் இவைகள் ஒரு…அது அருமையானதாயிருந்தது. 7 இப்பொழுது நாம் சில நல்லதும், குழப்பமானதும் மற்றும் சபை சம்மந்தமான கேள்விகளையும் பெற்றுள்ளோம். அங்கே பின்னால் உள்ள ஒரு அறையிலிருந்த ஒரு பிரசங்கியார் இப்பொழுது என்னிடத்தில், “எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு முன்னர் வெளிப்படுத்தின விசேஷம் 11-, அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு தீர்க்கதரிசிகள் வருவார்களா அல்லது யூதர்கள் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரா? என்ன…” என்று கேட்டார். இப்பொழுது, அந்தவிதமாக கேள்விகள் உங்களை சுற்றி வளைக்கிறது. ஆனால் இந்தவிதமான—இந்தவிதமான இந்த எளிமையான் கேள்விகளோ பரவாயில்லை. ஆனால் இப்பொழுது நாம் துவங்குவதற்கு முன்பு, ஜெபத்திற்காக நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 8 பிதாவே, நீர் பன்னிரண்டு வயதாயிருந்தபோது, நீர் தேவாலயத்தில் வேதபாரகரோடும், கல்விமான்களோடும் வேதவாக்கியங்களைக் கொண்டு விவாதித்துக் கொண்டிருக்கிறவராகக் காணப்பட்டீர். அவர்களோ—அவர்களோ ஆச்சரியப்பட்டனர். அவர்கள் வயோதிகர்களாயும், வேதவாக்கியங்களை நன்கு கற்று பயிற்றுவிக்கப்பட்டவர்களாயிருந்தபோதிலும் கிட்டத்தட்ட பன்னிரண்டு வயதுடைய ஒரு சிறு பையன் வேதவாக்கியங்களை விளக்கிக் கூறுவதில் அப்படியே திகைப்படையச் செய்வதைக் கண்டனர். நீர் உம்முடைய பிதாவுக்கடுத்தவைகளில் இருந்தாதீர். நீர் உம்முடைய தாயினிடத்தில், “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா?” என்று கூறி, வேதவாக்கியங்களை அவைகளினுடைய ஆவிக்குரிய பொருள்களின் மூலம் விளக்கினீர். 9 கர்த்தாவே, நாங்கள் எவ்வளவு பலவீனரும், நாங்கள் எவ்வளவு நலிவுற்றோருமாயிருக்கிறோமென்றும், நாங்கள் எப்படியாய் தவறு செய்யக் கூடியவர்களாயிருக்கிறோம் என்பதையும் நீர் அறிந்திருக்கிறபடியால், நீர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இன்றிரவு எங்களோடு வந்து, வேதவாக்கியங்களை எங்களுக்கு விளக்கித்தருமாறு நாங்கள் இப்பொழுது ஜெபிக்கிறோம். நான் உம்பேரில் சார்ந்திருந்து காத்துக்கொண்டிருக்கிறேன். நான் எப்போதாவது, எந்த நேரத்திலாவது என் சொந்த சிந்தனைகளை அல்லது சொந்த வியாக்கியானத்தை அல்லது சில சுயநல காரியங்களை கூறமுயன்றால், நான் அதை விளக்கிக் கூறிக்கொண்டிருக்கிற விதமே சரியானதாயிருக்கும் என்பது போன்று கூற தென்பட்டால், கர்த்தாவே, சிங்கங்கள் தானியேலைப் பின்தொடர்ந்து வந்தபோது, அவைகளின் வாயைக் கட்டினது போல…என்னுடைய வாயை அடைத்துப்போடும். நீர் இன்னமும் மாறாத தேவனாயிருக்கிறீர். 10 அது முழுமையாகவே…இருப்பதாக. நாங்கள் பரிசுத்த ஆவியின் பேரில் சார்ந்திருக்கையில், அவரே இந்தக் காரியங்களை எங்களுக்கு வெளிப்படுத்துவாராக. அவர் அவைகளை அப்பொழுது பேசும்போது, அந்தக் கேள்வியைக் கேட்டிருப்பவர் அதை ஏற்றுக் கொள்ளும்படி அவைகள் மிகவும் தெளிவானதாயிருக்கும். நான் எப்பொழுதும் விசுவாசித்து வந்ததற்கு அது மாறான பதிலாயிருக்குமானால், அப்பொழுது கர்த்தாவே, நான் புதியதான ஒன்றை, கர்த்தருடைய நல்ல ஒரு வழியை கண்டறிந்ததுள்ளதற்கு என்னுடைய இருதயமும் கூட மகிழ்வதாக. நீர், “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” என்றீர். 11 இப்பொழுது இந்த வேத போதனைக்குப் பின், நிச்சயமாகவே அநேக சிந்தனைகள் முதலியன எழும்பும். இப்பொழுது தேவனே இந்த எல்லா கேள்விகளுக்கும் மிகவும் இனிமையாய் தென்படும்படியாகவும், கனிவாக கேட்கப்பட்டுள்ள இந்த கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியானவர்தாமே கனிவாய், இனிமையாய் அவைகளுக்கு பதிலளிப்பாராக. நாங்கள் இதை தேவனுடைய மகிமைக்காக, தம்முடைய சபையை நிலைநிறுத்துவதற்காக இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 12 அநேக சமயங்களில் ஒரு சுய நல நோக்கங்களைக் கொண்ட எந்த காரியமும் அதனுடைய முழு சுவையையுமே பாழாக்கிவிடுகிறது. இப்பொழுது, இந்த வேதவாக்கியத்தின்படி கேட்கப்பட்டுள்ள கேள்விகள். 13 இப்பொழுது, நான் இன்றிரவு பேசும்போது சற்று ஊதல் சத்தமானது என் வாயிலிருந்து எழுப்பினால், அதற்குக் காரணம் எனக்கு ஒரு பல் இல்லை. நான் அதை உள்ளே சரியாக பொருத்தாவிட்டால், என்னால் பிரசங்கிக்க முடியாது. நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போது நான் மெதுவாக பேசுகிறேன்; நான் அதை வெளியே எடுத்துவிட்டபடியால், நான் பேசும்போது கிட்டத்தட்ட ஊதல் சத்தமே எழும்புகிறது. 14 திருமதி பில்லிகிரஹாம் அவர்கள் அவர் பேரிலான ஒரு சம்பவத்தைக் கூறினார்கள். அவர்கள் அவரை எப்போதும் கண்டதிலேயே மிகமோசமான கொந்தளித்துப்போடிருப்பதைக் கண்டது, அவர் முன்னால் பொருத்தி வைத்திருந்த ஒரு போலி பல்லை தொலைத்துவிட்டபோதேயாம். அவர் அதைத் தொலைத்து விட்டாராம், சரியாக அந்த நேரத்திலோ அவருக்கு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்தபடியால், அவரால் பேசமுடியவில்லையாம்…அந்தப் பல்லின் பின்னே ஒரு உறைப்போன்ற மூடி பொருத்தப்பட்டிருந்ததாம். ஆனால் அது இல்லாதபடியால் அவர் பேசும்போது, தன்னுடைய பல்லினூடாக “வ்வூயு, வ்வூயூ” என்ற ஊதல் சத்தத்தை எழும்பினாராம். அதன்பின்னர் அவர் முழங்காற்படியிட்டு, ஜெபித்து வியர்த்துப்போய், முடிவிலே தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் அவருடைய பாதவிரல்களின் மேல் உள்ள கால்சட்டை மடிப்பில் விழுந்திருந்ததை அவர்கள் கண்டுபிடித்துக் கொடுத்தார்கள் என்று திருமதி பில்லிகிரஹாம் கூறினார். அவர் தங்கியிருந்த உணவக விடுதியில் பணிபுரியும் பையன்களில் ஒருவன் அந்த போலிப் பல்லை கண்டுபிடித்துக் கொடுத்தானாம். திருமதி கிரஹாம் அவரைக் குறித்து இதைக் கூறினபோது, நான் அதை ஒரு சிறு காகிதத் துண்டில் எழுதி வைத்துக் கொண்டேன். நான் அதை இங்கு என்னுடைய வேதாகமத்தில் வைத்துள்ளேன் என்று நான் நினைக்கிறேன். 15 எனவே அது ஒருவிதமான…நாம் சற்று வயோதிகமடைந்து, முதுமையினால் தளர்வுறும்போது, உங்களுக்குத் தெரியும், இதை இழந்து விட வேண்டியதாயுள்ளது, அது மோசமாகிவிடுகிறது. எனவே நான்…நான் அங்கே பின்னால் சகோதரன் ராபர்ஸன் அவர்களோடிருந்தபோது, நான் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் காலை இந்த பல்லின் ஒரு பாகம் உடைந்து போய்விட, நான் அதை பொருத்தும்படிக்கு மருத்துவரிடம் அதைக்கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது. ஆகையால் கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. 16 இப்பொழுது நாம் இந்தக் கேள்விகளைப் பார்க்கப் போகிறோம், என்னால் கூடுமானால் அந்தக் கேள்விகள் ஒவ்வொன்றினூடாகவும் நான் பார்க்க முயற்சிக்கப் போகிறேன். சகோதரன் டோனி அவர்களே, தேவனுடைய கிருபையினால் நான் உங்களுடைய சொப்பனத்திற்கு வியாக்கியானத்தைப் பெற்றுள்ளேன், அது அற்புதமானதாயிருந்தது. நான் அதைக் காண மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அது ஒரு நல்ல வியாக்கியானமாயுள்ளது. அதாவது நான் அதை இங்கே வெளிப்படையாக கூறக் கூடாது என்று நான் நினைக்கிறேன், எனவே நீங்கள் அதை தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள்—நீங்கள்…நான் அதை அந்தவிதமாக கூற உள்ளேன். அவர் அன்றொரு இரவு என்னிடத்தில் கேட்டார், அதாவது அவர் ஒரு சொப்பனம் கண்டிருந்தார், எனவே நான் கர்த்தரிடத்திற்கு சென்று, அதன் பேரில் ஜெபிக்கும் வரையில், அது என்னவாயிருந்தது என்று என்னால் அவரிடத்தில் கூற முடியவில்லை. அதன்பின்னரே கர்த்தர் அதை எனக்கு வெளிப்படுத்தி, அதன் வியாக்கியானம் என்னவாயிருந்தது என்பதை என்னிடம் கூறினார். சகோதரன் டோனி, அது அற்புதமானதாயும், உங்களுக்கான நற்செய்தியாயுமுள்ளது. 17 இப்பொழுது, முதல் கேள்வியில், இப்பொழுது, எங்கிருந்து முதலில் துவங்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் அவை அனைத்துமே நல்ல கேள்விகளாகவே உள்ளன. ஆனால், இப்பொழுது, நாம் இதனை நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ள முயற்சிப்பதில்லை, நாம் அவைகளினூடாக பார்த்து பதில் கூற முடியவில்லையென்றாலும் சரி, நாம் அவைகளை ஞாயிற்றுக் கிழமை பார்த்து முடித்துவிடலாம். 51. மத்தேயு 25:46-ல் கூறப்பட்டுள்ள, “நித்திய ஆக்கினை” என்பதன் பொருள் என்ன என்பதை விளக்கிக் கூறவும். “ஆனால்…” அதுவே கேள்வியாயுள்ளது. 52. அதன்பின்னர், இரண்டாம் கேள்வி: “ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்” என்பது கிட்டத்தட்ட அவர்கள் தேவனுடைய சிந்தையிலிருந்து தள்ளப்படுவார்கள் என்பதைப் போன்றதாயுள்ளதா? 18 பரவாயில்லை, இப்பொழுது பரிசுத்த மத்தேயு இருபத்…25வது அதிகாரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள உங்களுடைய முதல் கேள்வியை எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுது நாம்…இப்பொழுது, நான் இவைகளை ஒருபோதும் ஆய்ந்து படித்திருக்கவில்லை, அங்கே பின்னால் இருந்தபோது அவைகளை சற்று கவனித்துப் பார்த்தேன், நான்—நான் அவைகளை எப்படி அறிந்துள்ளேனோ அதன்படி என்னால் முடிந்தளவு மிகச் சிறந்த முறையில் அவைகளுக்கு பதிலுரைக்க முயன்றுள்ளேன். என்னுடைய…நாம் ஆய்ந்துபடிக்கையில், நீங்கள் என்னோடு சேர்ந்து உங்களுடைய வேதாகமங்களை திருப்புங்கள். இப்பொழுது, நான் இதை மூல கிரேக்க வேத அகாரதியிலிருந்து எடுத்துப் படித்துக் காண்பிக்க விரும்பினேன், எனவே நீங்கள் அதனுடைய மூல மொழியில் எவ்வாறு உள்ளது என்பதை புரிந்து கொள்வீர்கள். நான்—நான் அதை விரும்புகிறேன். எனவே நாம் அதை மூல பாஷையான கிரேக்க மொழியிலும் மற்றதிலும் பார்ப்போம். இப்பொழுது இது ஒருவிதமாக மெதுவாக ஆய்ந்து பார்ப்பதுபோன்று இருக்கும், ஏனென்றால் நான் அதற்கான வேதவாக்கியங்களை எங்கெல்லாம் என்னால் கண்டறிய முடியுமோ அங்கெல்லாம் அவைகளை கண்டறிந்து அவைகளினுடைய இடத்தில் அவைகளைப் பொருத்த வேண்டும். சரி. 19 இப்பொழுது, எவரேனும் ஒரு வேதாகம ஆய்வினைக் கொண்டு கண்டறிய விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்பினால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நாம்…நாம் மூன்று அல்லது நான்கு பேரை இங்கே பின்னால் உடையவர்களாயிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் வேதத்தின் மூலம் ஆராய்ந்துப் பார்க்க விரும்பினால், சரி. சகோதரன் காக்ஸ் அவர்களே, நீங்கள் இங்கு வந்து, இந்த வேதாகமங்களை என்னிடத்திலிருந்து கொண்டு செல்வீர்களா? அது—அது உங்களுக்கு நன்மையானதாயிருக்கும், உங்களால் முடிந்தால்,…(அங்கு ஒன்று உள்ளது, நீங்கள் அப்படியே—உங்களுக்கு வேண்டுமானால், அங்குள்ள அநேக வேதாகமங்களையும் நீங்கள் கொண்டு செல்லுங்கள்.) எவருக்கேனும் ஒரு வேதாகமம் வேண்டுமானால், உங்களுடைய கரத்தை அப்படியே உயர்த்துங்கள், அந்தப் பையன் அவைகளை உங்களண்டைக்குச் சரியாக கொண்டு வருவான், பாருங்கள். நாம் இவைகளை ஒருமித்து ஆய்ந்துப் பார்க்க வேண்டும். அப்படியே… 20 இப்பொழுது, இந்த வாசிப்பின் பேரில், முந்தின அதிகாரங்களில்…எபிரெயப் புத்தகத்தின் முதல் ஏழு அதிகாரங்கள். இதைப் போதித்தப் பிறகு, உண்மையாகவே, இந்த பாடங்களை பதிவுசெய்கிற இந்தப் பையன் எடுத்துக் கொண்டு, அதாவது சகோதரன் மெர்சியர் மற்றும் சகோதரன் கோட் அவைகளை வைத்திருக்கிறார்கள், இப்பொழுது அவைகளை புத்தக வடிவில் வெளியிட ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை வைத்துள்ளனர். இப்பொழுது…நாம் பாதியளவு கூட அலசி ஆராய்ந்துப் பார்த்திருக்கவில்லை, நாம் வெறுமென மேலோட்டமாகவே அலசிப் பார்த்துள்ளோம். அவர்களோ அவைகளை எழுத்துவடிவில் அமைத்து…அவைகளிலிருந்து தங்கக் கட்டிகளை எடுத்து…அந்தத் தங்கக் கட்டிகளை, அப்படியே அதாவது எபிரெய போதனையின் தங்கங்கட்டிகள் சிலவற்றை மெருகேற்றியிருக்கிறார்கள். சகோதரன் மெர்சியர் அவர்கள் சீக்கிரத்தில் அவைகளை எழுத்து வடிவில் அச்சிட்டு, எவர்களுக்கு அவைகளை தேவைப்படுகிறதோ அவர்களுக்கு அவைகளைத் தருவார். 21 இப்பொழுது இங்குள்ள இதில், அது உள்ளே கொண்டு வருகிற…உங்களால்…சுவிசேஷ சபைக்குள்…அதினூடாக செல்ல முடியாது, இது ஒரு சுவிசேஷ சபையாயுள்ளது. அநேக ஜனங்களில் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் எழும்பாமல் நீங்கள் ஒரு—ஒரு உபதேசத்தினூடாகச் செல்ல முடியாது. நீங்கள் அவ்வாறுதான் செல்ல வேண்டும். இப்பொழுது நான் ஒரு போதகர் என்ற ஸ்தானத்திற்கு தூரமானவாய் உள்ளேன், மேலும் வேதாகமத்தை தெளிவாக பொருள் கொண்டு விளக்கும் ஒருவனே அல்ல. ஆனால் நான் எந்தக் காரியத்தையும் கூறுவதற்கோ அல்லது எந்தக் காரியத்தையும் செய்வதற்கோ கூட நான் முதலில்—முதலில் கேட்டறிந்து அல்லது அதற்கான என்னுடைய மிகச் சிறந்த காரியத்தை கண்டறிய முயற்சிக்காமலோ செய்ய ஒருபோதும் முயற்சித்ததேயில்லை. 22 கடந்த இரவு ஒரு அருமையான சகோதரனால் இது என்னிடத்தில் கேட்கப்பட்டது. அவர், “சகோதரன் பிரான்ஹாம், நீர்—நீர் உம்மை எங்குமே சிக்க வைத்துக்கொள்ளமாட்டீர் என்று சகோதரன் ஸ்டூவர்ட் ஒரு முறைக் கூறினார். பாருங்கள், அதாவது அதிலிருந்து வெளியேற அல்லது அதிலிருந்து விலகிச் செல்ல நீர் எப்பொழுதுமே ஏதோ ஒரு வழியை உடையவராயிருப்பீராமே” என்றார். 23 அப்பொழுது நான், “நல்லது, அதற்குக் காரணம், நான் எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன்பு நான் எப்பொழுதுமே சிந்திக்க முற்படுகிறேன். புரிகிறதா? ஆகையால் ஜனங்கள் என்னிடத்தில் கேட்டால், அப்பொழுது என்னுடைய சிந்தனைகள் என்னவாயிருந்தன என்பதை என்னால் அவர்களுக்குக் கூற முடியும். புரிகிறதா?” என்றேன். ஆனால் அது நீங்கள் சரியாக சிந்தித்தால் அவ்வாறு இருக்கும். நீங்கள் எந்தக் காரியத்தையாவது செய்வதற்கு முன்பு, தேவன் உங்களை எடுத்துக் கொள்ள வேண்டிய பக்கமாக செல்ல முயற்சிக்க வேண்டும், அப்பொழுது அது உண்மையாகவே சிக்கப்படமாட்டாது. 24 ஆகாப் எலியாவை சிக்க வைக்க முயன்ற அந்த நேரத்தை உங்களால் யூகித்துப் பார்க்க முடியவில்லையா? பரிசேயர்கள் இயேசுவை சிக்க வைக்க முயன்ற அந்த நேரத்தை உங்களால் யூகித்துப் பார்க்க முடிகிறதா? பாருங்கள், அவர்—அவர் உடனே பதிலை உடையவராயிருந்தார், ஏனென்றால் அவர் செய்த ஒவ்வொரு காரியமும், அதாவது அவர் அதை தேவ சித்தத்தின் மூலமே செய்தார், அவர்…அந்தவிதமாகவே அவரால்—அவரால் அதைச் செய்ய முடிந்தது. இப்பொழுது, அந்தவிதமாகவே நாம் இதனையும் தேவ சித்தத்தையும் கொண்டே செய்ய விரும்புகிறோம். இப்பொழுது கேட்கப்பட்டுள்ள கேள்வியோ, நாம் இந்தக் கேள்வியை எடுத்து வைத்துக் கொள்வோம்: மத்தேயு 25:46—ல் உள்ள “நித்திய ஆக்கினை” என்பது என்ன பொருள்படுகிறது என்று விளக்கவும். 25 இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது எல்லோரும் மத்தேயு 25:46—ஐப் பாருங்கள் அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினியயை அடையவும்… 26 இப்பொழுது, “என்ன…என்று விளக்கிக் கூறவும்” என்பதே கேள்வியாயுள்ளது. இப்பொழுது சதாக்காலம் என்ற வார்த்தை “என்றென்றும்” மற்றும் என்றென்றும், “ஒரு குறிப்பிட்ட கால அளவு” என்பதிலிருந்து வருகிற வார்த்தையாயுள்ளது. என்றென்றும் என்பதோ, “அதிகப்படியான காலம்” என்று மட்டுமே பொருள்படுகிறது. இப்பொழுது நீங்கள் வாசிப்பீர்களேயானால்…இந்தக் கேள்விகளை யார் எழுதினது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இந்தக் கேள்விகளின் மேல் யார் என்று அவர்களுக்குடைய பெயரை எழுதவில்லை; அது இருக்க வேண்டியதில்லை, எனக்கு அவைகள் வேண்டியதில்லை, பாருங்கள். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும்…(இப்பொழுது கவனியுங்கள், அதுதான் துன்மார்க்கர்) 27 இப்பொழுது, அருமையான—அருமையான நபர் இந்த கேள்வியைக் கேட்டுள்ளார், அப்படியே அதனுடைய மீதி பாகத்தைப் படியுங்கள்: …நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள். 28 துன்மார்க்கரோ நித்திய ஆக்கினையை அடைவார்கள்(ஒரு குறிப்பிட்ட கால நேரம்), ஆனால் நீதிமானோ நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான். நீங்கள் நித்திய ஆக்கினையை ஒரு போதும் கண்டறியமாட்டீர்கள், அவ்வாறு இருக்கவும் முடியாது. பாருங்கள், அவர்கள் நித்திய ஆக்கினையைப் பெற்றுக் கொள்வார்களானால், அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டால், அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். பாருங்கள், அது அவ்வாறிருக்க முடியாது. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், கேட்கப்பட்டுள்ள கேள்வியிலேயே…பதில்களும் தானே உள்ளன. புரிகிறதா? அந்தப்படி,… இப்பொழுது கவனியுங்கள், நான் இங்கே இதற்கு முன்பு உள்ள வசனத்தை படிக்கவுள்ளேன். அப்பொழுது அவர்களும்… 29 20-ல்…44-வது வசனம்: அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும்… காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய (என்றென்றுமான) ஆக்கினையை அடையவும், (அது துன்மார்க்கர்)…நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். 30 வித்தியாசம் புரிகிறதா? துன்மார்கர் என்றென்றுமான ஆக்கினையை அடைவார்கள், ஆனால் என்றென்றும் என்பது “ஒரு குறிப்பிட்ட கால அளவு.” இப்பொழுது இதுவும் அதே மாதிரியான கால அளவைப் பொறுத்ததாயிருந்தால், இது இவ்வாறு எழுதப்பட்டிருந்திருக்கும். “இவர்கள் குறிப்பிட்ட கால அளவு ஆக்கினையை அடைவார்கள் என்றும், மற்றவர் குறிப்பிட்ட கால அளவு நித்திய ஜீவனை உடடையவர்களாயிருப்பார்கள் என்றிருக்கும்.” புரிகிறதா? இல்லையென்றால் “இவர்கள் நித்திய ஆக்கினையை அடைவார்கள் என்றும், மற்றவர்கள் நித்திய ஜீவனை அடைவார்கள் என்றும் இருக்கும்.” பாருங்கள், நித்திய ஆக்கினை உண்டு என்றால், என்றென்றும், தண்டிக்கப்படுவதென்பது, நித்தியமான…அப்பொழுது அவன் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும், ஒரே ஒரு நித்திய ஜீவன் தான் உண்டு, அது தேவனிடத்திலிருந்து வருகிறது. துவக்கம் என்ற ஒன்று இல்லாததற்கு முடிவேக் கிடையாது. துவக்கம் என்ற ஒன்று உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு முடிவு உண்டு. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? 31 இப்பொழுது, வேதவாக்கியம் தானே அந்த அருமையான நபருக்கு…பதிலளித்துவிட்டது…இப்பொழுது நீங்கள் அதை மூல வேதாகம கிரேக்க அகராதியில் எடுத்துப் பார்த்தால், “இவர்கள் குறிப்பிட்டக் கால ஆக்கினையை அடைவார்கள், அதாவது பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட காலம் அக்கினிக் கடலில் ஆக்கினை அடைவார்கள்” என்றே உள்ளது. இப்பொழுது a—i—n—i—o—n என்ற கிரேக்க வார்த்தையின் பொருள், “ஒரு குறிப்பிட்ட கால ஆக்கினை” என்பதாகும். கிரேக்க வேத அகராதியில் இங்கே, “குறிப்பிட்ட கால ஆக்கினை” அல்லது “ஆக்கினைக் காலம்” என்றே உள்ளது. பாருங்கள், “அவர்கள் ஒரு குறிப்பிட்ட கால ஆக்கினியயை அடைவார்கள்.” அந்த வார்த்தை a—i—n—i—o—n எயர்ன் என்று உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. எயர்ன் என்ற வார்த்தையின் பொருள் “காலங்கள், ஒரு காலம், ஒரு குறிப்பிடப்பட்டக் காலம்” என்பதாகும். அதன்பின்னர் இங்கே அதை ஆங்கில மொழிபெயர்ப்பில் மீண்டும் எடுத்துப் பார்த்தால், என்றென்றும் என்று உள்ளதோ “ஒரு குறிப்பிட்ட காலம்” என்பதாகும். பாருங்கள், அது கிரேக்க மொழியிலிருந்து, “ஒரு குறிப்பிட்ட காலம்” என்ற பொருள்கொண்ட வார்த்தையிலிருந்து வருகிறது. அந்த வார்த்தை எயர்ன், இல்லை எ—ய—ர்—ன், எயர்ன் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள், “ஒரு குறிப்பிட்ட கால ஆக்கினை” என்பதாயுள்ளது. 32 ஆனால் அதன்பின்னர் மற்றவர்களைப் பற்றி வாசிக்கும் போது, “ஆனால் இவர்கள் நித்தியத்தை அடைவார்கள்” என்று உள்ளது. அந்த ஒரு வித்தியாசம் தான் உள்ளது. பாருங்கள், நித்திய ஜீவன். “நித்தியம்” என்ற வார்த்தையிலிருந்தே நித்தியம் எனபது உண்டாகிறது. நித்தியத்திற்கு துவக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது. அது என்றென்றுமான முடிவில்லாதது. இப்பொழுது அதற்கு பதில் கூற வேண்டும், பாருங்கள், ஏனென்றால் நீங்கள் அந்த வேதவாக்கியத்தை உண்மையாகவே கூர்ந்து கவனிப்பீர்களேயானால், நீங்கள் புரிந்து கொள்வீர்கள். 33 “அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ…” துன்மார்க்கர் நித்திய ஆக்கினையை அடைவார்கள், ஒரு குறிப்பிட்டக் காலம் தண்டிக்கப்படுவர்: ஒருகால் கோடா கோடி ஆண்டுகளாய் இருக்கலாம், எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் உங்களுடைய பாவங்களுக்காக நிச்சயமாக தண்டிக்கப்படுவீர்கள். ஆனால் நிச்சயமாகவே பாவம் என்பதற்கு ஒரு துவக்கம் இருந்ததுபோல, பாவத்திற்கு ஒரு முடிவும் உண்டு. ஆக்கினைக்கு ஒரு துவக்கமிருந்தது, ஆக்கினைக்கு ஒரு முடிவும் உண்டு. நகரம் பிசாசிற்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது. புரிகிறதா? சரி. இப்பொழுது நான் இங்கே மற்றொன்றை எடுத்து, இன்னும் ஒரு சில நிமிடங்களுக்கு அதற்கு பதில் கூற வேண்டும், அது அழகான ஒன்று, அதுவும் இதற்குள்ளாக இணைகிறது. இப்பொழுது, ஆனால் இங்கே இவைகள்: “ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்” என்பது ஏறக்குறைய தேவனுடைய சிந்தையிலிருந்து அவர்கள் தள்ளப்படுவது போன்றதாயுள்ளதா? 34 இல்லை, அது அவ்விதமாயிருக்காது. இப்பொழுது நீங்கள் இங்கே கலியாண விருந்தினை குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது இங்கே கேட்கப்பட்டிருந்தோ, “ராஜ்யத்தின் புத்திரர்” என்பதாகும். ராஜ்யத்தின் புத்திரர் யூதர்களாயிருக்கிறார்கள், அவர்கள் புறம்பான இருளில் தள்ளப்படுகின்றனர். அவர்கள்—அவர்கள் புறம்பான இருளுக்குள்ளாக தள்ளப்பட்டு, அவர்கள் அழுகையும், புலம்பலும் பற்கடிப்புமான நேரத்தினூடாக சென்று விட்டனர். அவர்கள் புறம்பான இருளுக்குள் தள்ளப்பட்டனர், ஏனென்றால் அது உங்களுக்கும், எனக்கு மனந்திரும்ப ஒரு தவனை கொடுப்பதற்காகவேயாகும், ஆனாலும் அவர்கள் தேவனுடைய சிந்தையிலிருந்து ஒரு போதும் தள்ளப்படவில்லை. அவர் இஸ்ரவேலரை ஒருபோதும் மறப்பதில்லை. எந்த வேதவாசகருமே இஸ்ரவேலர், “ராஜ்யத்தின் புத்திரர்” என்று குறிப்பிட்டுள்ளதை அறிவர். பாருங்கள், அது ராஜ்யமாய், வாக்குத்தத்தமாய் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறினால், தேவன் அந்த தேசத்தோடு ஈடுபடுதல், அவர் இஸ்ரவேலரோடு ஈடுபட்டபோது, அது ராஜ்யத்தின் புத்திரராம். 35 இப்பொழுது, உங்களுக்கு நினைவிருக்கும், அவர் அங்கே, “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு முடிவிலே வந்து ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்” என்று ஒரு இடத்தில் கூறினார். பாருங்கள், அந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபும் ராஜ்யத்தில் இருப்பார்கள். அவர்கள், அவர்கள் ராஜ்யத்தினுடைய ஆசீர்வாதமான ஜனங்களாயிருந்தனர். ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளில் தள்ளப்படுவார்கள். 36 இப்பொழுது, இங்கே உள்ள மணவாளனுக்கு எங்கிருந்து குறிப்பு வருகிறது. மணவாளன் வரும் போது, அவர்கள்…ஐந்து கன்னிகைகள் ஆண்டவரை சந்திக்கப் புறப்பட்டுச் சென்றனர், ஆனால் அவர்கள் தங்கள் தீவட்டிகளோடு எண்ணெய்யை எடுத்துக் கொண்டு போகவில்லை. மற்ற ஐந்து பேர் தங்களுடைய தீவட்டிகளோடு எண்ணெயையும் கொண்டு சென்றனர். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், யூதர்களோடு புறஜாதிகளும், இருவருமே புறக்கணிக்கப்படுகிறபடியால், அது ஒரு அழகான காட்சியாயுள்ளது. அதை சிந்தையில் வைத்துக் கொள்ளுங்கள், எல்லா நேரத்திலுமே மூன்று வகுப்பினைக் கொண்ட ஜனங்கள் இருந்து வருகின்றனர்: யூதர், புறஜாதிகள் (சம்பிரதாயமான),…; யூதர், புறஜாதிகள் மற்றும் சபை. நீங்கள் அவைகளை குழப்பிக் கொண்டால், நீங்கள் வெளிப்பாட்டைப் பெறும்போது, நீங்கள் நிச்சயமாகவே தொல்லைக்குள்ளாவீர்கள். நீங்கள்… 37 ஒரு முறை திரு.போஹனான் என்னிடத்தில் கூறியது போலாகும், அவர், “பில்லி, வெளிப்படுத்தின விசேஷத்தை வாசிக்க முயற்சிக்கும் எவருக்கும் தீக்கனவுகள் உண்டாகும். ஏன் தெரியுமா” என்று கூறி, தொடர்ந்து அவர், “இங்கே மணவாட்டி பூமியில் இருக்கிறாள், வலுசர்ப்பமானது தன்னுடைய வாயிலிருந்து நதி போன்ற வெள்ளத்தை ஊற்றி அவளோடு யுத்தம்பண்ணப் போயிற்று” என்றார். மேலும், “அப்பொழுது அதே சமயத்தில் அந்த மணவாட்டி இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேராக நின்று கொண்டிருக்கிறாள்” (யோகோவா சாட்சிக்காரரின் உபதேசம்) “சீனாய் மலையின் மேல். அதே சமயத்தில் மணவாட்டி பரலோகத்தில் இருக்கிறாள்” என்றார். இல்லை, இல்லை, நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். 38 மூன்று வகுப்பினைக் கொண்ட ஜனங்களே உள்ளனர். பாருங்கள், அது, புறக்கணிக்கப்பட்ட யூதர், உறங்கிக்கொண்டிருக்கும் கன்னிகை அந்த வெள்ளத்தை…அது ஸ்திரியினுடைய வித்தல்ல, அது வலுசர்ப்பம் தன்னுடைய வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை ஊற்றின ஸ்திரியினுடைய சந்ததியான மற்றவர்கள்…வெளிப்படுத்தின விசேஷம் 11. ஆகையால் உண்மையாகவே, இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் யூதர்கள் முற்றிலும் மணவாட்டியல்ல, அவர்கள் மீதமுள்ள யூத சபை. யோகோவா சாட்சிக்காரரின் உபதேசமே அவர்களை மணவாட்டியாக பொருத்துகிறது, நீங்கள் அதை எப்படி நிரூபிக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை, ஏனென்றால் அது மணவாட்டியல்ல. 39 அங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் நீங்கள் கவனிப்பீர்களேயானால், அதில், “அவர்கள் கற்புள்ளவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் அண்ணகர்களாயிருக்கிறார்கள். ஒரு அண்ணகன் என்னவாயிருந்தான்? அவர்கள்…ராணியைக் காவல்காத்த ஆலயக் காவலர்களாக அந்த அண்ணகர்கள் இருந்தனர், ஏனென்றால் அவர்கள்…அவர்கள் மனிதனால் அண்ணகர்களாக்கப்பட்டனர். அவர்கள்…அதாவது, “அவர்கள் ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதிருந்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் ஆலய அண்ணகராயிருந்தனர். அது தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களிலிருந்து தேவன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்டவரை தேர்ந்தெடுத்திருந்தார். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால்,…நாம் ஒரு விநாடியில் அதை புரிந்து கொள்ள முடியுமானால், அது உங்களுடைய மனதில் அதை ஒரு விதமாக தீர்த்து வைக்கும், நீங்கள் உண்மையாகவே… 40 நாம் வெளிப்படுத்தின விசேஷவும் 7-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம், அதில் என்னக் கூறப்பட்டுள்ளது என்பதை…இப்பொழுது நாம் இங்கே கண்டறிவோம். அது ஒரு அழகான காரியமாயுள்ளது: இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்களின் நின்று,…(இப்பொழுது, இது எசேக்கியல் 9-ம் அதிகாரத்திற்கு இணையான சம்பவமாயிருக்கிறது, அங்கே அவன் யூதரின் அழிவுகளைக் கண்டான். இங்கேயோ இவன் புறஜாதிகளின் அழிவுகளை வெளிப்படுத்தின விசேஷம், 7-ம் அதிகாரத்தில் காண்கிறான்)…பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, (காற்று என்பது “யுத்தம் மற்றும் சண்டை” என்பதையேப் பொருட்படுத்துகிறது) பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். (அது யுத்தத்தை “நிறுத்தி வைத்தல்”) 41 ஓ, நாம் இந்தக் கேள்வியின் பேரில் விவரமாகப் பார்க்கும்படி நமக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். அது நிகழ்ந்த போது…அங்குதான் ரசல் குழப்பமடைந்துள்ளார். இது வருவதைக் கண்டதாக ரசல் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். அவர், “அது கர்த்தராகிய இயேசுவின் வருகையாயிருக்கும்” என்றும், அது சபையின் முத்திரையிடுதலாயிருந்தது என்பதை அறியாமல் அவ்வாறு தீர்க்கதரிசமுரைத்துள்ளார். பார்த்தீர்களா? 42 எப்படி உலகப் போர்…முதல் உலகப் போர்…என்று அவர்கள் வியப்புறுகின்றனர். பாருங்கள், அது நவம்பர் பதினோராம் மாதம், பகல் பதினோரு மணிக்கு, பதினோராம் மாதம், பதினோராம் நாள், பதினோராம் மணி வேளையில் நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு உடனடியாக சபைக்கு இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானமும், பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் வெளிப்படுத்தப்பட்டது. சரியாக அதற்கு பின்னரே உடனே வெளிப்படுத்தப்பட்டது. 43 நீங்கள் அதை வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் எடுத்துப் பார்த்தால், எப்படி நாம் பிலெதெல்பியா சபைக் காலத்திற்கும், லவோதிக்கேயா சபைக் காலத்திற்கும் இடையே உள்ள காலத்தை ஒன்று சேர்ந்து இணைத்தோம். மெத்தோடிஸ்டுகள் பிலதெல்பியா சபைக் காலத்தை உடையவர்களாயிருந்தனர், சகோதரசிநேகம். கடைசி சபைக் காலமோ லவோதிக்கேயா சபைக்காலமாய் இருந்தது. அது வெதுவெதுப்பான காலமாயிருந்தது. அவர் அங்கே, “(திறந்த வாசலை) உனக்கு முன்பாக ஒரு வாசலை வைத்திருக்கிறேன்” என்றார். திறந்த வாசல்! நீங்கள் அந்த வேதவாக்கியங்களை ஆராய்ந்துப் பார்த்தால், உங்களுக்கு சரியாக காண்பிக்குபடிக்கு, அங்கே ஒரு இடத்திற்குள்ளா சரியாக அது முழு செய்தியையும் இணைக்கும். 44 கவனியுங்கள்! இங்கே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பேரில் இருந்து வருகிற ஞானஸ்நானம் மற்றும் உள்ள ஒவ்வொரு காரியமும், (நாம் அதற்குள் நேரடியாக ஆய்ந்து பார்க்க வேண்டும்) அது முற்றிலும் ஒரு கத்தோலிக்கக் கோட்பாடாயிருந்தேயன்றி, அது ஒருபோதும் ஒரு கிறிஸ்தவ உபதேசமாயிருக்கவில்லை. இல்லை ஐயா. நான் வெறுமென…நாம் இன்றிரவு கிரேக்க வேதாகம அகராதியோடு கூட இங்கே அதற்குள்ளாகச் சென்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். புரிகிறதா? ஆம் ஐயா, சரித்திரத்தினூடாகவுங் கூடச் சென்றுப் பார்க்க வேண்டும். வேதாகமத்தில் அந்தவிதமாக எவருமே, எப்போதுமே ஒருபோதும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கவில்லை, அதாவது வேதாகமத்தில் முதல் ஆறு நூறு ஆண்டுகளாக அவ்வாறு இல்லை. அது கத்தோலிக்கருடைய சொந்தக் கோட்பாடு என்பதை என்னால் இங்கே சரியாக நிரூபிக்க முடியும், அவர்கள் தான் அதை, அந்த தெளித்தலையும், ஊற்றுதலையும் துவங்கினவர்களாயிருக்கிறார்கள். 45 அவர்கள் அங்கிருந்து வெளியே வந்து வெஸ்லியர்களின் சபைக்குள்ளாக, மெத்தோடிஸ்டு சபைக்கும், மெத்தோடிஸ்டுகள் அதை பாப்டிஸ்டுக்கும், பாப்டிஸ்டு அதை அப்படியே கொண்டு வந்தனர், அது இன்னமும் ஒரு கள்ள உபதேசமாய் உள்ளதே! வேதத்திற்கு திரும்பி வந்து, “நீ உயிருள்ளவென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” என்று வேதம் உரைத்துள்ளதை உங்களுக்கு நிரூபிக்க முடியும். அது முற்றிலும் உண்மை. அவர்கள்… 46 அவர்கள் அவருடைய நாமத்தை ஞானஸ்நானத்தில் இருளின் காலம் வரையில், நான்காம் காலம்…சபைக்காலம், பெர்கமு சபைக் காலம் வரை பயன்படுத்துவார்கள் என்று வேதம் போதித்துள்ளது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அவர் இருளின் காலங்களை ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளில், ஒவ்வொன்றையுமே கூறியுள்ளார், அவர், “உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுமதலியாமல்” என்றார். 47 அது அங்கு அந்த மற்றொரு காலத்திற்கு, கத்தோலிக்க காலத்திற்கு வந்தபோது, அவர், “நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்! நீ என் நாமத்தை மறுதலித்துவிட்டாய்” என்றார். அங்குத்தான் காரியம். புரிகிறதா? அது அப்படியே எல்லாவற்றையும் ஒரு பெரிய அழகான காட்சியாய் ஒன்று சேர்ந்து முழு வேதாகமத்திலும் இணைக்கிறது. 48 இப்பொழுது இதைக் கவனியுங்கள்: …நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் வானத்திலிருந்து ஏறிவரக் கண்டேன்;…(முத்திரை) 49 இப்பொழுது, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்றால் என்ன? இப்பொழுது, ஏழாம் நாள் ஆசரிப்புக்கார சகோதரராகிய நீங்களோ, “ஓய்வு நாளைக் கடை பிடித்தல்” என்று கூறப் போகிறீர்கள். நீங்கள் அதை எனக்கு வேதத்தில் காண்பிக்க வேண்டும். அது அங்கே இல்லை. எந்த ஒரு இடத்திலும் அவ்வாறு அது கூறப்படவில்லை…அது முத்திரையாயுள்ளது… 50 நீங்கள் எபேசியர் 4:30-ஐ வாசிப்பீர்களேயானால், நீங்கள் உடனே ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்ன என்பதை கண்டறிவீர்கள். எபேசியர் 4:30, “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறுகிறது. அடுத்த எழுப்புதல் வரை என்று அல்ல, ஆனால் அது பெற்றுள்ள நித்திய பாதுகாப்பு (ஊ—ஊ). “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.” எபேசியர் 4:30 அதைக் கூறவில்லையா என்று பாருங்கள், அதன்பின்னர் உங்களுடைய வேதாகம ஓரக்குறிப்பு வாசிப்புகளினூடக உள்ள வேதவாக்கியங்களினூடாக சென்று அதைக் கண்டறியுங்கள். இப்பொழுது, “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையை உடையவர்களாயிருத்தல்.” 51 இப்பொழுது, முதலாம் உலகப் போர் வரையிலும் பரிசுத்த ஆவி என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாக கற்பிக்கப்படவில்லை. நாம் நம்முடைய—நம்முடைய நாற்பது வருட பொன்விழாவினை இல்லை நாற்பதாவது வருட பெரு விழாவினை கொண்டாடிவிட்டோம். …அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். (இப்பொழுது நீங்கள் உங்களுடைய “புத்திரர்” என்ற கேள்வியண்டைக்கே வந்து கொண்டிருக்கிறீர்கள், பாருங்கள்) (சேதப்படுத்தாதே, பூமியை அழித்துப் போடாதே, எந்த அணு குண்டும் வெடிக்க அனுமதிக்காதே, நமது தேவனுடைய ஊழியக்காரர் முத்திரையிடப்படுகின்ற வரையில் ஒரு காரியத்தையும் முழுமையாக செய்ய வேண்டாம்) 52 இப்பொழுது, நாம் பின்னோக்கி ஆராய்ந்து பார்க்கக் கூடுமானால், உலகப் போரின் வீழ்ச்சி என்ற புத்தகத்தின் தொகுதி இரண்டில், அந்த—அந்த நிகழ்வு எப்படி நடந்தது என்று பார்ப்போமேயானால், தளபதி ஆலன்பி எருசலேமின் எல்லையைப் பிடிக்கும் வரை சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அவன் இங்கிலாந்தின் இராஜாவிற்கு தந்தி அனுப்பி, “நான் அந்த நகரத்தின் புனிதத்துவத்தின் நிமித்தமாக நான் அதைச் சுட்டெரித்துப் போட விரும்பவில்லை” என்றான். மேலும், அவன், “நான் என்ன செய்யலாம்?” என்று கேட்டான். 53 அதற்கு அவனோ, “ஜெபி” என்றான். 54 அவன் அதன் மீது மீண்டும் விமானத்தில் பறந்து வந்தான், அவர்கள் வந்தபோது, இவர்களோ, “ஆலன்பி வந்து கொண்டிருக்கிறான்” என்றனர். அங்கே முகமதியர்கள் இருந்தனர், அவனோ, “அல்ஹா வந்து கொண்டிருக்கிறார்” என்றே எண்ணிக் கொண்டான். எனவே அவர்கள் வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டு சரணடைந்துவிட்டனர். அப்பொழுது ஆலன்பி எருசலேமிற்கு பவனிவந்து, எந்த ஒரு துப்பாக்கிச் சூடுமன்றி தீர்க்கதரிசனங்களின்படி அதைக் கைப்பற்றினான். அது உண்மை, பின்னர் அதை யூதர்களுக்கு திரும்பக் கொடுத்துவிட்டான். 55 அதன்பின்னர் அவர்கள் யூதர்களை துன்புறுத்த ஒரு ஹிட்டவரை எழுப்ப, அவர்களையோ அவர்கள் உலகம் முழுவதிலும் ஓடச் செய்தனர். 56 வேதமோ, “அவர்களை கழுகின் செட்டைகளின் மேல் சுமந்து வருவேன்” என்று அவர் கூறினார் என்று உரைத்துள்ளது. அவர்கள் திரும்பி வரத் துவங்கினபோது,…லைப் என்ற நாளிதழ் ஒரு சில வாரங்களுக்கு முன் அவர்களைக் குறித்து வெளியிட்டது, அதாவது அவர்கள் இலட்சக்கணக்கானவர்களை எருசலேமிற்குள் கொண்டுவந்தனர் என்றும், அவர்கள் சென்று தங்களுடைய முதியவர்களை தங்களுடைய முதுகின் மேல் சுமந்து வந்தனர் என்றும் வெளியிட்டிருந்தது. அவர்கள் பேட்டி காணப்பட்டனர். நான் அதைக் குறித்த எல்லாவற்றையும் திரைப்படமாக வைத்துள்ளேன். அவன் கூறினான்…அங்கே தாவீதின் நான்கு நட்சத்திரக் கொடி தொங்கிக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப் பழமையான கொடி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக பறந்துக் கொண்டிருக்கிறது. 57 இயேசு, “அத்திமரத்திலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது என்றும், இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்றும்” கூறினார். 58 இங்கே அவர்கள் அந்த முதியவர்களின் கொண்டு வந்துக் கொண்டிருந்தபோது, “எதற்காக இங்கு வருகிறீர்கள்? நீங்கள் உங்களுடைய தாய் நாட்டில் மரிப்பதற்காகவா திரும்பி வந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்க்கப்பட்டனர். 59 அப்பொழுது அவர்களோ, “இல்லை, நாங்கள் மேசியாவைக் காண் வந்திருக்கிறோம்” என்றனர். 60 சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நாம் வாசலருகே இருக்கிறோம்! அப்பாலே அங்கு அந்த ஊழியக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இங்குள்ள இந்த யூதக் கூட்டமோ, அவர்களால் கூடுமானால் உங்களுடைய போலிப் பல்லைக் கூட உங்களிடமிருந்து எடுத்து ஏமாற்றி விடுவார்கள். எனவே இந்த யூதர்களைக் குறித்து அவர் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நியாயப் பிரமாணங்களையும் மற்றவைகளை கடைபிடித்துக் கொண்டு அங்குள்ளவர்கள், ஒரு மேசியா இருந்தார் என்பதைக் கூட ஒருபோதும் அறியாதிருக்கிறார்கள். 61 சகோதரன்…ஸ்டாக்லோம் என்ற இடத்திலே சகோதரன் பெட்ரூஸ் பத்து இலட்சம் புதிய ஏற்பாடுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அவர்களோ அவைகளைப் பெற்றுக் கொண்டு, அவைகளை வாசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், “நல்லது, இது மேசியாவாயிருந்தால், அவர் ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தைச் செய்ய நாங்கள் காணட்டும், அப்பொழுது நாங்கள் அவரை விசுவாசிப்போம்” என்று கூறினர். 62 என்னுடைய ஊழியத்திற்கான என்ன ஒரு அமைப்பு! எருசலேமில் உள்ள வாசல்களில் உள்ளே நுழைய எனக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தபோது, அதற்குள்ளாக செல்ல, அப்பொழுது நான் எகிப்தில் உள்ள கெய்ரோவில் இருந்தேன். அப்பொழுது நான் அங்கு நெடுக நடந்து சென்று கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர், “இப்பொழுது போகாதே” என்றார். 63 அப்பொழுது நான், “அது என்னுடைய வெறுமென கற்பனையாயிருந்திருக்கலாம். என்னுடைய பயணச்சீட்டு கட்டணம் செலுத்தி வாங்கப்பட்டுவிட்டது, நானோ என்னுடைய பாதையில் இருக்கிறேன். அங்கிருந்தும் ஒரு மனிதன் என்னை சந்திக்க வருகிறார், முழு கூட்டமும், பள்ளிகள் முதலியன ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டனவே” என்று எண்ணினேன். 64 நான் சற்று தூரம் நடந்து சென்றேன், அப்பொழுது ஆவியானவர், “போகாதே! நீ போக வேண்டாம்” என்றார். 65 அப்பொழுது நான் பயணச் சீட்டு முகவரிடம் திரும்பிச் சென்று, “நான் இந்த பயணச்சீட்டை ரத்து செய்கிறேன். நான் கீரிஸில் உள்ள ஏதென்ஸுக்கும், மார்ஸ் மேடைக்கும் செல்ல வேண்டும்” என்று கூறினேன். 66 அதற்கு அவரோ, “பரவாயில்லை, ஐயா, உங்களுடைய பயணச் சீட்டு எருசலேமிற்கான் அழைப்பாயுள்ளதே” என்றார். 67 அப்பொழுது நானோ, “நான் எருசலேமிற்கு போவதற்குப் பதிலாக ஏதென்ஸிற்குப் போக விரும்புகிறேன்” என்றேன். பரிசுத்த ஆவியானவர் காத்துக் கொண்டிருக்கிறார், அந்த வேளையானது இன்னும் வரவில்லை. இது சரியான வேளை அல்ல. 68 கவனியுங்கள்: …நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும்… நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும்…சேதப்படுத்தாதிருங்கள் என்று மகாசத்தமிட்டுக் கூப்பிட்டான். (அது பரிசுத்த ஆவியின் முத்திரை என்பதை எவருமே அறிவர்; கவனியுங்கள்) முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; (இப்பொழுது, அவர்கள் யூதர்களாயில்லையா; இதைக் கவனியுங்கள்) இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் (அவர்களில் ஒரு புறஜாதியானும் இல்லை. அது கடைசி காலம்) 69 கவனியுங்கள்! யூதா கோத்திரம், பன்னீராயிரம், ரூபன் கோத்திரம், பன்னீராயிரம்; தொடர்ந்து கீழே, காத், பன்னீராயிரம்; நப்தலி, அதனைத் தொடர்ந்து கீழே ஆசேர், செபுலோன் மற்றும் இந்த இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுமே. பன்னிரண்டை பன்னிரெண்டால் பெருக்கினால் எவ்வளவு? லட்சத்து நாற்பத்து நாலாயிரம். அங்கே இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்கள் இருந்தனரே! புறஜாதிகள் அல்ல, யூதர்கள்! அதற்கு மணவாட்டியோடு எந்த ஒரு காரியமும் சம்மந்தக் கிடையாது. ஆகையால் யோகோவா சாட்சிக்காரர் தங்களுடைய உபதேசத்தில் தவறாயிருக்கின்றனர். அவர்கள் “யூதர்கள்,” புறஜாதிகள் அல்ல என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாயிருக்கிறார்கள், புறஜாதியார் ஒருபோதும் ஒரு ஊழியக்காரராக கருதப்பட்டிருக்கவேயில்லை. நாம் குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம், ஊழியக்காரர்களல்ல. 70 இப்பொழுது அதனுடைய மற்ற பாகத்தை வாசித்துப் பாருங்கள். தர்பூசணிப் பழத்தை சாப்பிடும் மனிதன் போல, அவன், “அது நன்றாயுள்ளது, ஆனால் நாம் அதை இன்னும் அதிகமாகப் புசிப்போம்” என்பது போன்றேயாகும். சரி, தேவன் அதைக் குறித்து இங்கே ஏராளமானவற்றை வைத்திருக்கிறார். இப்பொழுது, அப்படியே கவனியுங்கள். இப்பொழுது, இப்பொழுது நாம் 8-வது வசனத்தில் இருக்கிறோம்: செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம், யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். 71 பாருங்கள், யோவான் ஒரு யூதனாயிருக்கிறபடியால், அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளங்கண்டு கொண்டான், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் கண்டான்; ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் பன்னீராயிரம் பேர், பன்னிரண்டை பன்னிரண்டால் பெருக்கினால் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இருக்கின்றனர். அவர்கள் சபை அல்ல, யூதர்கள். வேதமோ, அவர்கள் ஒவ்வொரு கோத்திரமாய் பெயரிடப்பட்ட “இஸ்ரவேல் புத்திராயிருந்தனர்” என்றே இங்கு உரைத்துள்ளது. 72 இப்பொழுது 9-வது வசனத்தைக் கவனியுங்கள். இவைகளுக்குப் பின்பு (இப்பொழுது இங்கே மணவாட்டி வருகிறாள்)… இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ,…ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்,… 73 அங்குதான் உங்களுடைய ஆலய அண்ணகர்கள் உள்ளனர், அவர்கள் லட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர்களாயிருக்கின்றனர், ஒரு சிறு இடம், அவர்கள் மணவாட்டியோடிருந்து ஒரு ஆலயத்தை காவல்புரியப் போகிறார்கள்; அவள் மணவாட்டியினுடைய மெய்க்காவலர். அந்த லட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் மணவாட்டிக்கு மெய்க்காவாலராயுள்ளனர்; ஆலய அண்ணகர்கள். 74 கவனியுங்கள்! உண்மையாகவே, நீங்கள் இங்கே 14-வது அதிகாரத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நான் அறிவேன், அது, “ஏன், அவர்கள் மணவாட்டியோடு உள்ளனர், அவர்கள் எங்கெல்லாம்…” என்று உரைக்கிறது. முற்றிலுமாக! ராணி எங்கெல்லாம் சென்றாளோ அங்கெல்லாம் அவளோடு அண்ணகர்கள் பயணித்தனர். உண்மையாகவே! ஆனால் அவர்கள் எங்கே இருந்தனர்? அவர்கள் மெய்க்காவலர்களேயல்லாமல் வேறொன்றுமாயிருக்கவில்லை, அந்தவிதமாகத்தான் அது சரியாக இங்கிருக்க வேண்டும் என்று வேதம் பறைசாற்றுகிறது. 75 கவனியுங்கள்: இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், (அங்குதான் உங்களுடைய புறஜாதி மணவாட்டி வருகிறாள், சரி) ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், (அங்கே அவர்களுடைய இரட்சகர் இருக்கிறார், ஆட்டுக்குட்டி, நியாயப்பிரமாணம் அல்ல; ஆட்டுக்குட்டி, கிருபை) வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து,…ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். (கவனியுங்கள், இன்னும் ஒரு சில நிமிடங்களில், அந்த வெள்ளை அங்கிகள் பரிசுத்தவான்களுடைய நீதிகளல்லவா என்று பார்ப்போம்) அவர்கள் மகாசத்தமிட்டு: (அது ஒரு பெந்தேகோஸ்தே எழுப்பதலாயிருக்கவில்லையென்றால், நான் அந்த ஒன்றை ஒருபோதும் கேட்டதேயில்லை) இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனை தொழுதுகொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். 76 அது ஒரு பெரிய சிறப்புக் கூட்ட நேரம் போன்று தென்படுகிறது, அது அவ்வாறில்லையா? அவ்வாறே இருக்கப் போகிறதே! அது யார்? லட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர்களா? கிடையாதே! ஒருவனும் எண்ணக்கூடாததுமான இந்த திரளான கூட்டமாகிய ஜனங்கள்…சகல ஜாதிகளிலும், சகல் கோத்திரங்களிலும், பாஷைக் காரரிலுமிருந்து வந்தவர்கள். என்னுடைய அருமையான நண்பனே உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா? 77 இப்பொழுது கவனியுங்கள், அதை அப்படியேப் படியுங்கள். இப்பொழுது: அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். 78 மூப்பன் யோவானிடத்தில், அது இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேரை அடையாளங்கண்டுகொண்ட ஒரு யூதனிடத்தில் கூறினான், அவன், “இப்பொழுது, நீர் அவர்களை அறிந்திருக்கிறீர், அவர்கள் எல்லோரும் யூதர்கள். ஆனால் இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான். மூப்பன் என்ன கூறினான் என்று பார்த்தீர்களா? “மூப்பர்களில் ஒருவன் பதிலளித்தான்,” (அது சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த மூப்பர்கள்) “எனக்கு, ‘வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? இப்பொழுது, யூதர்களையும், அவர்களுடைய உடன்படிக்கை முதலியனவற்றை நாம் யாவரும் அறிவோம், ஆனால் இவர்கள் எப்பொழுது வந்தார்கள்?’” என்று பதில் கூறுவாயாக என்றான். இப்பொழுது கவனியுங்கள்: அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். (“எனக்கு—எனக்கு—எனக்கு தெரியாது,” யோவான், “அது எனக்கு புரிந்துகொள்ள முடியாததாயிருந்தது. எனக்குத் தெரியவில்லை” என்றான்) அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்: (“சோதனைகளினூடாகவும், இந்த அநேக அபாயங்களினூடாகவும், வலைகளினூடாகவும், கன்னிகளினூடாகவும் நான் ஏற்கெனவே வந்துள்ளேன்.” பார்த்தீர்களா?)…இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை…(சபையிலா? அது சரியாகத் தென்படுகிறதா?)…ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். …இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும்…(என்னுடைய வீட்டில் என்னை சேவிக்கிறது யார்? என்னுடைய வீட்டில் என்னை சேவிக்கிறது யார்? என்னுடைய மனைவி, அது சரியா?)…அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்;…(அதாவது என்னுடைய வீட்டில், என்னுடைய பொருளாதாரத்தில் என்னோடு தரித்திருக்கிறது என்னுடைய மனைவியே. அவளே என்னோடு தங்கியிருந்து, என்னுடைய மனைவியே. அவளே என்னோடு தங்கியிருந்து, என்னுடைய துணிகளைத் துவைத்து, எனக்காக காரியங்களை தொடர்ந்து ஆயத்தப்படுத்துகிறாள்)…சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர், இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். (ஓ, என்னே, கவனியுங்கள்!) இவர்கள் இனி பசியடைவதுமில்லை,…(அவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சில ஆகாரங்களை தவிர்த்து விட்டது போல காணப்படுகின்றனர்)…இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். (அங்குதான் அவள் இருக்கிறாள், அங்குதான் உங்களுடைய மணவாட்டி இருக்கிறாள்) 79 அங்கே உங்களுடைய லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் உள்ளனர், அங்குதான் உங்களுடைய ஊழியக்காரர்கள் இருக்கின்றனர். ஆகையால் “ராஜ்யத்தின் புத்திரர்” இங்கே, அருமையான நபர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார், அது ஒரு…இந்த குறிப்பிடத்தக்க கேள்வியைக் கேட்டுள்ளார். நான் இதை இங்கேயே…எங்கோ பின்னால் விட்டுவிட்டிருந்திருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன், ஆனால் “அவர்கள் புறம்பே தள்ளப்படுவார்கள்,” என்பது அவர்கள் தேவனுடைய சிந்தையிலிருந்து தள்ளப்படுவார்கள் என்று பொருள்படுகிறதில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்டக் காலம் ஆவிக்குரிய பலன்களிலிருந்து புறம்பே தள்ளப்படுகின்றனர். பாருங்கள், வெறுமென கொஞ்சங் காலத்திற்காகவேயாகும். 80 ஆகையால், தீர்க்கதரிசி இஸ்ரவேலர் இந்த நாளில் திரும்பி வருவதைக் கண்டபோது, அவன், “ஓய்வு நாள் ஆசாரிப்பு எடுக்கப்பட்டுவிட்டால் இஸ்ரவேலர் இருப்பார்களா? அவர்கள் ஓய்வு நாளிலும் மற்றெந்த நாளைப் போல வியாபாரம் செய்து, இந்த எல்லாக் காரியங்களையும் செய்கிறார்கள்” என்று கேட்டான். மேலும் அவன், “நீர்—நீர் எப்போதாவது…இஸ்ரவேல் முழுவதுமாக மறக்கப்பட்டுப் போகுமா?” என்று கேட்டான். 81 அதற்கு அவர், “வானம் எவ்வளவு உயரமாயுள்ளது? பூமி எவ்வளவு ஆழமாயுள்ளது? அதை உனக்கு முன்பாக இருக்கிற அந்த கோலினால் அளந்து பார்” என்றார். அப்பொழுது அவன், “என்னால் அளக்க முடியாது” என்றான். 82 அப்பொழுது அவரும், “என்னாலும் இஸ்ரவேலை ஒருபோதும் மறக்க முடியாது” என்றார். நிச்சயமாக முடியாது. இஸ்ரவேல் ஒரு போதும் மறக்கப்பட்டுப் போவதில்லை. 83 ஆகையால் நீங்கள் பாருங்கள், என்றென்றும் என்பதும், நித்தியம் என்பதும் இரண்டு வித்தியாசமான காரியமாயுள்ளன. இஸ்ரவேலர் புறம்பே தள்ளப்பட்டனர், ஆனால் தேவனுடைய சிந்தையிலிருந்து அல்ல. பவுல் அதை இங்கு பேசுகிறான், எனக்கு…ஆய்ந்து பார்க்க நேரமிருந்தால், ஆகையால் நான் துரிதமாக வேதவாக்கியத்தண்டைக்கு சென்று, அதை…என்னால் அவைகளை உங்களுக்கு குறிப்பிட்டுக் கூற முடியும், பாருங்கள், அது என் சிந்தையில் வருகிறது. 84 பவுல் அங்கே அதைக் குறித்துப் பேசுகிறான், புறஜாதிகளாகிய நாம், நாம் நடந்து கொண்ட விதம் மற்றும் நாம் என்ன செய்துள்ளோம் என்பதைக் குறித்தும் கவனமாயிருக்கும்படிக்குக் கூறினான். புரிகிறதா? காரணம் தேவன் முதல் கிளையை தப்பவிடாதிருக்க, பாருங்கள், நாமோ உள்ளே ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறோம், பாருங்கள்,…இஸ்ரவேலர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக குருடாக்கப்பட்டிருந்தனர் என்றே அவன் கூறினான். வெறுமென ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்காகவே இஸ்ரவேலர் குருடாக்கப்பட்டிருந்தனர். அது உண்மை, ஆனால் அந்தத் திரை அவர்களுடைய கண்களிலிருந்து எடுக்கப்படும். தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் கடைசி புறஜாதி நபர் பிறக்கும்போது, அது எடுக்கப்படுகிறது, அதன்பின்னர் அவர்களுடைய திரை இஸ்ரவேலருடைய கண்களிலிருந்து எடுக்கப்படுகிறது. அப்பொழுது அவர்களோ, “இவரே நாம் காணும்படி எதிர்பார்த்திருந்த மேசியா” என்று கூறுவார்கள். அது உண்மை, ஆனால் புறஜாதியாரின் வாசலோ அடைக்கப்படும் (பேழை அடைக்கப்பட்டது போல), அந்த நேரத்தில் புறஜாதிகளுக்கு எந்தக் கிருபையுமே விடப்பட்டிருக்காது. 85 இப்பொழுது, நான் ஒரு கேள்வியின் பேரில் அதிகப்படியான முழு நேரத்தையுமே எடுத்துக் கொள்கிறேன். யாரோ ஒருவர், “இப்பொழுது நீர் என்னுடைய கேள்விக்கு பதில் கூறவில்லை” என்று கூறுகிறார். நல்லது, நாம் அதற்குரிய பதிலைப் பெறமுடியுமா என்று துரிதமாகப் பார்ப்போம். 86 சரி, இங்கே உள்ளது நீளமான ஒரு—ஒரு கேள்வி. ஸ்திரீகள் கேட்டுள்ளதோ அல்லது புருஷர் கேட்டதோ அல்லது அது யாராயிருந்தாலும் இதைக் குறித்துக் கேட்டுள்ள ஒவ்வொரு காரியமும் சரியே. 53. கர்த்தராகிய இயேசு முழு உலகத்திற்காகவும், அதாவது உலகில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் மரிக்கவில்லை என்பது உண்மையல்லதானே? ஆனால் சரியாகக் கூறினால்…(இப்பொழுது, நான் அதை விளக்கிக் கூறவுள்ளேன், ஆனால் அவள்…அவன் அல்லது அவள், அது யாராயிருந்தாலும்…ஒரு ஸ்திரியினுடைய கையெழுத்துபோல் காணப்படுகிறது)…ஆனால் சரியாகக் கூறினால் இந்த—சரியாகக் கூறினால் உலகின் ஒவ்வொரு பாகங்களில் உள்ள இவர்களுக்காக, பிதாவானவர் அவருக்கு கொடுத்தவர்களுக்காகவே மரித்தார் என்பது உண்மையா? இவர்களை உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நித்திய ஜீவனுக்கென்று நியமித்து, அவர்களை தம்முடைய சொந்த தயவுள்ள சித்தத்தின்படி தெரிந்து கொண்டாரா? 87 முற்றிலுமாக, அதுவே உண்மை! அது முற்றிலும் உண்மை. இயேசு…மரித்ததே…இல்லை…அவர் ஒரு நோக்கமுடையவராயிருக்கிறார். 88 நாம் அதைப் பார்ப்போமாக, நான் நினைக்கிறேன்…இதன் பேரில் வருகிற ஒரு கேள்வியை…அவர்கள் வாசித்தார்கள் என்று நான்—நான் நினைக்கிறேன். 54. வேதம் சந்தேகத்திற்கிடமின்றி இவர்கள்…மாட்டார்கள், இவர்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று நமக்கு சொல்லுகிறது. ஆகையால்… 89 அது முற்றிலும் உண்மை. ஆக்கினைக்குட்படும்படிக்கு தேவனால் முன் குறிக்கப்பட்ட ஜனங்கள் உண்டு என்று வேதம் நமக்குக் கூறுகிறது. 90 அது எப்பொழுதுமே உங்களுடைய சிந்தையில் இல்லாமற்போகாதபடிக்கு நீங்கள் அதை வாசித்துப் பார்க்க விரும்புகிறீர்களா? சரி, நாம் இப்பொழுது யூதாவின் புத்தகத்திற்குத் திரும்புவோம், யூதா இங்கே பேசுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது: 91 அவன் அதை யாருக்கென்று குறிப்பிட்டு எழுதுகிறான் என்று பார்த்தீர்களா? பாவிகளுக்கல்ல, சுவிசேஷ ஊழியத்திற்கு மாத்திரமல்ல, ஆனால் பரிசுத்தமாக்கப்பட்டு அழைக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்டு எழுதுகிறார். பாருங்கள், அவர்கள் ஏற்கெனவே ராஜ்யத்தில் இருக்கிறவர்கள். உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி…(எப்படி?)…சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. 92 பூர்வத்திலே எழுதப்பட்டிருக்கிறது! தேவன் சிங்காசனத்தில் வீற்றிருந்து, “நான் இந்த மனிதனை இரட்சிப்பேன், நான் அந்த மனிதனை இழந்து விடுவேன்” என்று கூறினதல்ல. இது அதுவாயிருக்கவில்லையே! தேவன் மரித்தார், இயேசு மரித்தபோது, பாவ நிவர்த்தியானது ஒவ்வொரு நபருக்காகவும் முழு பூமியையுமே மூடினது. ஆனால் தேவன், முன்னறிவினால்…அவர்…சித்தங்கொண்டிருக்கவில்லை…எவரும் கெட்டுப்போக வேண்டுமென்று அவர் சித்தங்கொண்டிருக்கவில்லை. எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றே அவர் விரும்பினார். அதுவே அவருடைய—அதுவே அவருடைய நித்திய நோக்கமாயிருந்தது. ஆனால் அவர் தேவனாயிருப்பாரானால், யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருக்கவில்லையென்றால், அப்பொழுது அவர் முடிவுற்ற தேவனாயிருக்கவில்லை. எனவே வேதம் அதையே போதிக்கிறது. அதாவது நாம் முடிந்தால்… 93 நாம் ரோமர் 8-ம் அதிகாரத்தை இங்கே திருப்பிப் பார்க்கும்படி நேரமிருந்து, நீங்கள் அதை வாசித்துப் பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும். ரோமர் 9-வது அதிகாரம், வேதாகமத்தில் இன்னும் மற்ற இடங்களிலும் உள்ளன. எபேசியர் 1-வது அதிகாரம். தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் உறுதியாய் நிற்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும், தேவன் நிபந்தனையற்ற உடன்படிக்கையை அளித்தார். அவர் முன்னறிந்துகொண்டவர்களுக்காக மரிக்கும்படி இயேசுவை அனுப்பினார். புரிகிறதா? 94 எனவே, “அவள் இரட்சிக்கப்படுவாளா அல்லது இல்லையா என்பதை தேவன் அறிந்திருக்கவில்லை என்று நீங்கள் கூறுவது போன்று” கூறுவது அல்ல. நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது உலகத் தோற்றத்துக்கு முன்னே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார், இல்லையென்றால் அவர் தேவனாயிருக்கவில்லையே. 95 முடிவுற்ற என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள்…முடிவுற்ற என்ற வார்த்தையின் பொருள் என்ன என்பதை அகராதியில் பார்த்து கண்டறிந்து கொள்ளுங்கள். ஏன், அவர் பூமியின் மீது இருக்கப்போகும் ஒவ்வொரு உண்ணியையும், ஒவ்வொரு ஈயையும், ஒவ்வொரு கொசுவையும், ஒவ்வொரு கிருமியையும் அறிந்திருந்தார். அவைகள் பிறந்து உலகில் வாழ்வதற்கு முன்னமே அவர் அறிந்திருந்தார், இல்லையென்றால் அவர் தேவனாயிருக்கவில்லை. நிச்சயமாகவே, அவர் அதை அறிந்திருந்தார். சரி. 96 அப்பொழுது, அங்கே, தேவனால், “நான் உன்னை எடுத்து நகரத்துக்கு அனுப்புவேன்; நான் உன்னை எடுத்து, பரலோகத்திற்கு அனுப்புவேன்” என்று கூற முடியாது. தேவன் நீங்கள் இருவருமே பரலோகத்திற்கு போக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் முன்னறிவினால் ஒருவர் நேர்மையற்ற நபராயிருப்பார் என்றும், மற்றொருவர் ஒரு பண்புள்ள மனிதனாய், ஒரு கிறிஸ்தவராயிருப்பார் என்றும் அறிந்திருந்தார். புரிகிறதா? ஆகையால் இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர் முன்னறிந்திருந்த மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு அவர் இயேசுவை அனுப்ப வேண்டியதாயிருந்தது. உங்களுக்கு இது புரிகிறதா? இப்பொழுது இங்கே பாருங்கள்: இவர்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று வேதவாக்கியங்கள் நமக்கு சந்தேகத்திற்கிடமின்றி கூறுகின்றன. 55. ஆகையால் பாவநிவிர்த்தியானது…ஆதாமினுடைய இனம் முழுவதையுமே பாதுகாப்பிற்காக மறைப்பதற்கானதாயிருந்ததானால், சிலர் தங்களுடைய வாக்குத்தத்தை அல்லது ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் அவர்கள் இழக்கப்பட்டுவிட்டனரா அல்லது…வல்ல…சுயாதீன…அவன்…நித்திய திட்டங்கள் மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவனின் நோக்கங்களைக் காட்டிலும் வலிமையான ஆற்றலான ஒன்றாய் இருக்குமா? அது…(இப்பொழுது இந்த நபர் இந்த இரண்டாம் கேள்வியின் பேரில் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.) மனிதனுடைய சுயாதீன சித்தம் நித்திய திட்டங்கள் மற்றும் சர்வ வல்ல தேவனின் நோக்கங்களைக் காட்டிலும் வலிமையான ஒரு ஆற்றாலாயிருக்குமா? 97 இல்லை என் சகோதரனே, சகோதரியே. நிச்சயமாக இல்லை. எதுவுமே அதைப் பார்க்கில் வல்லமையானது கிடையாது…மனிதனுடைய சித்தத்தை நித்திய தேவனின் நியாயத்தீர்ப்பின் நோக்கத்தோடு ஒருபோதும் ஒப்பிடவே முடியாது. பாருங்கள். அது அவ்வாறிருக்க முடியாது. 98 இப்பொழுது உங்களுடைய முதல் கேள்வி சரியானதாயிருந்தது. நண்பனே, உங்களுடைய இரண்டாம் கேள்வி சரியானதாயிருக்க முடியாது. காரணம் பாருங்கள், இங்கே எழுதப்பட்டுள்ள விதத்திலேயே பாருங்கள், பாருங்கள்: மனிதனுடைய சுயாதீன சித்தமானது நித்திய திட்டங்களையும், சர்வ வல்லமையுள்ள தேவனின் நோக்கத்தையுங் காட்டிலும் வலிமையான ஒரு ஆற்றலாய் இருக்காதா? (ஏன், நிச்சயமாக இல்லை. சர்வ வல்லமையுள்ள தேவனின் நோக்கத்தைக் காட்டிலும் மனிதனின் சித்தமானது எப்படி ஒரு வலிமையான ஆற்றலாயிருக்க முடியும்? மனிதன் தன்னுடைய மாம்ச சம்மந்தமான நிலையில் அவன் விரும்புகிறதைச் செய்யும் சித்தமானது எப்படி ஒரு வலிமையான ஆற்றலாயிருக்க முடியும்? மனிதன் தன்னுடைய மாம்ச சம்மந்தமான நிலையில் அவன் விரும்புகிறதைச் செய்யும் சித்தமானது நித்தியமான, பரிபூரண தேவனைக் காட்டிலும் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாயிருக்குமா? நிச்சயமாக இருக்காதே! அது அவ்வாறு இருக்க முடியாது, பாருங்கள். நித்திய தேவன், அவருடைய நோக்கம் பரிபூரணமாயிருக்கும்போது, இங்குள்ள ஒரு—ஒரு மாம்சபிரகாரமான மனிதனை, எப்படி உங்களால் கூற முடியும், (அவன் எவ்வளவு வல்லமையாயிருந்தாலும்) கவலைப்பட வேண்டியதில்லை, அவனுடைய நோக்கங்களை இதனோடு, நித்திய சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நோக்கங்களோடு ஒருபோதும் ஒப்பிடலாகாது. 99 [ஒரு சகோதரி சபையிலிருந்து பேசுகிறார்—ஆசி.] ஆம். [“நான் வருந்துகிறேன். நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், நான் அங்கே கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.”] ஆம், சரி, சகோதரியே. [“நான் தேவனுடைய நித்திய நோக்கம் மனிதனுடைய சுயாதீன சித்தத்தை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருட்படுத்திக் கூறினேன், அதை அவ்வாறு கூறவில்லை என்று நான் நினைக்கிறேன்.’”] 100 அது உண்மை. ஓ, பரவாயில்லை, அப்படியானால் நான்—நான் அதைத் தவறாக வாசித்திருக்கிறேன், பாருங்கள். சரி. ஆம், சகோதரியே, அப்படியானால் நீங்கள் கூறினது முற்றிலும் சரியே. அதுவே உங்களுடைய—உங்களுடைய கேள்வியாயிருந்தது என்று எனக்குத் தெரியாமற்போய்விட்டது. சரி. ஆனால், பாருங்கள், நான் இதை எங்கே பெற்றுக் கொண்டேன், பாருங்கள்,…இப்பொழுது நான் பார்க்கட்டும், அதாவது, “ஆதாமினுடைய இனம் முழுவதும் பாதுகாப்பாய் மூடப்பட்டிருக்க, சிலர் தங்களுடைய—தங்களுடைய ஒதுக்கீட்டைப் பெறாததால் இழக்கப்பட்டிருப்பது, நித்திய திட்டங்கள் மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவனின் நோக்கத்தைக் காட்டிலும் மனிதனுடைய சுயாதீன சித்தம் ஒரு வலிமையான ஆற்றல் வாய்ந்ததாயிருக்குமா?” பாருங்கள், அங்கே நான்—நான் உங்களுடைய கருத்தினை தவறாக புரிந்து கொண்டுவிட்டேன். ஆம், சர்வ வல்லமையுள்ள தேவனின் நித்திய நோக்கம். நல்லது, அதுவே இதற்கு தீர்வாகிறது. 101 எல்லோருமே அதைப் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் புரிந்து கொண்டால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனின் நித்திய நோக்கமோ நிச்சயமாகவே மனிதன் செய்ய முடிந்த எல்லாவற்றிற்கும் மேலானதாயிருக்கும். இப்பொழுது: 56. மத்தேயு 28-ம் அதிகாரம்…19-ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்ணீர் ஞானஸ்நானத்தின் பேரிலான பொருள் எனக்குப் புரியவில்லை, இது என்னப் பொருட்படுத்துகிறது? 102 நல்லது, இப்பொழுது, இதற்கு எனக்கு ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகாமலிருக்கலாம். நீங்கள் விரும்பினால், நாம் அதைப் பார்க்கும்படி யாராவது என்னோடு மத்தேயு 28-ம் அதிகாரம், 19-ம் வசனத்திற்கு திருப்புங்கள். நாம் பார்ப்போம், அந்த நபர் என்ன…இருபத்தைந்து…இப்பொழுது, நீங்கள் தரித்திருப்பீர்களானால், இது உங்களை பலமுள்ளதாக்கும். இது—இது நன்மையானது, நீங்கள் பாருங்கள். இது சுவிசேஷமல்ல, ஆனால் இது… 103 இப்பொழுது நாம்…இப்பொழுது, “வேதாகமத்தில் ஒரு முரண்பாடு உண்டு” என்று இங்கே இதைக் கூற ஜனங்கள் முயற்சிக்கின்றனர். இப்பொழுது, நான் மத்தேயு 28:19…ஐ யாராவது திருப்பி எடுக்க விரும்புகிறேன், இல்லையென்றால், இல்லை, நான் யாராவது…மத்தேயு 28:19—ஐ எடுக்க விரும்புகிறேன். யாராவது அப்போஸ்தலர் 2:38-க்கு திருப்ப விரும்புகிறேன். சகோதரன் நெவில், நீங்கள் உங்கள் வேதாகமத்தை அங்கே வைத்துள்ளீர்களா? 104 நான் இப்பொழுது உங்களுக்காக நீங்களே வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “நான் வேதத்தில் ஒரு கண்டிப்பான முரண்பாட்டை உங்களுக்குக் காண்பிப்பேன், என்னவென்றால் வேதம்…ஜனங்கள், ‘வேதம் தாமே முரண்படுகிறதில்லை’ என்று கூறுகிறபடியால், நீங்கள் இதை ஆராய்ந்து பார்க்கும்படிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” 105 இது வேதாகம ஆசிரியர்களை மகிழ்ச்சியற்றதாக்குகிறது. ஆனால் இதுவோ—இதுவோ எளிமையானதாயுள்ளது. இப்பொழுது நான் மத்தேயு 28:19—ஐ வாசிக்கவுள்ளேன், நான் படிப்பதை நீங்கள் கவனியுங்கள். உங்களில் சிலர் அப்போஸ்தலர் 2:38—ஐ எடுத்து ஆயத்தமாக வைத்திருங்கள். நான் 18-வது வசனத்திலிருந்து துவங்கிப் படிப்பேன், இது மத்தேயுவின் முடிவான அதிகாரமாயுள்ளது. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (பிதாவின் அதிகாரம் எங்கே?) 106 வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டிருந்ததானால், அப்பொழுது தேவன் அதிகாரமற்றவராயிருந்தாரல்லவா? அல்லது அவர் வெறுமென ஒரு கதையைக் கூறினாரா? அவர் கேலி செய்து கொண்டிருந்தாரா? அவர் அதைக் கருத்தாய் கூறினார். அவர் அதைக் கருத்தாய் கூறினார். அவர் அதை பொருள்படக் கூறினார் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா? சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்குமேயானால், அப்பொழுது தேவனுடைய அதிகாரம் எங்கே? அவர் தேவனாயிருந்தாரே! அது சரியானதாயுள்ளது. அங்கே அதற்கு ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு. அதுவே அங்கிருந்த எல்லாமாயிருந்தது. பாருங்கள், அவர் தேவனாய் இருந்தார்; இல்லையென்றால் அங்கு வேறு ஏதோ அதிகாரத்தைக் கொண்ட வேறு யாராவது இருக்க வேண்டும், அல்லது வேறு அதிகாரமே இல்லாதிருக்க வேண்டும். புரிகிறதா? ஆகையால் உங்களால்—உங்களால் அதைக் குழப்ப முடியாது. நாம் இங்கே இந்த காரியத்தின் பேரில் உள்ளதை சரியாக புரிந்து கொள்வோம். சரி. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்…வானத்திலும் பூமியிலும்…கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். 107 இப்பொழுது யாராவது ஒருவர் அப்போஸ்தலர் 2:38-ஐ வாசியுங்கள். அப்படியே ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். அப்போஸ்தலர், 2-ம் அதிகாரம், 38-ம் வசனம். இப்பொழுது, இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள், அப்படியே பொறுமையாயிருங்கள், நாம் இப்பொழுது பார்ப்போம். இப்பொழுது, இயேசு அவர்களிடம் இப்பொழுது, “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து,” என்று மத்தேயு 28:19-ல் கூறின பத்து நாட்களுக்குப் பின்னர் இது கூறப்பட்டது. 108 இப்பொழுது, பேதுரு, பத்து நாட்கள் கழித்து…அவர்கள் மற்றொரு பிரசங்கத்தை ஒரு போதும் பிரசங்கிக்கவேயில்லை. அவர்கள் எருசலேமின் மேலறைக்குச் சென்று அங்கே (பத்து நாட்களாக) பரிசுத்த ஆவியானவர் வருவதற்காகக் காத்திருந்தனர். எத்தனை பேர் அதை அறிந்திருக்கிறீர்கள்? இந்த இடத்தில். இங்கே பேதுரு இருக்கிறான், பேதுரு ராஜ்யத்தின் திறவு கோல்களை உடையவனாயிருக்கிறான். சரி, அவன் என்ன செய்கிறான் என்று நாம் பார்ப்போம். மத்தேயு…இல்லை நான் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தையே பொருட்படுத்திக் கூறுகிறேன், நாம் 36-வது வசனத்தை எடுத்துக் கொள்வோம்: ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். “ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்.” வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்ததில் வியப்பொன்றுமில்லையே. இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 109 “இப்பொழுது, ஒரு முரண்பாடு உண்டு. மத்தேயு, ‘பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,’ என்று கூறினான், பேதுருவோ அப்போஸ்தலர் 2:38-ம் வசனத்தில், பத்து நாட்கள் கழித்து, ‘நீங்கள் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்’” என்று கூறினான். 110 அதன்பின்னர் அதற்கு அடுத்த முறை மனந்திரும்புதலைப் பற்றிக் கூறப்பட்டபோது—கூறப்பட்டபோது…இல்லை வேதத்தில் ஞானஸ்நானத்தைப் பற்றிக் கூறப்பட்டபோது, அது அப்போஸ்தலர் 8-வது அதிகாரத்தில், பிலிப்பு சமாரியர்களுக்குச்…சென்று பிரசங்கித்தான். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர், அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். 111 அதற்கு அடுத்த முறை அப்போஸ்தலர் 10:49-ல் புறஜாதிகள் அதைப் பெற்றுக் கொண்டதைப் பற்றிக் கூறப்பட்டது. இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், கேட்கும்போது…அப்பொழுது பேதுரு: ஆரம்பத்திலே நாம் பெற்றுக் கொண்டபோலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டான். 112 இப்பொழுது நான் இங்கு வைத்துள்ளதை ஒரு சிறு காரியத்தை எடுத்துக் கூறி, நீங்கள் அதை மறந்து போகாதபடிக்கு ஒரு சிறு விளக்கப் பாடத்தை உங்களுக்குக் கூறப் போகிறேன். நான் கூறப் போவதென்னவென்றால்…உலகில் எத்தனை வகையான பிரிவு ஜனங்கள் இருக்கின்றனர்? மூன்று வகையினர் உள்ளனர். காம், சேம், யாபேத்தினுடைய ஜனங்கள். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? அந்த நோவாவின் மூன்று குமாரர்களிலிருந்தே நாம் வந்துள்ளோம். காமினுடைய ஜனங்கள், சேமினுடைய ஜனங்கள்…யாப்பேத்தினுடைய ஜனங்கள் ஆங்கில இன மரபினராயிருக்கின்றனர், சேமினுடைய ஜனங்கள்…மூன்று வம்சத்தினர், அதாவது: யூதர், புறஜாதியார், பாதியூதர் பாதி புறஜாதியார். இப்பொழுது, கவனியுங்கள், அங்கே அந்த…இது காம்…சேம், காம் மற்றும் யாப்பேத். 113 இப்பொழுது, முதல் முறையாக ஞானஸ்நானமானது யோவான் ஸ்நானகனால் உரைக்கப்பட்டது…உரைக்கப்பட்டது. அது உண்மையென்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? சரி. நான் அதை இங்கே யோவான் ஸ்நானகன் மீது சுட்டிக்காட்டப் போகிறேன். யோவான் யோர்தானின் நதியிலே ஜனங்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, அவர்கள் மனந்திரும்ப வேண்டுமென்றும், தேவனோடு சரிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தங்களுடைய பொருட்களை விற்று, ஏழைகளைப் போஷிக்க வேண்டும் என்றும், போர் சேவகர் தங்களுடைய சம்பளே போதுமென்றும், தேவனோடு சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டான். எத்தனைபேர் அதை அறிவீர்கள்? அவன் யோர்தானின் நதியிலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான், அவர்களுக்குத் தெளிக்கவில்லை, அவர்கள் மேல் ஊற்றவில்லை, ஆனால் அவர்களை தண்ணீரில் மூழ்க்கினான். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், இங்கே மூல கிரேக்க வேதாகம அகராதியில், அது பாப்டிஸ்ஸோ என்ற வார்த்தையாயுள்ளதா என்று கண்டறியுங்கள், அது, “ஞானஸ்நானம்பண்ணப்படுதல், தண்ணீரில் மூழ்க்குதல், கீழே வைத்தல், அடக்கம்பண்ணப்படுதல்” என்பதாகும். இப்பொழுது, முதன்முறையாக அங்கு உரைக்கப்பட்ட ஞானஸ்நானம் அங்கே இருந்தது. 114 இரண்டாம் முறை ஞானஸ்நானம் உரைக்கப்பட்டிருந்ததோ, இயேசுவானவர் மத்தேயு 28:19-ல் அதை கட்டளையிட்டிருந்தார். 115 அதற்கு அடுத்த முறை ஞானஸ்நானம் உரைக்கப்பட்டிருந்ததோ அப்போஸ்தலர் 2:38-ல் இருந்தது. 116 அதற்கு அடுத்த முறை உரைக்கப்பட்ட ஞானஸ்நானம் அப்போஸ்தலர் 8-ம் அதிகாரத்தில் இருந்தது. 117 அதற்கு அடுத்த முறை உரைக்கப்பட்டிருந்த ஞானஸ்நானம் அப்போஸ்தலர் 10-ம் அதிகாரத்தில் இருந்தது. 118 இங்கே இயேசுவானவர், “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” என்று கூறின அந்த நேரத்திலிருந்து நாம் வருகிறோம். 119 இப்பொழுது நாம் முதலாவதாக இந்த வேதவாக்கியத்தை சரியாக புரிந்து கொள்வோம். அதாவது, “வேதத்தில் எந்த ஒரு வேதவாக்கியமும் மற்றொன்றிற்கு முரண்பாடாயிருக்காது” என்று நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன். அப்படியிருந்தால் நீங்கள் அதை என்னிடத்தில் கொண்டுவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதை இருபத்தியாறு ஆண்டுகளாக கேட்டு வருகிறேன், நான் இதுவரையிலும் அதைக் கண்டதேயில்லை. முரண்பாடான…வேதவாக்கியமேக் கிடையாது. அது அவ்வாறு முரண்படுமேயானால், அப்பொழுது அது ஒரு மனிதனால் எழுதப்பட்ட காரியமாயிருக்கிறது. இல்லை ஐயா, வேதாகமத்தில் எந்த முரண்பாடுமே கிடையாதே! 120 இப்பொழுது இதை நீங்கள், “அதைக் குறித்து என்ன?” என்று கேட்டீர்கள். 121 இங்கே இயேசுவானவர் நின்று, “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,” என்று கூறுகிறார். 122 பேதுருவோ திரும்பி நின்று அவர்களை நோக்கி, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். 123 “அங்குதான் உங்களுடைய முரண்பாடு உள்ளது.” அதைப் போல் காணப்படுகிறது. இப்பொழுது, நீங்கள் ஒரு மாம்ச சிந்தையோடு அதை வாசித்துக் கொண்டிருப்பீர்களேயானால், ஒரு திறந்த இருதயத்தோடு வாசிக்காமலிருந்தால், அது ஒரு முரண்பாடாயிருக்கும். 124 ஆனால் நீங்கள் அதை திறந்த மனதோடு வாசிப்பீர்களேயானால், நலமாயிருக்கும், அதாவது, “பரிசுத்த ஆவியானவர் இதை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து, கற்றுக்கொள்ளக் கூடிய பாலகருக்கு அதை வெளிப்படுத்தினபடியால் தேவனே அதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்” என்று இயேசுவானவர் அவ்வண்ணமாகக் கூறினார். நீங்கள் இதை சிந்தையிலே வைத்துக் கொண்டு, ஒரு சுயநல சிந்தையின்றி, ஆனால் கற்றுக் கொள்ளும்படியான ஒரு மனப்பூர்வமான இருதயத்தோடு வாசிப்பீர்களேயானால், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இந்தக் காரியங்களை உங்களுக்குப் போதிப்பார். 125 இப்பொழுது இதை ஒப்பிடவில்லையென்றால்…நீங்கள், “நீங்கள் கூறுவது சரியென்பதை எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?” என்று கேட்டீர்கள். நல்லது, அது மற்ற வேதவாக்கியங்களோடு ஒப்பிடப்படுகிறது. நீங்கள் ஒப்பிடவில்லையென்றால், நீங்கள் இங்கே ஒரு மிகப்பெரிய முரண்பாட்டைப் பெற்றுக் கொள்வீர்கள். 126 இப்பொழுது நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இது மத்தேயுவின் கடைசி அதிகாரமாய் உள்ளது. நான் இதை ஒரு எளிய முறையில் எடுத்து, நீங்கள் ஒவ்வொருவரும்…சிறு பிள்ளைகளும் இதைப் புரிந்துகொள்ளும்படி கூறவுள்ளேன். 127 உதாரணமாக, நீங்கள் ஒரு காதல் கதையை வாசித்தால், அதன் பின்பகுதியில், “மேரியும், ஜானும் அதற்குப்பின் எப்போதும் சந்தோஷமாக வாழ்ந்தனர்” என்று கூறப்பட்டிருந்தால், அப்பொழுது நீங்கள் அதற்குப்பின் எப்போதும் சந்தோஷமாக வாழ்ந்த அந்த ஜான் யார், மேரி யார் என்று நீங்கள் வியப்புறுவீர்கள். இப்பொழுது, ஜான் யார், மேரி யார் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதற்கு நீங்கள் புத்தகத்தின் முதலாம் பாகத்திற்குத் திரும்பிச் சென்று, ஜான் யார் என்றும், மேரி யார் என்றும் கண்டறிந்து கொள்வது மேலானதாயிருக்கும். அதன்பின்னர் இங்கு திரும்பி வந்து, மேரி யாராயிருந்தாள் என்றும், அவள் எந்த குடும்பத்திலிருந்து வந்தாள் என்றும், ஜான் யாராயிருந்தார் என்றும், அவர் எந்த குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும், அவருடைய பெயர் என்னவாயிருந்ததென்றும், அவர்கள் எப்படி திருமணம் செய்து கொண்டனர் என்றும், அதைக் குறித்த எல்லாவற்றையும் கண்டறிந்துகொள்கிறீர்கள். அது சரிதானே? 128 நல்லது, அது வேதாகமத்தை இங்கு வாசிக்கும்போதும் அதேக் காரியமாகவே உள்ளது…பாருங்கள், இயேசு, “நீங்கள் போய் ஜனங்களுக்கு பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானங் கொடுங்கள்” என்று ஒருபோதும் கூறவேயில்லை, அதாவது திரித்துவ ஜனங்கள் ஞானஸ்நானங் கொடுக்கிற விதமாக கொடுக்கும்படிக் கூறவேயில்லை. வேதத்தில் அதற்கான வேதவாக்கியமேக் கிடையாது. அவர் ஒருபோதும், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமங்களில் (நா—ம—ங்—க—ளி—ல்), நாமங்களில்” என்று கூறவேயில்லை. 129 அவர், “(நா—ம—த்—தி—லே)” என்றார், ஒருமை அங்கே உங்களுடைய வேதாகமத்தைப் பார்த்து, அது சரியா என்று கண்டறியுங்கள், மத்தேயு 28, “நாமத்திலே.” 130 “பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில்…” என்றல்ல. அது திரித்துவப் பிரசங்கியார் ஞானஸ்நானங்கொடுக்கிற விதமாயுள்ளது. “பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில்.” அது வேதாகமத்தில் கூட இல்லை. 131 “ஆகையால் நாமத்தில்…” நீங்கள், “அப்படியானால், ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்’” என்று கூறினீர்கள். அப்பொழுது அங்கே ஒரு குறிப்பிட்ட பெயர் உண்டு. 132 நல்லது, பிதா என்பது ஒரு பெயரா? பிதா என்பது ஒரு நாமமல்ல என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? பிதா என்பது ஒரு பட்டப் பெயர். குமாரன் என்பதும் ஒரு நாமமல்ல. குமாரன் என்பது ஒரு நாமமல்ல என்பதை எத்தனைபேர் அறிவீர்கள்? எத்தனை பிதாக்கள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். எத்தனை குமாரர்கள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். உங்களில் யாராவது ஒருவர் “குமாரன்” என்று பெயரிடப்பட்டிருக்கிறீர்களா? உங்களில் யாராவது ஒருவர் “பிதா” என்று பெயரிடப்பட்டிருக்கிறீர்களா? சரி, பரிசுத்த ஆவி என்பது ஒரு பெயரல்ல. பரிசுத்த ஆவி என்பது அது என்னவாயுள்ளது என்பதாகும். எத்தனை மானிடர்கள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். புரிகிறதா? அங்குதான் காரியம், பரிசுத்த ஆவி அது என்னவாயுள்ளது என்பதாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, அவைகளில் ஒன்றும் நாமங்களே அல்ல; அது நாமமே அல்ல. 133 சரி, அப்படியானால், அவர், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானங்கொடுத்து” என்று கூறியிருந்தால், அப்பொழுது நாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது யார் என்று நாம் திரும்பிச் சென்று கண்டறிவது மேலானதாகும். அப்படியானால் நாம் மத்தேயு முதலாம் அதிகாரத்திற்கு திரும்பிச் சென்று, இந்த நபர் யாராயிருந்தார் என்றும், எந்த நாமத்தில் நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்றும் பார்ப்போம். நாம் இப்பொழுது மத்தேயு 1-ம் அதிகாரம், 18-வது வசனத்தோடு துவங்குவோம். நீங்கள் எல்லோருமே கூர்ந்து வாசியுங்கள். 134 இப்பொழுது, இந்த கேள்வியைக் கேட்ட உங்களுக்கு நான் ஒரு சிறு விளக்கத்தை இங்கே அளிக்க விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் இங்கே தெளிவாக புரிந்து கொள்ளும்படி நான் இங்கே மூன்று காரியங்களை வைக்கப் போகிறேன், (விளக்கமளிக்க) விளக்கமளிக்கும்படியாக இந்த வேதாகமங்களையும் புத்தகங்களையும் வைத்துக் கூறப் போகிறேன். 135 சரி, நீங்கள் என்னை கூர்ந்து கவனிக்க் வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இப்பொழுது ஒவ்வொருவரும் என்னைக் கவனியுங்கள். இப்பொழுது இங்கே உள்ள இது பிதாவாகிய தேவன். இங்கே உள்ள இது குமாரனாகிய தேவன். இங்கே உள்ள இதுவோ பரிசுத்த ஆவியாகிய தேவன். இப்பொழுது எத்தனைபேர் புரிந்து கொள்ளுகிறீர்கள்? நீங்கள் இதை எனக்குப் பின்னேக் கூறுங்கள். இங்கே கீழே உள்ள இது யார்? [சபையோர், “பரிசுத்த ஆவி” என்கின்றனர்—ஆசி.] பரிசுத்த ஆவி. இங்குள்ள இது யார்? [சபையோர், “பிதா” என்கின்றனர்—ஆசி.] இங்குள்ள இது யார்? [சபையோர், “குமாரன்” என்கின்றனர்—ஆசி.] இப்பொழுது, அந்தவிதமாகத்தான் திரித்துவக்காரர்கள் அதை விசுவாசிக்கிறார்கள், பாருங்கள், அது நம்மை அப்படியே அப்பட்டமான அஞ்ஞானிகளாக்குகிறது. 136 யூதர்; அந்தக் காரணத்தினால்தான் உங்களால் ஒரு யூதனோடு எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அவர், “நீங்கள் தேவனை மூன்று துண்டுகளாக வெட்டி, அவரை ஒரு யூதனிடத்தில் கொடுக்க முடியாது” என்றார். ஆனால், நிச்சயமாக முடியாது, நீங்கள் என்னிடத்திலும் கொடுக்க முடியாது. புரிகிறதா? இல்லை, ஐயா. அவர் ஒரே தேவன். அதுதான். சரியானது. மூன்று தேவர்கள் அல்ல. அது எவ்வளவு—எவ்வளவு—எவ்வளவு எளிமையாயுள்ளது என்பதை இப்பொழுது கவனியுங்கள். 137 இப்பொழுது நாம் கண்டறியப் போகிறோம். இப்பொழுது, யார்…இது யார்? இப்பொழுது யாராவது கூறுங்கள். தேவ குமாரன். அது சரியா? இது குமாரன் நல்லது, அப்படியானால் அவருடைய பிதா தேவன். சரிதானே? அவருடைய பிதா தேவன் என்று எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். இயேசு கிறிஸ்துவினுடைய பிதா தேவன் என்று எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்? சரி. இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது… 138 இப்பொழுது நாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார் என்பதை திரும்பிச் சென்று கண்டறியப் போகிறோம், அந்த மத்தேயு, “நாமத்தில் ஞானஸ்நானங் கொடுத்து” என்றார். பாருங்கள், நாமம்; இப்பொழுது நாமங்களில் அல்ல, ஏனென்றால் அவைகள் நாமங்களாயிருக்க முடியாது, ஏனென்றால் அங்கே நாமமே இல்லை. இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பிதாவாகிய தேவனால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (வேதம் அவ்வாறு கூறுகிறதா? வேதம் என்னக் கூறுகிறது?)…அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 139 அப்படியானால் இவைகளில் எந்த ஒன்று அவருடைய பிதா? இப்பொழுது, இது அவருடைய பிதா என்று வேதம் கூறியுள்ளது, இயேசு இது அவருடைய பிதாவாயிருந்தது என்று கூறினார். இப்பொழுது எந்த ஒன்று அவருடைய பிதாவாய் உள்ளது? இப்பொழுது, அவருக்கு இரண்டு பிதாக்களிருந்திருந்தால், இப்பொழுது, அதைக் குறித்து என்ன? அவர் இரண்டு பிதாக்களை உடையவராயிருந்தால், அப்பொழுது அவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளையாயிருக்கிறார். 140 இப்பொழுது நாம் இன்னும் சற்று மேற்கொண்டு வாசிப்போம்: அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது…உண்டானது. [சபையோர், “பரிசுத்த ஆவியினால்” என்கிறார்கள்—ஆசி.] 141 என்ன? பரிசுத்த ஆவியானாலா? எப்படி பிதாவானவர் அவருடைய பிதாவாயும், பரிசுத்த ஆவியானவரும் அவருடைய பிதாவாக ஒரே நேரத்தில் இருக்க முடியும்? இப்பொழுது, அது சரியானால், அப்பொழுது அவர் இரண்டு பிதாக்களை உடையவராயிருந்திருப்பார். இல்லை ஐயா! பரிசுத்த ஆவியே தேவனாயிருக்கிறார். பரிசுத்த ஆவி தேவனாயிருக்கிறார். ஆகையால் தேவனும், பரிசுத்த ஆவியும் ஒரே நபராயிருக்கின்றனர், இல்லையென்றால் அவர் இரண்டு பிதாக்களை உடையவராயிருந்தார் என்பதாகும். 142 பாருங்கள், நாம் சற்று கழிந்து ஜானும், மேரியும் யார் என்று கண்டறிவோம். சரி, பேதுருவும், மத்தேயும் ஒருவருக்கொருவர் முரண்பட முயற்ச்சித்துக் கொண்டிருந்தார்களா அல்லது இல்லையா என்று நாம் கண்டறிந்து, வேதம் தனக்குத்தானே முரண்படுகிறதா என்று பார்ப்போம். அவ்வாறானால் அது ஆவிக்குரிய பிரகாரமான ஒரு குறைவான புரிந்து கொள்ளதலாயுள்ளது. அது உண்மை. அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில்… 143 நான் அந்த ஒன்றை, 20-வது வசனத்தைப் படிக்க வேண்டும். இப்பொழுது 21-ம் வசனம்: அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்,…(இந்த நபர், இது யாராயிருந்தது? ஒரே நபர், தேவன்)…அவருக்கு பேரிடுவாயாக…(என்னவென்று?) [சபையோர், “இயேசு” என்று பதிலளிக்கின்றனர்—ஆசி.] ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னன். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். 144 எனவே அதற்கு பின் எப்போதும் சந்தோஷமாய் வாழ்ந்த ஜானும், மேரியும் யாராயிருந்தார்? அதாவது, “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்க் கொடுத்து” என்று கூறினவர் யார்? பிதாவாயிருந்தவர் யார்? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமமா? [யாரோ ஒருவர், “இயேசு” என்று கூறுகிறார்—ஆசி.] நிச்சயமாகவே, அது இயேசுவாயிருந்தது. நிச்சயமாகவே, அதற்கு எந்த முரண்பாடுமே கிடையாது. ஒரு சிறு முரண்பாடுமில்லை. அது அப்படியே வேதவாக்கியத்தை சரியாக புரிந்துகொள்ளச் செய்கிறது. அவர் பிதா குமாரன் பரிசுத்த ஆவியாயிருந்தார். தேவன் நம்மோடு (இம்மானுவேல்) வாசம் செய்து கொண்டிருந்தார், “இயேசு” என்று அழைக்கப்பட்ட ஒரு சரீரத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். 145 இப்பொழுது, ஒருத்துவ சபையின் ஒருத்துவப் போதனையை, நான் நிச்சயமாகவே அதனோடு கருத்து வேறுபாடு கொள்கிறேன். உங்களுடைய விரல் ஒன்று என்பதுபோல, இயேசுவும் ஒருவராயிருக்கிறார் என்று கருதுகிறார்கள். அவர் ஒரு பிதாவை உரையவராயிருந்திருக்க வேண்டியதாயிருந்தது. அவர் பிதாவை உடையவராயில்லாதிருந்திருந்தால், அவர் எப்படி தம்முடைய சொந்த பிதாவை உடையவராயிருக்க இருக்க முடியும்? அவருடைய பிதா திரித்துவக்காரர் கூறுகிறதுபோல ஒரு மனிதனாயிருந்தால், அப்பொழுது அவர் இரண்டு தகப்பன்மார்களினால் முறைதவறிப் பிறந்த ஒரு குழந்தையாயிருப்பார். ஆகையால் நீங்கள் பாருங்கள், நீங்கள் இருவருமே வாதத்தினால் தவறாயிருக்கிறீர்கள். புரிகிறதா? 146 ஆனால் அதைக் குறித்த சத்தியம், அதாவது பிதா, குமாரன் பரிசுத்த ஆவி ஒருவரின் தனித்தன்மையாயிருக்கிறது. [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.]…உலகத்தின் பாவத்தை எடுத்துப் போட, ஒரு மாம்ச கூடாரத்தில் வாசம் செய்த…அது முற்றிலும் உண்மை, “தேவன் நம்மோடு இருந்தார்.” இப்பொழுது, ஆகையால், மத்தேயு 28:19… 147 இப்பொழுது, நீங்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்துப் பார்த்து, வேதாகமத்தில் எங்காவது ஒரு நபரை நீங்கள் கண்டறிய முடிந்து…(இப்பொழுது அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், இப்பொழுது இது உங்களை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம்)…வேதாகமத்தில் எங்காவது ஒரு நபர் எப்போதவது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் என்று திரும்பி வந்து என்னிடத்தில் கூறி, நான் ஒரு மாய்மலக்காரன் என்று என்னிடம் கூறினால், அப்பொழுது நான் அதை ஒரு அடையாளப் பலகையாக எழுதி என்னுடைய முதுகில் தொங்கவிட்டுக் கொண்டு பட்டிணம் முழுவதும் நடந்து செல்வேன். அது ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலுள்ள ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம்பண்ணப்பட்டனர். 148 நீங்களோ, “பிரசங்கியாரே, ஒரு நிமிடம் பொறும். யோவானைக் குறித்தென்ன? அவன் எந்த நாமத்திலும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை!” எனலாம். 149 சரி, என்ன சம்பவித்தது என்பதை நாம் கண்டறிவோம்; அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்திற்கு நாம் திருப்புவோமாக. அங்குதான் நாம் யோவானின் சீஷர்களைக் கண்டறிகிறோம். நாம் இங்கே இந்தக் குழுவை கண்டறியும் வரை ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். அப்போஸ்தலர் 19-ம் அதிகாரம். இப்பொழுது நாம் வாசிக்கத் துவங்குவோம். நாம் யோவானின் சீஷர்களைக் கண்டறிவோம்: அப்பொல்லோ என்பவன் (மனமாற்றமடைந்த ஒரு நியாயசாஸ்திரியாயிருந்தான்) கொரிந்து பட்டிணத்தில் இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: (அவர்கள் இயேசுவை பின்பற்றினவர்களாயிருந்தனர்.) 150 அங்கே இதற்கு முந்தின அதிகாரத்தை நீங்கள் சற்று கவனித்திருப்பீர்களேயானால், அவர்கள் சத்தமிட்டுக் கொண்டும், களிகூர்ந்து கொண்டுமிருக்குமளவிற்கு அப்படிப்பட்ட ஒரு மகத்தான நேரத்தை உடையவர்களாயிருந்து கொண்டிருந்தனர். அது உண்மை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். பவுலும் சீலாவும் அடிக்கப்பட்டு சிறைச் சாலையில் போடப்பட்டிருந்தனர். அது சரியா? அவர்கள் இங்கு வந்து, ஆக்கிலாவையும், பிரிஸ்கில்லாவையும் கண்டனர். “இயேசுவே கிறிஸ்து” என்று வேதவாக்கியங்களின் மூலம் நிரூபித்துக் கொண்டிருந்த அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியாரால் அங்கே அவர்கள் ஒரு எழுப்புதலில் இருந்து கொண்டிருந்தனர். இப்பொழுது பவுல் அவனை கண்டறிகிறான்: …பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான்… 151 இப்பொழுது, அருமையான பாப்டிஸ்டு நண்பனே உன்னைத் தான், “நீங்கள் விசுவாசிகளானபோது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா” என்று உங்களை நீங்களே கேட்டபோது, உங்களுடைய வேத சாஸ்திரத்தின் கீழிருந்து வரும் முட்டுகளை அது தட்டவில்லையென்றால், 152 ஆனால் பவுல் இந்த பாப்டிஸ்டுகளை, “நீங்கள் விசுவாசிக்களானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்க விரும்பினான். இப்பொழுது அவர்கள் என்னக் கூறினர் என்பதைக் கவனியுங்கள்: அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால்…எந்த…(இப்பொழுது நீங்கள் கிரேக்க வேதாகம அகராதியில் இங்கே படித்துப் பார்க்க விரும்பினால், அதில், “அப்படியானால் நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?” என்று உள்ளதை உங்களுக்குக் காண்பிக்கும்)…அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள் முன்னர் இங்கே யோவான் கொடுத்ததைப் பெற்றுள்ளோம். யோவான் எங்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான். 153 இப்பொழுது நான் கேட்க விரும்புகிறேன்: நீங்கள் அந்த ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தால், நீங்கள் அதனால் திருப்தியடைவீர்களா? நதியிலே இயேசுவோடு நடந்த அதே மனிதன், இயேசு கிறிஸ்துவிற்கு ஞானஸ்நானங் கொடுத்த அதே மனிதன் இந்த ஜனங்களுக்கும் ஞானஸ்நானங் கொடுத்திருந்தார். அது ஒரு நல்ல அழகான ஞானஸ்நானமாயிருந்தது; தெளித்தல் அல்ல, ஊற்றுதல் அல்ல, ஆனால் இயேசுவானவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட அதே இடத்திலே பண்டைய யோர்தானின் சேற்றிலே தண்ணீரில் முழுக்கி ஞானஸ்நானம் கொடுத்திருந்தான். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 154 பவுல், “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அவர்கள்…அவன்… அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவி உண்டென்பதை…நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றனர். அப்பொழுது அவன், “நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்” என்றார்கள். அவனோ, “நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “யோவான் கொடுத்த ஞானஸ்நானம்” என்றார்கள். 155 இப்பொழுது பவுல் என்ன கூறினான் என்பதைக் கவனியுங்கள். இங்கே கவனியுங்கள்: அப்பொழுது அவன்…நீங்கள் எந்த ஞானஸ்நானம்…யோவான் கொடுத்த…அவர்கள்… அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 156 பாருங்கள், யோவான் மனந்திரும்புதலுக்கு மாத்திரமே ஞானஸ்நானங் கொடுத்தான், ஆனால் இது பாவமன்னிப்பிற்காக இயேசுவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானமாயுள்ளது. அப்பொழுது பாவநிவிர்த்தி செய்யப்படவில்லை, பாவங்கள் மன்னிக்கப்பட முடியவில்லை. இப்பொழுது…அது நியாயப்பிரமாணத்தின் கீழ் இருந்ததைப் போல, வெறுமென ஒரு நல் மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்தது, லூக்கா 16:16-ல், “நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான் வரைக்கும் வழங்கி வந்தது; அது முதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது கவனியுங்கள். கவனியுங்கள்… அப்பொழுது பவுல்…(இப்பொழுது கவனியுங்கள்)…நீங்கள்…பெற்றீர்களா… 157 5-வது—5-வது வசனம்: அதைக் கேட்டபோது அவர்கள்: இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே…(மீண்டும்)…ஞானஸ்நானம் பெற்றார்கள். 158 அது சரியா? ஆகையால் இந்த ஜனங்கள், அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் ஜனங்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். யூதர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். புற ஜாதிகள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருந்தனர். வேதம் முழுவதிலுமே ஒவ்வொரு நபருமே இயேசுவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். 159 இப்பொழுது எவராவது வேறெந்த விதத்திலாவது எப்போதாவது ஞானஸ்நானம் பண்ணப்பட்ட ஒரு இடத்தை கண்டறியுங்கள் பார்க்கலாம். எனவே நான் இங்கு திரும்பிச் சென்று கத்தோலிக்க சபையானது எங்கே அதை ஒப்புக் கொள்கிறது என்றும், அதற்கு நீங்கள் தலைவணங்கும்படி எங்கே கூறினது என்றும் உங்களுக்குக் காண்பிப்பேன். அதாவது, கத்தோலிக்கர்கள், “சில பிராட்டெஸ்டெண்டுகளும் இரட்சிக்கப்பட்டிருக்கலாம், ஏனென்றால் அவர்கள் ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்’ நாமத்தில் ஞானஸ்நானம் போன்ற ஒரு சில கத்தோலிக்க உபதேசங்களை உடையவர்களாயிருக்கிறார்கள்: அதாவது பரிசுத்த கத்தோலிக்க சபைக்கு இயேசுவின் நாமத்திலிருந்து ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திற்கு’ அந்த முறைமையை மாற்ற உரிமை உள்ளது என்று பிராஸ்டெஸ்டெண்ட் சபையும் அதை ஒப்புக் கொள்கிறது” என்றும் கூறுகிறார்கள். இந்த சபையோ அதை ஒப்புக் கொள்கிறதில்லை, நான் வேதத்தோடு தரித்திருக்கிறேன். நான் வேதத்தை விசுவாசிக்கிறேன். 160 நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாமே, ஜனங்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெறும்படி நீர் கட்டளையிடுகிறீரா?” என்று கேட்கலாம். முற்றிலுமாக! பவுல் இங்கே கட்டளையிட்டான். 161 இப்பொழுது கவனியுங்கள், காலத்தியர் 1:8-ஐ நாம் எடுத்து, பவுல் என்னக் கூறினான் என்று கண்டறிவோமாக. …நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 162 அங்குதான் காரியமே உள்ளது, “நாங்களாவது அல்லது தூதனாவது.” பவுல், அதே மனிதன், என் சகோதரனே, நீ பெற்றுள்ளதைக் காட்டிலும் மேலான ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்த ஜனங்களை மீண்டும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்படி கட்டளையிட்டான், ஏனென்றால் யோவான்ஸ்நானகன் இயேசுவினுடைய சொந்த உறைமுறையானாயிருந்தான், இரண்டாம் உறவுமுறையான்; தன்னுடைய சொந்த உறவு முறையானவருக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானங்கொடுத்துவிட்டு, அப்படியே யோவானானின் சீஷர்களுக்கும் ஞானஸ்நானங்கொடுத்திருந்தான். இயேசு, “அது கிரியை செய்யாததே!” என்றார் இல்லை பவுல் அதைக் கூறி, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன்பு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மீண்டும் ஞானஸ்நானம் பெறும்படிக் கட்டளையிட்டான். அதற்கு முன்னர் அவர்கள் சத்தமிட்டுக் கொண்டும், தேவனை துதித்துக் கொண்டும், ஒரு பெரிய நேரத்தை உடையவர்களாயிருந்து கொண்டு, ஒரு மகத்தான—மகத்தான எழுப்புதலை உடையவர்களாய், வேதாகமத்தைக் கொண்டு (தங்களுடைய வேத சாஸ்திரத்தைக் கொண்டு) இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டிருந்தனர். எத்தனை பேருக்கு அந்த வேதவாக்கியம் தெரியும்? 18-ம் அதிகாரம். நிச்சயமாக அவ்வாறு உள்ளது. அங்குதான் காரியமே உள்ளது. எனவே அதற்கு எந்தக் கேள்வியுமேக் கிடையாது. 163 இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு சிறு முக்கிய செய்தியைக் கூறட்டும். இப்பொழுது, அவன் ஒருபோதும் கட்டளையை விட்டுச் செல்லவேயில்லை, ஆனால் லூக்காவில்…மத்தேயு 16-வது அதிகாரம். இயேசு, அவர்கள் மலையிலிருந்து இறங்கி வரும்போது, அவர், “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்கிறார். 164 அதற்கு அவர்கள், “சிலர் உம்மை எலியா என்றும், சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும், சிலர் உம்மை இது, அது என்றும் சொல்லுகிறார்கள்” என்றனர். 165 அப்பொழுது அவர், “நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். 166 பேதுரு பிரதியுத்தரமாக, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். 167 கவனியுங்கள்! “யோனாவின் குமாரனாகிய சீமோனே, (யோனாவின் குமாரன்) நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை.” ஆமென்! 168 பாருங்கள், அது ஆவிக்குரிய வெளிப்பாடாய் வரவேண்டும். அவன் தவறாயிருந்தான் (காயீன், அதாவது அவன் தவறாயிருந்தான்) என்று மாம்சமும் இரத்தமும் ஒருபோதும் ஆபேலுக்குக் கூறவில்லை, அதாவது “காயீன் தவறாயிருந்தான்” என்று ஆபேலுக்கு ஒருபோதும் கூறவில்லை. ஆனால், “அது இரத்தமாயிருந்தது!” என்பது ஆபேலுக்கு உண்டாயிருந்த ஒரு வெளிப்பாடாயிருந்தது. நாம் அந்த கேள்விக்கு இன்னும் ஒரு சில நிமிடங்களில் வரப் போகிறோம். அது இரத்தமாயிருந்தது, பழங்கள் அல்லது அதுவே நம்மை ஏதேன் தோட்டத்திலிருந்து எடுத்துவிட்டது. “அது இரத்தமாயிருந்தது,” அது இரத்தமாயிருந்தது என்று ஆபேலுக்கு, ஆவிக்குரிய வெளிப்பாட்டினால்…தேவனால் வெளிப்படுத்தப்பட்டது. அவன், “விசுவாசத்தினாலே,” எபிரேயர் 11:1, “அவன் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான், அதை, தேவன் அவனுடைய பலியை ஏற்றுக் கொண்டார்,” என்று கூறுகிறது. அங்குதான் காரியம். பாருங்கள், அவன் விசுவாசத்தினாலே, வெளிப்பாட்டினாலே அதை செலுத்தினான். 169 இப்பொழுது கவனியுங்கள், “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை,” (சரியாக கர்த்தராகிய இயேசுவே) “பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின்மேல் (இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு)…இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” அதைத்தான் அவர் கூறினார். ஆவிக்குரிய வெளி…“நீ பேதுருவாயிருக்கிறாய், நான் உனக்கு ராஜ்யத்தின் திறவுகோல்களைத் தருவேன் என்று நான் கூறுகிறேன். என்னவெல்லாம்…ஏனென்றால் நீ இங்கேயும் பரலோகத்துக்கும் இடையே ஒரு ஆவிக்குரிய திறந்த வாய்க்காலை உடையவனாயிருக்கிறாய். மாம்சமும் இரத்தமும்; நீ ஒருபோதும் அதை ஒரு வேதாகம கருத்தரங்கிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை, நீ அதை ஒரு பள்ளியிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை, நீ அதை ஒருபோதும் ஒரு—ஒரு—ஒரு வேத சாஸ்திர பாடத்திலிருந்து கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நீ தேவன் பேரில் சார்ந்திருந்தாய், தேவன் அதை உனக்கு வெளிப்படுத்தினார், அது முற்றிலும் தெளிவாக வேதவாக்கியங்களை அதனோடு ஒன்றாக இணைக்கிறது. நீ பேதுருவாயிருக்கிறாய், அது உண்மை, நான் உனக்கு திறவு கோல்களைக் கொடுப்பேன்; நீ பூமியிலே கட்டவிழ்பது எதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன் என்று நான் கூறுகிறேன்.” 170 பெந்தேகோஸ்தே நாளிலே பேதுரு பிரதிநிதியாயிருந்து, அவர்கள் யாவரும் பேசப் பயப்பட்டபோது, அவன் எழுந்து நின்று, “யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவி கொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிக் கொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே அக்கினி, புகைக்காடாகிய அடையாளங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும் முன்னே இது சம்பவிக்கும், அப்பொழுது கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.” அங்குதான் காரியமே உள்ளது. ஓ, என்னே. 171 மேலும் அவன், “கோத்திரத் தலைவனாகிய தாவீதைக் குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. அவர் தீர்க்கதரிசியாயிருந்து, அவன் கண்டு…அவரை நோக்கிக் கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலது பாரிசத்திலே இருக்கிறார். ‘அதினால் என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்:’” 172 அவன், “தாவீது மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. ஆனால் அவர் தீர்க்கதரிசியாயிருந்து, நீதிபரருடைய வருடையை அவன் முன்னதாகவேக் கண்டான், அவரை தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்.” ஓ, என்னே. அங்கேதான் உங்களுடைய வேதவாக்கியங்கள் இருக்கின்றன. அங்குதான் காரியமே உள்ளது. அதுதான் இது. 173 இப்பொழுது அதுவே சரியான வழியென்றும், உண்மையான வழியென்றும், அதுவே எப்போதும் நியமிக்கப்பட்டிருந்த ஒரே வழியாயிருந்தாதென்றும்…நாம் இங்கே கண்டறிகிறோம். பேதுரு திறவுகோல்களை உடையவனாயிருந்தான், அந்த நாளிலே அவன் பிரசங்கித்தபோது, அவர்கள் கூறினர்…இப்பொழுது கவனியுங்கள், இதோ உள்ளது முதல் சபை. கத்தோலிக்கர்களாகிய நீங்கள் இதற்கு செவிகொடுங்கள். காம்பலைட் ஸ்தாபனத்தாராகிய நீங்கள் இதற்கு செவிகொடுங்கள். பாப்டிஸ்டுகளாகிய நீங்களும், மெத்தோடிஸ்டுகளும் இதற்கு செவிகொடுங்கள். பெந்தேகோஸ்தேக்களாகிய நீங்கள் இதற்கு செவிகொடுங்கள். சர்ச் ஆஃப் காட், நசரீன், யாத்திரீக பரிசுத்தரே இதற்கு செவி கொடுங்கள். 174 பேதுரு திறவுகோல்களை உடையவராயிருந்தார், அவர் அதிகாரத்தை உடையவராயிருந்தார், இல்லையென்றால் இயேசு பொய்யுரைத்தார். எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன், “இரண்டு மாறாத விசேஷங்களினால்; எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன்.” அவன் திறவுகோல்களை உடையவனாயிருந்தான். இயேசு அவனுக்கு திறவு கோல்களைக் கொடுத்திருந்தார். அதேப் போன்று அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, அவர் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருந்தேரேயன்றி, ராஜ்யத்தின் திறவுகோல்களை உடையவராயிருக்கவில்லை. பேதுரு அவைகளை உடையவனாயிருந்தானே! அது முற்றிலும் உண்மை. 175 இப்பொழுது கவனியுங்கள், பேதுரு, நீங்கள் வைத்திருந்த திறவுகோல்கள் உங்களுடைய பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருக்க, நீங்கள் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறீர்கள். புதிய சபையின் முதல் மனமாற்றமடைந்தவர்களுக்கு கேள்வி உண்டாகிறது. ஆரம்பகால கிறிஸ்தவ சபை. இப்பொழுது கத்தோலிக்கரே, இப்பொழுது பாப்டிஸ்டுகளே, மெத்தோடிஸ்டு, பிரஸ்பிடேரியன்களே, நீங்கள் புதிய சபையின் உபதேசத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் அதில் இருக்கிறீர்களா என்பதைக் கண்டறியுங்கள். சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். பேதுரு எழும்பி நின்று, நீங்கள் மனந்திரும்பி…ஒவ்வொருவரும்…(பையனே, கவனி; நீ இங்கே அந்த திறவுகோல்களை வைக்கும் விதமாகவே கிறிஸ்து அதை பரலோகத்தில் வைப்பார்)…நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்…(அந்த விதமாகத்தான் நீங்கள் இதற்குள் வருகிறீர்கள்)…அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 176 அந்த திறவுகோல்கள் “கிளிக்” என்ற ஒலியோடு இங்கே தாழ்பாளைத் திறந்தன, அது “கிளிக்” என்ற ஒலியோடு திறந்தன. அந்தக் காரணத்தினால்தான் யோவானுடைய சீஷர்கள் (அவர்கள் பரலோகத்திற்கு செல்வதற்கு முன்), பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வரவேண்டியதாயிருந்தது. அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொண்டார். ஆகையால் அது இப்பொழுது உங்களை குழப்புகிறதில்லை, இது குழப்புகிறதா? புரிகிறதா? நிச்சயமாகவே மத்தேயு 28:19 பட்டப் பெயர்களாயிருந்ததேயன்றி நாமமல்ல. 177 சரி, நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது? நாம் உண்மையாக இன்னும் சில கேள்விகளுக்கு துரிதமாக பதிலளிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் நமக்கு இருக்குமா? நமக்கு இருக்குமா? சரி, நாம் உடனே துரிதமாகப் பார்ப்போம். நான் இங்கே கீழே இரண்டு கேள்விகள் வைத்துள்ளேன், என்னால் முடிந்தளவு இதனோடு இணைந்து துரிதமாக பதிலுரைக்க விரும்புகிறேன். அதன் பின்னர் மற்றவைகளுக்கு என்னால் ஞாயிறு காலை பதிலளிக்க முடியும். 57. காயீன் சர்ப்பத்தின் சந்ததியாயிருந்தானா? (இது ஒரு நல்ல கேள்வி) அப்படியானால், ஆதாம் அவளை அறியும் வரை ஏவாள் ஏன் கருத்தரிக்கவில்லை? அதே…அடுத்தக் கேள்வியும் அதே விதமாகவே உள்ளது. 58. ஏவாள் புசித்தது சரியாக ஒரு—ஒரு விருட்சத்திலிருந்த கனியா? அது ஆகாரத்திற்கு நல்லதாயிருந்தது என்று அவள் கண்டாள். 178 சகோதரனே, சகோதரியே, இது யாராயிருந்தாலும் பரவாயில்லை, நாம் ஆதியாகமத்திற்கு திரும்பிச் சென்று இங்கு ஒரு காரியத்தைக் கண்டறிவோம். நீங்கள் விரும்பினால், நாம் ஆதியாகமம் 3:8—க்குச் செல்வோம். சரி, இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள். 179 இப்பொழுது நான் அந்த சம்பவத்தை தெளிவுபடுத்தவுள்ளேன். முழுவதும் சுத்தமானதாயும், பரிசுத்தமானதாயுமிருந்தது, பாவமே இல்லாதிருந்தது இல்லை எந்தக் கறையுமில்லாதிருந்தது. இப்பொழுது நான்…உங்களுடைய…இந்த முதல் கேள்வியை எடுத்துக் கொள்கிறேன். விருட்சத்தில் உள்ள ஜீவன்…தோட்டத்தின் மத்தியில், விருட்சத்தின் மையத்தில். விருட்சம் என்பது “ஸ்திரீயாயிருந்தது.” இப்பொழுது நீங்கள் இன்னும் ஒரு சில நிமிடங்கள் அப்படியே பொறுமையாயிருந்தால், நான் அதை உங்களுக்கு வேதவாக்கியங்களைக் கொண்டு நிரூபிக்கவுள்ளேன். 180 நாம் முதலில் அவள்…அவள் ஆதாமை அறியும் முன்னே அவள் கர்பந்தரித்தாளா அல்லது இல்லையா அல்லது அதற்கு முன்னரா என்று முதலில் பார்ப்போம்…கவனியுங்கள்: பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுதும் ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டார்கள். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து…(இப்பொழுது, அதற்கு முந்தின நாள் அவன் அதை அறிந்திருக்கவில்லை; ஏதோக் காரியம் சம்பவித்திருந்தது, அவன் நிர்வாணமாக்கப்பட்டான் என்று ஏதோ ஒன்று அவனுக்கு வெளிப்படுத்தினது)…ஒளித்துக் கொண்டேன் என்றான். அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்?…விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். 181 அவன் புசித்த விருட்சத்தின் கனி அவன் நிர்வாணி என்பதை உணரச் செய்ததா? நான் அவ்வப்போது கூறியுள்ளதுபோல, (இது கேலியல்ல, நான் ஒரு கேலிக்காக இதை பொருட்படுத்திக் கூறவில்லை) “ஆனால் ஆப்பிள்களைப் புசிப்பது ஸ்திரீகள் நிர்வாணமாயிருப்பதை அவர்களுக்கு உணர்த்துமானால், அப்பொழுது நாம் மீண்டும் அவர்களுக்கு ஆப்பிள் பழங்களைத் தருவதே மேலானதாகும்.” புரிகிறதா? அதனால் நிர்வாணமாக்கப்படவில்லை. அது ஒரு மரமாகவோ, அவர்கள் புசித்தது ஒரு ஆப்பிள் பழமாகவோ இருக்கவில்லை, அது பாலியலாயிருந்தது. கவனியுங்கள். …புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். அப்பொழுது…கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்ச்சித்தது…(ஹூ?)…சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன். (பாருங்கள், ஆதாமினால் அவள் கர்ப்பந்தரிப்பதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே) 182 ஆதாம் ஏவாளை அறிந்தான், அவள் கர்ப்பவதியாகி ஆபேலைப் பெற்றாள்—பெற்றாள். 183 ஆனால் நான் ஒரு சரியான திசையிலிருந்து உங்களிடத்தில் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது அவள் விருட்சமாயிருந்தாள் என்றும், ஒவ்வொரு ஸ்திரீயும் ஒரு கனிவிருட்சமாயிருந்தாள் என்றும் நிரூபிப்பதற்காகவே இதைக் கேட்கிறேன். எத்தனைபேர் அதை அறிவீர்கள்? நீங்கள் உங்களுடைய தாயாரினுடைய கனியாயிருக்கவில்லையா? நிச்சயமாக. நீங்கள் அவ்வாறுதான் இருக்கிறீர்கள். “கனியின் மத்தியில் இல்லை விருட்சத்தின் மத்தியில் உள்ளது, அவள் தொடக் கூடாத கனி.” 184 நீங்கள் கவனிப்பீர்களேயானால், இயேசு ஜீவ விருட்சமாயிருந்தாரல்லவா? 6-வது அதிகாரத்தில், “நானே வானத்திலிருந்து, தேவனிடத்திலிருந்து வந்த ஜீவ அப்பம்” என்று வாக்களிக்கவில்லையா? 185 ஒரு மனிதன்…ஸ்திரியினுடைய…பாருங்கள், பிறப்பினூடாக, ஸ்திரியின் மூலமாக நாம் யாவரும் மரிக்கிறோம்; ஏனென்றால் நாம் ஒரு ஸ்திரீயினுடைய பிறப்பின் மூலமாக நாம் மரணத்திற்குட்பட்டிருக்கிறோம் (அது சரியா?) மனிதனுடைய பிறப்பினூடாக நாம் யாவரும் என்றென்றுமாய் ஜீவிக்கிறோம். ஸ்திரீயானவன் ஒரு மரண விருட்சமாயிருக்கிறாள், மனிதன் ஒரு ஜீவ விருட்சமாயிருக்கிறான்; ஏனென்றால் ஸ்திரீயானவள் தனக்குள்ளாக ஜீவனைக் கூட உடையவளாயிருப்பதில்லை. அது முற்றிலும் உண்மையே. அந்த கரு உயிர்மத்தின் ஜீவன் மனிதனிலிருந்தே சரியாக உண்டாகிறது. அது ஸ்திரீக்குள்ளாகச் செல்கிறது, ஸ்திரீயானவள் ஒரு அடைகாகும் கருவியேயல்லாமல் வேறொன்றுமல்ல. குழந்தையானது தொப்புள் கொடியைத் தவிர வேறெதனோடும் தாயினிடம் தொடர்புடையதாயிருக்கவில்லை. அந்தத் தாயினுடைய ஒரு துளி ரத்தம் கூட குழந்தைக்குள்ளாக இல்லை; ஆனால் அவளுடைய இரத்ததில் பிறந்தாலும், குழந்தைக்குள் தாயினுடைய இரத்தம் ஒரு துளி கூட கிடையாது. போய் கண்டறியுங்கள்…அல்லது மருத்துவரின் புத்தகத்தில் வாசித்துப் பாருங்கள் அல்லது உங்களுடைய மருத்துவரைக் கேட்டுப் பாருங்கள், அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது அங்கில்லை, இல்லை ஐயா, தாயினுடைய இரத்தம் ஒரு துளிகூட கிடையவே கிடையாது. அவள் கருமுட்டையாயிருக்கிறாள், அவ்வளவுதான். ஜீவன் மனிதனிடத்திலிருந்தே உண்டாகிறது. 186 ஸ்திரீயினூடாக, இயற்கையான பிறப்பினூடாக அதை காண்பிப்பதற்கு அது ஒரு அழகான மாதிரியாயுள்ளது, நாம் யாவரும் மரிக்க வேண்டும், ஏனென்றால் நாம் துவக்கத்திலேயே மரித்தவர்களாயிருக்கிறோம். மனிதனாகிய கிறிஸ்து இயேசு மூலமாக மாத்திரமே நாம் ஜீவிக்க முடியும். ஏதேன் தோட்டத்தில் இரண்டு விருட்சங்கள் இருந்தன. உங்களால் இதை புரிந்து கொள்ள முடியவில்லையா? 187 கவனியுங்கள்! அந்நாளிலே இந்த விருட்சத்தை காவல் புரிந்தது ஒரு கேரூபினாயிருந்தது. அதாவது அவர்கள் அந்த ஜீவ விருட்சத்தை எப்போதாவது ருசித்துவிட்டால், அப்பொழுது அவர்கள் என்றென்றும் உயிரோடிருப்பர். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? அவர்கள் என்றென்றும் உயிரோடிருப்பர். முதல் முறை அவர்கள் அதை ருசிபார்க்க முடிந்தபோது…தூதன், “நாங்கள் அதைக் காவல்புரிவோம்” என்றான். அதற்கான வழியைக் காவல்செய்ய தோட்டத்திற்கு கிழக்கே கேரூபீங்களையும், வீசிக் கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார். கேரூபிங்களை கிழக்கே காவல் செய்ய வைத்து, (இந்த விருட்சத்தண்டை) வர முடியாதபடிக்கு காவல்செய்ய வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். 188 இயேசு வந்தபோது, அவர், “நானே ஜீவ அப்பம், இந்த அப்பத்தை புசிக்கிறவன் ஒரு போதும் மரியான்” என்றார். அங்கேதான் உங்களுடைய விருட்சம் உள்ளது. 189 அதுதான் உங்களுடைய ஸ்திரீயின் நிலைமையாகும், உங்களுடைய பாலியல் சேர்க்கை மரணத்தையேக் கொண்டு வருகிறது. பாலியல் வாஞ்சை என்ற ஒன்று நிச்சயம் உண்டாயிருக்கிறபடியால், அதனால் விடப்பட்டுள்ளது மரணமே. ஆவிக்குரிய பிறப்பு என்ற ஒன்று நிச்சயம் உண்டாயிருப்பதால், அதனால் விடப்பட்டிருப்பதோ நித்திய ஜீவனாயிருக்கிறது. மரணம் ஒரு ஸ்திரீயின் பிறப்பினூடாக உண்டாகிறது, ஒரு மனிதனுடைய பிறப்பினூடாக ஜீவன் உண்டாகிறது. ஆமென்! அங்குதான் காரியமே உள்ளது. 190 இப்பொழுது நாம் காயீனிடத்திற்கு திரும்பிச் செல்வோம். அந்த ஆவி, அந்த அற்பத்தனம் எங்கிருந்து உண்டானது என்று உங்களால் எனக்குக் கூற முடியுமா? காயீன்…பாருங்கள், தேவ குமாரனாயிருந்த ஆதாமின் குமாரனாய் காயீன் இருந்திருந்தால், அந்தப் பொல்லாங்கு எங்கிருந்து வந்தது? முதலாவது காரியமென்னவெனில் அவன் பிறந்தபோது, அவன் வெறுத்தான், அவன் ஒரு கொலைகாரனாயிருந்தான், அவன் பொறாமையுள்ளவனாயிருந்தான். இப்பொழுது அவனுடைய தகப்பனின் சுபாவத்தை எடுத்துப் பாருங்கள், துவக்கத்திலேயே, அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி, அவன் துவக்கத்தில் இருந்து…அவன் மிகாவேலைக் குறித்து பொறாமையுள்ளவனாயிருந்தான், அங்குதான் முழு தொல்லையும் ஆரம்பமானது. எத்தனைபேர் அதை அறிவீர்கள்? காயீன் தன் தகப்பனுடைய சுபாவத்தை உடையவனாயிருந்தான், எனவே அவன் தன் சகோதரனைக் குறித்து பொறாமையாயிருந்து, அவனைக் கொன்றான். அந்த சுத்தமான…அந்த சுத்தமான ஓடையிலிருந்து இந்த சுபாவம் உண்டாயிருந்திருக்க முடியாது. அது…இந்த தாறுமாறாக்கப்பட்ட ஓடையிலிருந்தே உண்டாக வேண்டியதாயிருந்தது. காயீன் பிறந்தவுடனே, இப்பொழுது அவனைக் கவனியுங்கள். 191 அப்பொழுது காயீனுக்குப் பிறகு ஆபேல் பிறந்தான், அதன் பின்னரே அவள் ஆதாமினால் கர்ப்பந்தரித்தாள். அவன் அவளை அறிந்தபோது—அறிந்தபோது, அவள் ஆபேல் என்னும் குமாரனைப் பிறப்பித்தான். ஆபேல் கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியாயிருந்தான்; ஆபேல் கொல்லப்பட்டபோது, சேத் அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டான்; மரணம், அடக்கம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்ற மாதிரியில் உள்ளது. 192 ஆனால் இப்பொழுது, காயீன் ஆராதித்தான்; அவனுடைய எல்லா மாம்சபிரகாரமான கிரியைகளும் இன்றைக்கு உள்ள மாம்சபிரகாரமான சபையைப் போன்றே உள்ளன; அவர்கள் சபைக்குச் செல்கிறார்கள், அவர்கள் ஆராதிக்கிறார்கள். காயீன் ஆராதித்தான்; அவன் ஒரு நாத்திகனாயிருக்கவில்லை, அவன் ஒரு கம்யூனிஸ்டாயிருக்கவில்லை. காயீன் ஒரு விசுவாசியாயிருந்தான்; அவன் தேவணடை சென்று, அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவன் ஆபேல் செய்த எல்லா மார்க்க சம்மந்தமான காரியத்தையும் செய்தான், ஆனால் அவன் ஆவிக்குரிய வெளிப்பாடாகிய தேவனுடைய சித்தத்தைப் பெற்றிருக்கவில்லை. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! அங்குதான் காரியமே உள்ளது. உங்களுக்கு இது புரிகிறதா? அவன் ஆவிக்குரிய வெளிப்பாட்டைப் பெற்றிருக்கவில்லை, இன்றைக்கு சபையோடும் உள்ள காரியமும் அதுதான். இயேசு தம்முடைய சபையை அந்த ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் கட்டுவதாகக் கூறினார். நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? ஓ, என்னே, இப்பொழுது உங்களுடைய கண்கள் திறக்கப்பட முடியும். பாருங்கள், ஆவிக்குரிய வெளிப்பாடு. 193 காயீன் வந்தான்; அவள் ஒரு பலிபீடத்தைக் கட்டினான், அவன் ஆராதித்தான், அவன் பலியைக் கொண்டுவந்தான், அவன் முழங்காற்படியிட்டான், அவன் தேவனைத் துதித்தான், அவன் தேவனை ஆராதித்தான், ஆபேல் செய்த பக்தியான ஒவ்வொரு காரியத்தையும் காயீன் செய்தான். ஆனால் அவன் ஆவிக்குரிய வெளிப்பாட்டை பெற்றிராதபடியால், தேவன் அவனை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டாரே! 194 அதேவிதமாகவே காயின் வம்சத்தை பின் தொடர்ந்துப் பாருங்கள்: காயீனிலிருந்து பேழையண்டைக்கு, பேழையிலிருந்து இஸ்ரவேலருக்குள், இஸ்ரவேலரிலிருந்து இயேசுவானவர் வரை, இயேசுவிலிருந்து இந்நாள் வரையிலுமே தொடர்ந்து பாருங்கள்; அது மாம்சபிரகாரமான, அடிப்படையான சபையாய், வணங்காத, வெற்றாசாரமான, கல்வியியலைக் கொண்டதாயிருக்கிறதா என்று பாருங்கள். ஆவிக்குரிய வெளிப்பாடில்லாமல், வேதவாக்கியங்களை அறிந்துள்ள மனிதனால், எல்லா உபதேசங்களையும், வேத சாஸ்திரங்களையும் அறிந்துள்ளவனால், அவர்களால் அதை அந்தவிதமாக விளக்கிக் கூற முடியும் என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரலை சொடுக்குகிறார்—ஆசி.] அது உண்மை. அதுவே காயீனின் உபதேசமாய் உள்ளது. 195 வேதமோ, “அவர்களுக்கு ஐயோ! ஏனென்றால் இவர்கள் காயீனுடைய உபதேசத்தில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி கெட்டுப்போனார்கள்” என்று உரைத்துள்ளது. அதே யூதாவின் புத்தகத்தில், அவன், “அவர்கள் இந்த ஆக்கினைக்கென்று முன் குறிக்கப்பட்டிருந்தனர்” என்றான். நிச்சயமாகவே, அவர்கள் அதற்காகவே முன் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். புரிகிறதா? பிலேயாம் என்னாவாயிருந்தான்? அவன் ஒரு பேராயராயிருந்தான். அவன் எல்லா சபைக்கு மேலாக இருந்தான். அவன் தன்னால் முடிந்தளவு அடிப்படையான காரியத்தோடு அங்கே மேலேறி வந்தான். அவன்…செலுத்தினான்…அங்கே அவன் பிரபலமான முக்கியஸ்தரோடு மேலே நின்று கொண்டிருப்பதைப், தங்களுடைய மகத்தான பிரபலங்களோடு அங்கே மேலே நிற்பதைப் பாருங்கள். அவர்கள் நாத்திகர்களாயிருக்கவில்லை, அவர்கள் விசுவாசிகளாயிருந்தனர். 196 அந்த—அந்த மோவாபின் வம்சம் லோத்தினுடைய குமாரத்தியிலிருந்து தோன்றினது. லோத்து…ஜீவித்து…லோத்தினுடைய குமாரத்தி தன் தகப்பனோடு சயனித்து, கருவுற்று ஒரு பிள்ளை பெற்றெடுத்தாள், அந்தப் பிள்ளை…மோவாபின் கோத்திரமாக வளர்ந்தது. அவர்கள் ஒரு பெரிய ஸ்தாபனமாயிருந்தனர். மகத்தானவர்களாயும், புகழ்ச்சி நயமிக்கவர்களாயும், அவர்கள் இளவரசர்களாயும், ராஜாக்களாயும், முக்கியஸ்தர்களாயுமிருந்தனர். அவர்கள் பேராயர்களையும், முக்கிய சபை சங்க மேலான தலைவர்களையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் உடையவர்களாயிருந்தனர். 197 இங்கே ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள், மற்றொரு குழுவினர், இஸ்ரவேலர் வருகின்றனர். ஒரு ஸ்தாபனமற்ற பண்டைய சிறு குழுவினராய், ஸ்தாபன பாகுபாடற்றவர்களாயிருந்தனர். அவர்கள் செய்யப்பட வேண்டும் என்று நியாயப்பிரமாண வரைப்படத்தில் இருந்த ஒவ்வொரு காரியத்தையும் மிகச் சரியாகச் செய்திருந்தனர். ஆனால் அது என்னவாயிருந்ததென்றால், அவர்கள் ஆவிக்குரிய வெளிப்பாட்டைப் பெற்றிருந்தனர், தேவன் ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் அவர்களோடிருந்தார். 198 ஓ, அவர்கள் மாம்சபிரகாரமான காரியங்களை உடையவர்களாயிருந்தார்கள் என்பதை நான்—நான் அறிவேன், ஜனங்களோ, “அவர்கள் ஒன்றுக்கும் உதவாக் கூட்டம், அவர்களை உதைத்துத் தள்ளுவதைத் தவிர அவர்களோடு செய்வதற்கு ஒன்றுமேயில்லை” என்றனர். ஆனால் அவர்கள் ஆவிக்குரிய வெளிப்பாட்டைப் பெற்றிருந்தனர், அவர்கள் அடிக்கப்பட்ட கன்மலையை உடையவர்களாயிருந்தனர், அவர்கள் ஒரு வெண்கல சர்ப்பத்தை உடையவர்களாயிருந்தனர், அவர்களோடு செல்லுகிற ஒரு அக்கினி ஸ்தம்பத்தை அவர்கள் உடையவர்களாயிருந்தனர். அல்லேலூயா! நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று நீங்கள்—நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் நான் உணர்ச்சிவசப்படவில்லை. நான் நலமாக உணருகிறேன். 199 கவனியுங்கள்! நான், “அந்த மாறாத அதே தேவன் இன்றைக்கு நம்மோடு ஜீவிக்கிறார்” என்று நினைக்கிறேன். அது இன்னமும் வார்த்தையின் ஆவிக்குரிய வெளிப்பாடாய் உள்ளது. நிச்சயமாகவே அது ஆவிக்குரிய வெளிப்பாடாய் உள்ளது. அது சரியாக நித்தியமானதாயுள்ளது. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! ஆம் ஐயா. 200 இதோ அவன் அடிப்படையான காரியங்களோடு அங்கே நின்றான்: அவர்கள் பாப்டிஸ்டுகளின் கூட்டமாய், பிரஸ்பிடேரியங்களாய் அந்த மலையின்மேல் நின்றனர், அங்கே அவர்களுடைய பேராயரை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் ஒரே விதமான மார்க்க ரீதியான பக்தியாயிருந்தனர், அவர்களும் அதே தேவனையே தொழுது கொண்டனர். அவர்கள், “அங்கே உள்ள உதாவுக் குப்பைக் கூட்டத்தை கீழே நோக்கிப் பாருங்கள். ஏன்? அவர்களுக்கு ஒரு ஸ்தாபனம் கூட இருக்கவில்லை. அவர்கள் கத்துகிற, கூச்சலிடுகிற, பரிசுத்த உருளையர் கூட்டமேயல்லாமல் வேறொன்றுமில்லை.” என்றனர். 201 அது சரியா? சரியாக அவர்கள் அவ்வாறேயிருந்தனர். அவர்கள் பரிசுத்த உருளையராயிருந்தனர் என்பதை நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் ஆதியாகமத்திற்குத் திரும்பி சென்று, அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தபோது நடந்ததைக் கண்டறியுங்கள். ஒரு அற்புதம் நிகழ்த்தப்பட்டது, மீரியாம் ஒரு தம்புருவை எடுத்துக் கொண்டு, கரையிலே நின்று அதை அடித்து ஆவியில் நடனமாடினாள், மோசே ஆவியில் பாடினான். அது நாம் பரிசுத்த உருளை என்று அழைக்கப்படும் ஒரு கூட்டமாயிருக்கவில்லையென்றால்,…பாடிக்கொண்டும், குதித்துக்கொண்டும், துதித்துக்கொண்டுமிருந்து அந்தக் கூட்டம் வேறென்ன என்று எனக்குத் தெரியாது. எல்லா நேரத்திலுமே மற்ற தேசங்கள் அவர்களை வெறுத்தன, ஆனால் தேவன் அவர்களோடிருந்தார். அவர்கள் ஆவிக்குரிய வெளிப்பாட்டை உடையவர்களாய் அந்த அக்கினி ஸ்தம்பத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். 202 மோவாப், “இப்பொழுது, இங்கே நோக்கிப் பாருங்கள். நாம் எல்லா முக்கிய உயர்பதவி சபைத் தலைவர்களையும், எல்லா பேராயர்களையும், எல்லா திருச்சபை மூப்பர்களையும் இங்கு அழைத்து வருவோம். நாம் இதைக் குறித்த ஏதோ ஒன்றை செய்வோம், ஏனென்றால் நாம் ஒரு பக்தியான தேசமாயிருக்கிறோம். எனவே நாம் அந்த பிரச்சாரம் நம்முடைய அருமையான ஸ்தாபனத்தில் கலந்துவிட அனுமதித்துவிடக் கூடாது” என்றனர். 203 ஆகையால் அவர்கள் இவர்களை அங்கே அழைத்துச் சென்றனர். அவர்கள் பன்னிரண்டு பலிப்பீடங்களைக் கட்டினர்: அந்தவிதமாக இஸ்ரவேலரும் பன்னிரண்டு பலிபீடங்களைக் கட்டியிருந்தனர். மோவாபியர் அந்த பலிபீடங்களின் மேல் பன்னிரண்டு காளைகளை பலியாகச் செலுத்தினர்; தேவன் கேட்டிருந்ததை இஸ்ரவேலர் சரியாக செய்திருந்தனர்; அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு பிரதிநித்துவமாக அதன்மேல் பன்னிரண்டு ஆட்டுக்காடாக்களைப் பலியிட்டனர்; இரண்டு இடங்களிலுமே பன்னிரண்டு ஆட்டுக்கடாக்களை பலியிட்டனர். 204 எல்லா முக்கியஸ்தர்களும், பேராயர்களும் மற்றும் உள்ள யாவரும் சுற்றி நின்றனர். அவர்கள் பலியைத் தகனித்தனர். அப்பொழுது அவர்கள் ஜெபித்தனர், அவர்கள் தங்களுடைய கரங்களை யோகோவாவினிடத்தில் உயர்த்தி, “யோகோவாவே, எங்களுக்குச் செவிகொடும்!” என்றனர். அவர்கள் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர்? அவர்களுடைய பிலேயாம் அந்தவிதமாக புறப்பட்டுச் சென்றபோது, ஆவியானவர் அவன் மீது வந்திறங்கினார். நிச்சயமாக (அவன் ஒரு மாம்சபிரகாரமானவனாயிருந்தான்) 205 ஆவியானது ஒரு மாய்மாலக்காரன் மீது விழக் கூடும் என்று வேதம் உரைத்துள்ளது. நான் அதைக் குறித்துப் போதித்ததை இப்பொழுது நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். “மழையானது நீதியுள்ளவர்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது.” ஆனால் அதை வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், அங்குதான் நீங்கள் அதைப் புரிந்துக் கொள்ள முடியும். 206 அப்பொழுது அவன் அதைச் செய்தபோது…ஆவியானவர் அவன்மீது வந்தபோதிலும் சத்தியத்தையேக் கூறினார், அவன் இஸ்ரவேலரை சபிக்க முயன்றான், ஆனால் அவன் இஸ்ரவேலரை ஆசீர்வதித்துவிட்டான். 207 இப்பொழுது, தேவன் ஒரு அருமையான சபைக்கு, ஒரு அருமையான பேராயருக்கு, ஒரு அற்புதமான போதகருக்கு, ஒரு கூட்ட படித்த மேதைகளுக்கு மரியாதை அளிப்பதாயிருந்தால், அவர் அந்தப் பலியை ஏற்றுக் கொள்ள் கடமைபட்டவராயிருந்திருப்பார், ஏனென்றால் அவன் இஸ்ரவேலரைப் போன்று அடிப்படையில் சரியாக இருந்தான்; ஆனால் அவன் வார்த்தையின் ஆவிக்குரிய வெளிப்பாட்டையும், தேவனுடைய சித்தத்தையும் பெற்றிருக்கவில்லை. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, அதுவே இன்றைக்கு வித்தியாசமாயுள்ளது. 208 இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர்கள், “அந்த நபரைவிட்டு விலகிப் போங்கள். அவன் ஒரு சமாரியன் என்றும், அவன் பையத்தியக்காரன் என்றும் நாங்கள் அறிவோம். நீ எங்களுக்குப் போதிக்கிறாயா? நீ விபச்சாரத்தில் பிறந்தாய். நீ ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளையாய் வந்தாயேயன்றி வேறொன்றுமல்ல. உன்னுடைய தந்தை யார்? தேவன் உன்னுடைய பிதா என்று கூறுகிறாயே, நீ தூஷணக்காரன்? ஏன்? நீ அப்படித்தானே எங்களிடத்தில் பொருட்படுத்திக் கூறுகிறாய்? நாங்கள் பிரசங்கிகளாயிருந்து வருகிறோம், நாங்கள் பேராயர்களாயிருந்து வருகிறோம். எங்களுடைய பூட்டனாரினுடைய பூட்டனாரின் பூட்டனாரின் காலத்திலிருந்தே வழி, வழியாக தொடர்ந்து பிரசங்கிமார்களாயும், பேராயர்களாயுமிருந்து வருகிறோம். நாங்கள் சபையில் பிறந்து, வளர்க்கப்பட்டோம். நாங்கள் மிகப்பெரிய உயரிய வேதாகம கருத்தரங்குகளில் இருந்திருக்கிறோம். நாங்கள் நியாயப்பிரமாணத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் அறிந்துள்ளோம். நீ எங்களுக்கு போதிக்க முயற்சிக்கிறாயா? நீ எங்கேயாவது பள்ளிக்கு எப்போதாவது போயிருக்கிறாயா? நீ இதை எங்கே கற்றுக் கொண்டாய்?” என்றெல்லாம் கேட்டனர். 209 அப்பொழுது அவரோ, “நீங்கள்…உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்” என்றார், இயேசுவே கூறினார். 210 அவர்களுக்கு மத்தியில் அற்புதங்களோ, அடையாளங்களோ இல்லாதிருந்தன. அவர்களுக்கு மத்தியில் தெய்வீக சுகமளித்தல்கள் மற்றுமுள்ள காரியங்கள் இல்லாதிருந்தன. அவர் மத்தியில் ஆசீர்வாதங்களே இல்லாதிருந்தன. ஆனால் இயேசு ஒரு முற்றிலுமான ஆவிக்குரியப் பிரகாரமான வேதவாக்கியங்களின் வெளிப்பாடாயிருந்தார். 211 அவர்கள், “ஏன், அது இன்ன—இன்ன விதமாய் எழுதப்பட்டிருக்கிறதே” என்றனர். 212 இயேசு, “ஆம், அது இப்படியும் கூட எழுதப்பட்டிருக்கிறதே” என்றார். ஆனால் தேவன் தம்முடைய மனிதனை தம்முடைய அடையாளங்களினால் ரூபகாரப்படுத்தினார். 213 பேதுரு அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் அதேவிதமாகக் கூறினார், அவன், “இஸ்ரவேலரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்” என்றான். (அங்குதான் உங்கள் காரியமே உள்ளது) “அங்கே பெரிய சனகரீம் ஆலோசனை சங்கத்தினால்…முன்னறிவின்படியே ஒப்புக்கொடுக்கப்பட்ட…ஆனால் தேவனுடைய முன்னறிவினால், தேவன் இந்த மரணத்திற்கேதுவாய் மரிக்கும்படி அவரை முன்னியமித்திருந்தார். நீங்கள் அவரை கொடூரமான அக்கிரமக்காரருடைய கரங்களில் ஒப்புக்கொடுத்தீர்கள். நீங்கள் ஜீவாதிபதியைச் சிலுவையிலறைந்தீர்கள், தேவன் அவரை எழுப்பினார், நாங்கள் அதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்.” 214 வ்வூயு, என்னே ஒரு பிரசங்கியார்!…அவனால் தன்னுடைய சொந்த பெயரையும் கூட கையெழுத்திட முடியாது, ஆனால் அவன் தேவனை அறிந்திருந்தான். அவர்கள், “அவன் இயேசுவுடனே கூட இருந்தவரென்றும், அவனுக்கு சம்பவித்திருந்ததையும்” அவர்கள் அறிந்து கொண்டார்கள். நிச்சயமாகவே, அது ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடாய் உள்ளது. ஓ, என்னே. இப்பொழுது அங்குதான் காரியமே உள்ளது. 215 காயீன் அந்த மாம்சபிரகாரமான நிலைமையில் இருந்தான், அந்த மாம்சபிரகாரமான சபையும் இன்றைக்கு அதே நிலையில்தான் உள்ளது. ஆவிக்குரிய சபையோ இன்னமும் அக்கினிஸ்தம்பத்தையும், இன்னும் அடையாளங்களையும், அற்புதங்களையும், இன்னமும் மாறாத கிறிஸ்துவையும் உடையதாயிருக்கிறது: அது ஏதேன் தோட்டத்திலிருந்து ஆட்டுக்குட்டியின் இரண்டாம் வருகை வரையில் எல்லாவிதத்திலுமே மரிக்கும் ஆட்டுக் குட்டியையே ரூபகாரப்படுத்துகிறது. அவர் முற்றிலும் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 216 அந்த காயீனின் வம்ச வரிசையில், பக்தியான, மெருகேற்றப்பட்ட, மேதைகள் இருந்தனர், சரியாக அந்தவிதமாகவே இருந்து வந்தனர். அதேவிதமாகவே, ஒவ்வொரு நாளும் அதேவிதமாகவே இருந்தனர். காயீன் ஆபேலுக்கு செய்தது போல குற்றங்காண்போர்களும், துன்பப்படுத்துவோர்களுமாய் இருந்தனர். எனவே அவர்கள் இன்றைக்கு அவ்வண்ணமாக இருக்கின்றனர், அவ்வாறே இருந்து வருகின்றனர், எப்போதும் அவ்விதமாகவே இருப்பார்கள்; மாம்சபிரகாரமானவர்கள், அவிசுவாசிகள். அது உண்மை. 217 இப்பொழுது ஆதியாகமம் 3:8, நான் 20-ம் வசனத்தையுங்கூட இங்கே வாசிக்கிறேன், நான் சற்று முன்பு அதை பார்த்துக்கொண்டிருந்தேன்: ஆதாம்…ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானாவள். (பாருங்கள், அது இந்த வஞ்சித்தல் நடந்துவிட்டப் பிறகு) 218 காயீன்…“இப்பொழுது பொருங்கள்!” நீங்களோ, “எப்படி ஒரு பாம்பினால், ஒரு சர்ப்பத்தினால் அவ்வாறு செய்ய முடிந்திருக்கும்?” என்று கேட்கலாம். 219 ஆனால், சகோதரனே, இங்கே கவனியுங்கள், அது ஒரு சர்ப்பமாயிருந்தது என்று வேதம் கூறவில்லை; வேதம், “அது சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் மிகவும் தந்திரமுள்ளதாயிருந்தது” என்று உரைத்துள்ளது. அது ஒரு ஊர்வனவாயிருக்கவில்லை, அது ஒரு மிருகமாயிருந்தது. அது…அங்கே…அவ்வாறுதான் இருந்தது. 220 நீங்கள் விரும்பினால், நமக்கிடையே ஒரு சிறு அடையாளத்தைப் போல நான் இதை உங்களுக்குக் கூறட்டும். அங்குதான் விஞ்ஞானம் குழப்பமடைந்துள்ளது. ஒரு மனிதனுக்கு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது ஒரு மனிதக் குரங்கு என்றே அவர்களால் கண்டறிய முடிந்துள்ளது. எத்தனை பேர் அதை அறிந்துள்ளீர்கள்? ஆனால் அங்கே ஒரு காரியம் இடையில் உண்டு. ஆயினும் அவர்களால் மனித எலும்புகளை மனித குரங்கின் எலும்புகளோடு சரிவர இணைத்துப் பார்த்து கூற முடியவில்லை, அதே சமயத்தில் அது மிகவும் நெருக்கமான ஒன்றாக உள்ளது. அவர்கள் அதை ஒரு தவளைக்குஞ்சிலிருந்து ஒப்பிட கொண்டு வரலாம், அவர்கள் அதை ஒரு தலைப்பரட்டையிலிருந்து ஒப்பிட கொண்டு வரலாம். அவர்கள் அதை ஒப்பிட ஒரு கரடியண்டைக் கொண்டு வரலாம். நீங்கள் ஒரு கரடியை எடுத்து, அதனுடைய தோலை உரித்துவிட்டால், அது ஒரு சிறிய ஸ்திரீயை போன்றேயிருக்கும். அதேவிதமாகவே இருக்கும். அதை தோலூரித்து, அங்கே நிற்கவைத்தால் ஸ்திரீயைப் போன்றே…ஸ்திரீ நிற்பது போன்றேயிருக்கும். அவளும் ஒரு கரடியைப் போலவே இருக்கிறாள். கரடியினுடைய பாதமும், கரமும் மனித இனத்தைப் போன்றே உள்ளது. ஆனால் ஒரு மனித குரங்கோ அதைப் பார்க்கிலும் நெருக்கமானதாய் இருக்கிறது. அது கிட்டத்தட்ட மனிதனைப் போன்றிருந்தாலும், அவர்களால் அதைக் கண்டறிய முடியவில்லை. 221 நீங்கள் அதை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், இங்கே ஒரு சிறு இரகசியம் உள்ளது. அது எங்கே உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? அது அவர்களிடத்திலிருந்து மறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேண்டுமானால் எல்லா எலும்புகளையுமே தோண்டிப் பார்க்கலாம். அவர்கள் தோண்டிப்…பார்க்கலாம்…சிற்பிகள் தோண்டிப் பார்க்கலாம், விஞ்ஞானம் மற்றும் காலக்கணிப்பாய்வாளர் அணு அளவைகளினால் கால அளவை கணக்கிட்டாலும், அவர்கள் அதை ஒரு போதும் புரிந்து கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், சரிப்பமானது பூமியின் மேலிருந்த சகலத்தைப் பார்க்கிலும் மேலானதாய், ஒரு மனிதனைப் போன்றிருந்தது, தேவன் அதை சபித்து, அது தன்னுடைய வயிற்றிலே ஊர்ந்து போகும்படிச் செய்துவிட்டார், எனவே அது ஒரு மனிதனைப் போன்ற சாயலேயில்லாமல் ஒரு பாம்பாக மாறியிருக்கிறது. இப்பொழுது அப்படியே உங்களுடைய தலையை சொரிந்து கொள்ளுங்கள், விஞ்ஞானிகளான அவர்கள் அதனை சற்று ஆய்ந்து பார்க்கட்டும். 222 ஆனால் வேதமோ, “சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் அது தந்திரமுள்ளதாயிருந்தது” என்று கூறுகிறது. அது உண்மை. அது மனிதனுக்கும் குரங்கிற்குமிடையே இருந்த இணைப்பாயிருந்தது, தேவனோ அதை சபித்து, அது செய்திருந்த காரியத்தின் நிமித்தமாக தன்னுடைய வயிற்றிலே ஊர்ந்து செல்லும்படி செய்துவிட்டார். அது இந்த ஸ்திரீயை வஞ்சித்தது, அவள் தன்னுடைய முதல் குமாரனைப் பெற்றெடுத்தாள், அதுவே காயீனாயிருந்தது, சுபாவப்படி சர்ப்பத்தினுடைய சொந்த தூண்டுதலாயிருந்தான், பிசாசு சர்பத்திற்குள் நுழைய, அது அதனைச் செய்தது. 223 அப்பொழுது அவள் கர்ப்பந்தரித்து, பிரசவித்தாள், அவள் வஞ்சிக்கப்பட்டப் பிறகு அவள் மீண்டும் கர்பந்தரித்தாள். இப்பொழுது கவனியுங்கள், அவள் வஞ்சிக்கப்பட்டாள், அவள் ஏறக்குறைய…அவள் தவறு செய்துவிட்டாள். ஆனால் அவள் தன்னுடைய கணவனால் கர்ப்பவதியானபோது, அவள் சரியாக முறைப்படியானவளாக இருந்தாள், ஏனென்றால் அதற்குப்பின் அநேக, அநேக முறைகள், அநேக மாதங்கள், அநேக முறைகள், அநேக மாதங்கள், அநேக நாட்கள் அவள் ஆதாமோடு இருந்திருப்பாள். உங்களால் அதைக் கூற முடியாது, நமக்குத் தெரியாது, ஆனால் அவள் ஆதாமினுடையதையும் பெற்றெடுத்தாள். 224 யாரோ ஒருவர் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார், அதாவது, “நல்லது, குமாரனை…அவன் கூறி…அவள்…காயீன் பிறந்தபோது, அவள், ‘கர்த்தரிடத்திலிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன்’” என்றாள். முற்றிலுமாக, நிச்சயமாகவே, அது அவ்வாறே இருக்க வேண்டியதாயிருந்தது. அது இயற்கையின் விதியாயிருந்தது. இன்றைக்கும் நீங்கள் சரியாக அந்தவிதமாகவே இருக்கிறீர்கள். நீங்கள் பிறக்கும்போது, தேவன் அப்படியே இறங்கி வந்து உங்களை உருவாக்குகிறதில்லை. நீங்கள் உங்களுடைய தாய் தந்தையரின் கர்ப்பப்பிறப்பாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு…அங்கே ஒரு…உங்களுடைய பிள்ளைகள் உங்களுடைய கர்ப்பப் பிறப்பாயிருப்பார்கள். அது எல்லா நேரத்திலுமே பிரதி உற்பத்தியாய் உள்ளது, மரங்களின் விதைகள் மற்றுமுள்ள அந்தவிதமான காரியங்களைப் போலவேயாகும்; ஆனால் மூல காரியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும். எனவே அது இதனை விளக்குகிறது என்று நான் நம்புகிறேன். 225 நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது? இனிமேல் நேரமேயில்லை. இந்த நல்ல அடுத்த ஒரு கேள்விக்கு செவி கொடுங்கள்…அதாவது நாம் ஞாயிறு அதைப் பார்க்கப் போகிறோம்: “எல்லோரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்…” (நாம் அதை அறிந்து கொள்ள விரும்புகிறோம்) “…கிறிஸ்து.” அந்த நேரத்திலே…இப்பொழுது, நான் அதன் பேரிலான சில வேதவாக்கியங்களை, நல்ல வேதவாக்கியங்களை எடுத்து வைத்திருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன் [சகோதரன் பிரான்ஹாம் இதற்கு பாகம் இரண்டில், பாரா 361, 60-வது கேள்வியில் பதிலளிக்கிறார்—ஆசி.] 226 அதைப் போன்றே…இதோ ஒரு நல்ல கேள்வி உள்ளது…இதற்கு பதிலளிக்கும்படியாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் நீங்கள் என்னை பொறுத்துக் கொள்வீர்களா? அதற்கு அதுவே பதிலளிக்கக் கூடும். 59. நீர், “துன்மார்கர் நித்தியமாய் எரியமாட்டார்கள்”…என்று கூறும்போது…(நல்லது, நான் இப்பொழுது யோகா சாட்சிக்காரர் அதன் பேரில் கூறினதை கூறினேன், நான் கூறினேனல்லவா?)…துன்மார்க்கர் நித்தியமாக எரியமாட்டார்கள் என்று நீங்கள் கூறும்போது, நீர் அது பாதாளத்தில் அல்லது அக்கினிக் கடலில் என்று பொருட்படுத்திக் கூறுகிறீரா? வெளிப்படுத்தின விசேஷம் அதைக் கூறுகிறது என்பதை நான் அறிவேன் (அது 20-வது அதிகாரம்) அதாவது நரகம் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. அவர்கள் நித்தியமாக எரிந்து போகவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் என்னவாகிறார்கள்? 227 நான், அதைக் குறித்துக் கூறியிருக்கிறது போல, சகோதரனே அல்லது சகோதரியே; அது யாராயிருந்தாலும் சரி; அவர்கள் அழிந்துபோவார்கள், அவர்களுக்கு இனிமேல் ஒன்றுமே இருக்காது. அவர்களுக்கு ஒரு துவக்கம் இருந்தது, அங்கே அவர்களுக்கு முடிவு இருக்கும். அவர்கள் இனிமேல் ஒன்றுமேயில்லாமற் போய்விடுவார்கள். எப்படி…அவர்கள் எவ்வளவுகாலம் எரிவார்கள், அதைக் கூற முடியாது. ஆனால், பாருங்கள், அங்கே… 228 நீங்கள் உங்களுடைய சிந்தையில் இதை புரிய வைத்துக் கொள்ளக் கூடுமானால் நலமாயிருக்கும், பாருங்கள், அது மிகவும் எளிமையானது. ஒரே மாதிரியான நித்திய ஜீவன்தான் உண்டு, அது தேவனிடத்திலிருந்து தாமே வருகிறது. தேவன் மாத்திரமே நித்திய ஜீவனாயிருக்கிறார். நீங்கள் இங்கே கிரேக்க வேதாகம அகராதியில் எடுத்துப் பார்த்தால், ஸோயீ என்ற கிரேக்க வார்த்தை உள்ளதைப் பார்க்கலாம். ஸோயீ என்பது “நித்திய ஜீவனாய்” உள்ளது. நித்திய ஜீவன் என்பது “தேவனாய்” இருக்கிறது. இயேசு, “நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறேன்” என்றார், நீங்கள் இங்கே கிரேக்க வேதாகம அகராதியில் நோக்கிப் பார்த்தால், அதில், “ஸோயீ” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரே நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு. வேதாகமத்தில் எந்த இடத்திலும் நித்திய நரகம் இருக்கும் என்று கூறுகிற ஒரு இடமே இல்லை, அவர்கள், “சதாகாலம்” எரிவார்கள் என்றே வேதம் கூறியுள்ளது. 229 இப்பொழுது, “சதாக்காலம்” என்ற வார்த்தைக்கு சென்று பார்த்தால், அதற்கு எயர்ன்—எயர்ன் என்று உள்ளதைப் பாருங்கள். நீங்கள் இங்கே வேதாகமத்தில் கவனித்தீர்களா? எத்தனை பேர், “எயர்ன், எயர்ன்…” என்று அதில் கூறப்பட்டிருப்பதை எப்போதாவது கேட்டிருக்கிறீர்கள்? எத்தனைபேர் எயர்ன் என்பது “ஒரு குறிப்பிட்ட கால அளவு” என்பதை அறிவீர்கள்? ஏன், நிச்சயமாக, எயர்ன் என்பது “ஒரு குறிப்பிட்ட கால அளவு” என்பதை எவருமே அறிவர். 230 “அவர்கள் எயர்ன் என்ற அர்த்தங்கொண்ட குறிப்பிட்ட காலம் எரிவார்கள்.” “அக்கினிக் கடலுக்குள் தள்ளப்பட்டு, எயர்ன் என்ற அர்த்தங்கொண்ட குறிப்பிட்டக் காலம் எரிந்து போவார்கள்.” எயர்ன் என்பதன் பொருள் “கால அளவுகள்” என்பதாகும். அவர்கள் கோடான கோடி ஆண்டுகளாக தண்டையில் எரியலாம், ஆனால் முடிவாக, அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும், ஒன்று சேர்ந்து அழிந்து போகும்படியாக, பாருங்கள், ஏனென்றால் பரிபூரணமில்லாதிருக்கிற ஒவ்வொரு காரியமும் பரிபூரணத்திலிருந்து தாறுமாறாக்கப்பட்டதாயுள்ளது; அதற்கு ஒரு துவக்கம் இருந்தது, எனவே அதற்கு முடிவு இருக்க வேண்டும். 231 ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ள நாம், ஸோயீயை, “தேவனுடைய சொந்த ஜீவனை” நமக்குள்ளாகப் பெற்றுள்ளோம், நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறோம். சதாகாலங்களிலுமுள்ள ஜீவனை உடையவர்களாய் அல்ல, பாவியோ சதாக்காலங்களிலுமுள்ள ஜீவனை உடையவனாயிருக்கிறான், ஆனால் நாம் “நித்திய ஜீவனை” உடையவர்களாயிருக்கிறோம். 232 அண்மையில் சகோதரன் காக்ஸ் அவர்கள், நாங்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது, நாங்கள் புறப்படும் முன்…அங்கே கற்கள் இருந்தன, அப்பொழுது அவர் ஆயிரக்கணக்கான ஆண்டிற்கு முன் வாழ்ந்த பண்டைய மிருகத்தின் புதைபடிவக் கல்லை எடுத்து “சகோதரன் பிரான்ஹாம், அது எவ்வளவு காலத்திற்கு முந்தினதாயிருக்குமா?” என்று அவர் கேட்டார். 233 அப்பொழுது நான், “ஓ, காலவரிசைப்படி, அது பத்தாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கலாம் என்று நீங்கள் கூறலாம். அது ஏதோ ஒரு விதமான ஒரு காலத்தில் வாழ்ந்த பண்டைய சமுத்திர பெரிய கோர உருவங்கொண்ட பிராணியாய், ஒரு சமுத்திர விலங்காய், அநேக ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாயிருக்கலாம்” என்றேன். 234 அப்பொழுது அவர், “அந்த பிராணியின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மானிட வாழ்க்கை எவ்வளவு குறைவுள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள்” என்றார். 235 அதற்கு நான், “ஓ, ஆனால், சகோதரனே, அந்த காரியத்திற்கு முடிவு உண்டு, ஆனால் கிறிஸ்துவுக்குள் நமக்கு உண்டாயிருக்கிற ஜீவனுக்கோ முடிவு இல்லை. அது இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகள் வாழலாம், ஆனால் அது ஒருபோதும் நித்திய ஜீவனை உடையதாயிருக்காது, ஏனென்றால் நித்திய ஜீவன் தேவனிடத்திலிருந்து மாத்திரமே உண்டாகிறது” என்றேன். 236 நித்தியம், “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, நீங்கள் ஒரு விசுவாசியாயிருக்கிறபடியால் நீங்கள் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கிறீர்கள். ஒரு அவிசுவாசி ஒரு குறிப்பிட்ட கால ஜீவனையே உடையவனாயிருக்கிறான். நித்தியமான…ஒரு விசுவாசி நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான், அது நித்தியமாயிருக்கிறபடியால் அழிந்து போக முடியாது. 237 ஆனால் ஒரு விசுவாசி, அவன் செல்லுகையில்…ஒரு அவிசுவாசி உலகத்தினூடாகச் செல்வான், அவனுக்கு கவலைகளும், துயரங்களும் உண்டு; ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அவன் அனுபவிப்பதாகக் கூறிக் கொள்கிறான், “ஹூப்பீ, ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்கிறான்.” ஸ்திரீகள், மதுபானம், மகிழ்ச்சியான பெரிய நேரம், அவன் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டேயிருப்பதாக அவன் எண்ணுகிறான். அவன் மரித்து, அவன் அக்கியும் கந்தகமும் எரிகிற கடலுக்குள் செல்வான், அங்கே சதாகாலமும் எரிந்து கொண்டேயிருக்கப் போகிறான், ஒரு கால் அவனுடைய ஆத்துமா நூறு கோடி ஆண்டுகள் அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலில் வாதிக்கப்படலாம். 238 நான்…நீங்களோ, “அது வழக்கமான காணப்படுகிற கந்தக் கல்லைப் போல இருக்குமா?” என்று கேட்கலாம். அது இதைப் பார்க்கிலும் கோடிக் கணக்கான மடங்கு மோசமானதாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன். உங்களால் அதை நெருப்பின் மூலம், இப்பொழுதுள்ள அக்கினியைக் கொண்டு விவரித்துக் கூற முடியாது என்று நான் நினைக்கிறேன். “அக்கினியினால்” என்று அது குறிப்பிடப்பட்டுள்ளதற்கான ஒரே காரணத்தினால், அது நமக்கிருக்கின்ற எல்லாவற்றையும் முற்றிலும் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறது என்பதாகும். அது முற்றிலும் பட்சித்து, ஒவ்வொன்றையும் அழித்து விடுகிறதையே அந்த அக்கினி செய்கிறது. ஆகையால் அது அவ்வண்ணமாய் அங்கு இருக்கும், ஆனால் ஒரு விதமாக…தண்டிக்கப்பட்ட வேண்டிய ஒரு ஆத்துமா உங்களுக்கு உண்டு. 239 இப்பொழுது, நீங்கள் அக்கினி என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும், ஏனென்றால் பரிசுத்த ஆவி என்பதும், “பரிசுத்த ஆவியும் அக்கினியும்” என்றே உபயோகப்படுத்தப்படுகிறது; ஏனென்றால் பரிசுத்த ஆவி பாவத்தை எரித்துப் போடுகிறது, பாருங்கள், சுத்தமாக்குகிறது. 240 ஆனால் அக்கினி, அது நரகத்திலிருந்து வருகிறது, அது ஒரு, “அக்கினிக் கடல்” என்று கூறப்பட்டுள்ளது. அது என்னவென்றால், அது ஒரு தண்டனையோடு வாதிக்கப்படுதலாயுள்ளது. ஐஸ்வரியவான் பாதாளத்திலிருந்து தன்னுடைய கண்களை ஏறெடுத்தபோது, “லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும், ஏனென்றால் இந்த அக்கினி ஜீவாலை என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது” என்றான். ஒரு எரிகின்ற நரகம் இல்லையென்று எண்ணிக் கொள்ளாதீர்கள், ஒரு உண்மையான நரகம் உண்டு. உண்மையாகவே ஒரு பிசாசு உண்டு என்றால், ஒரு உண்மையான நரகம் உண்டு. 241 ஆனால், நீங்கள் பாருங்கள், தாறுமாறாக்கப்பட்ட ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு முடிவு உண்டு, ஏனென்றால் அது முடிவிலே அந்த தூய்மைக்கும், தேவனுடைய பரிசுத்தத்திற்கும் திரும்பி வர வேண்டும். தேவன் நித்தியமாயிருக்கிறார்; நாம் நித்திய ஜீவனை உடையவர்களாயிருந்தால், தேவன் நமக்குள்ளாக இருக்கிறார், தேவன் மரிக்க முடியாதது போல நாமும் ஒருபோதும் மரிக்க முடியாது. அங்குதான் காரியமே உள்ளது. 242 இப்பொழுது அந்தப் மூல வாக்கியமே அதை உண்மையாகவே விளக்குகிறது, பாருங்கள், அதை சரியாகக் கூறுகிறது. இப்பொழுது, நாம் பார்ப்போம். நான் ஒரு…எனக்குத் தெரியாது…ஆம்: “அவர்கள் என்னவாக—என்னவாக ஆவார்கள்?” 243 அவர்கள் அழிந்து போவார்கள், இனிமேல் அவர்கள் ஒன்றுமேயில்லாதவர்களாவார்கள். ஆத்துமா போய்விடுகிறது, ஆவி போய்விடுகிறது, ஜீவன் போய்விடுகிறது, சரீரம் போய்விடுகிறது, சிந்தனைகள் போய்விடுகிறது, ஞாபக சக்தி போய்விடுகிறது. 244 இனி ஒருபோதும் பொல்லாத சிந்தனைகள் கூட இருக்காது அல்லது ஒருபோதும் பொல்லாங்கு மகிமையில் சம்பவிக்காது. அது உண்மை. அது…இங்கே இந்த பாகத்தில் இருக்கும் அந்த ஜனங்களை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 245 வேதம், “துன்மார்க்கருடைய யோசனைகளும்கூட அழிந்துபோம்” என்று கூறவில்லையா? அவனுடைய சிந்தனைகள் அழிந்துபோம். 246 இதோ ஒரு மனிதன் இங்கே இருப்பான் என்றும், இதோ தேவனாகிய மகத்தான பரிசுத்தர் இங்கே இருக்கிறார் என்றும், அங்கே அப்பால் உள்ள ஒரு குழியில், அதற்குள் ஆத்துமாக்கள் எரிந்து கொண்டிருக்கும் என்று அறீயீர்களா? ஏன், அது பரலோகமாயிருக்க முடியாது. அந்த எண்ணங்கள், அந்த ஞாபக சக்தி, தாறுமாறாக்கப்பட்ட ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு பொல்லாத சிந்தனையும், ஒவ்வொருகாரியமும் அழிந்து விடும், அதில் உள்ள பொல்லாத ஒவ்வொரு காரியமும் அழிந்துபோம். நாம் வேறேதுமில்லாமல் ஸோயீயோடு, தேவனுடைய ஜீவனோடு சுத்தமாய் இருப்போம்; காலங்கள் உருண்டோடிக் கொண்டேயிருக்க நித்தியத்தில் இருப்போம்; அதற்கு ஒருபோதும் முடிவேயில்லாமல் நித்தியமாயிருக்கும்! 247 “துன்மார்க்கர் குறிப்பிட்ட கால தண்டைக்குள்ளாகச் சென்றனர், ஆனால் நீதிமான்களோ நித்திய ஜீவனுக்குள்ளாகச் சென்றனர்.” உங்களுக்கு இது புரிகிறதா? குறிப்பிட்ட கால தண்டனை, நித்திய ஜீவன், என்னே ஒரு வித்தியாசம். 248 இப்பொழுது, பாருங்கள், அதுவல்ல…இப்பொழுது, எனக்குத் தெரியும், உங்களுக்கு, என்னுடைய அருமையான சிறு பிள்ளைகளாகிய உங்களுக்கு, எனக்கு—எனக்கு எல்லாமே தெரிந்தது போன்று என்னைக் காண்பிக்க முயற்சிக்கவில்லை. நான் அதைச் செய்தால்… 249 இப்பொழுது, நான் இன்னும் மூன்று அல்லது நான்கிற்கு மேற்பட்ட நல்ல கேள்விகளை வைத்துள்ளேன். கர்த்தருக்குச் சித்தமானால், நான் அவைகளை ஞாயிறு காலையில் எடுக்க உள்ளேன். 250 இப்பொழுது, கவனியுங்கள். எழும்புகிற இந்த கேள்விகளைப் பாருங்கள். நான் ஒரு வயதான பிரசங்கியார். நான்—நான்—நான் இருபத்தியாறு ஆண்டுகளாக ஊழியத்தில் இருக்கிறேன். நான்—நான் இதற்காக, என்னால் இதை கூற முடியும் என்பதற்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன், என்னுடைய…என்னுடைய ஜீவியத்தில் எந்த காரியமும் எனக்கு முதலில் வெளிப்படுத்தப்படாமல், அதை அறிமுகப்படுத்த ஒருபோதும், நான் ஒருபோதும் முயன்றதேயில்லை. அந்த கர்த்தருடைய தூதனுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்…எனக்கு கல்வியறிவு இல்லாதிருந்தது, எந்த திறமையும் இல்லாதிருந்தது. இந்த தூதன் இறங்கி வந்தார், அவர் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டு எனக்கு ஒத்தாசையாக இருந்து வருகிறார். ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் முற்றிலும் பொருந்தாத எந்த ஒரு காரியத்தையும் அவர் என்னிடத்தில் ஒரு போதும் கூறினதேயில்லை. அதினாலே…அவர், “நீ—நீ ஒரு தெய்வீக சுகமளித்தலின் வரத்தைக் கொண்டு செல்வாய்” என்று கூறினபோது, நான் உடனே அதை எழுதினேன். அவர் அதைக் கூறின விதமாகவே நான் அதை எழுதி வைத்தேன். 251 மூன்று வருடத்திற்குள் மேலாளர் அதை என்னுடைய—என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்து, “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் அதைக் கவனித்தீர்களா? அவர் உங்களிடத்தில் ‘ஒரு வரம்’ என்று கூறினபடியே அது மிகப் பரிபூரணமாய் உள்ளது” என்றார். 252 பாருங்கள், “வரம்” என்று ஒருபோதும் கூறவில்லை. வேதாகமத்தில் உள்ள ஒவ்வொன்றும்—ஒவ்வொன்றும்…ஒவ்வொரு வரமும், “வரமாயுள்ளது.” ஆனால் தெய்வீக சுகமளித்தல், அது, “ஒரு வரமாய்” உள்ளது. அது “சுகமளிக்கும் வரங்களாய்” உள்ளன. நீங்கள் எல்லாவிதமான சுகமளிக்கும் வரங்களையும் வித்தியாசமான விதங்களில் பெற்றிருக்கக் கூடும். ஆனால் மற்ற ஒவ்வொன்றும், “வரமாய்” உள்ளது. “அந்த” தீர்க்கதரிசன வரம், “அந்த” இதைக் குறித்த வரம். ஆனால் தெய்வீக சுகமளித்தல், “வரங்கள்” என்று பன்மைகளில் உள்ளன. நான் அதை ஒருபோதும் கவனித்தேயில்லை, அதாவது பரிசுத்த ஆவியானவர் மிகவும் பரிபூரணமாயிருக்கிறார். ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக! 253 அதே பரிசுத்த ஆவியானவர் நூற்றுக்கணக்கான மனிதரைக் கொண்டு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தனித்தனியாக வேதாகமத்தை எழுதினார் என்று நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா…அவர்களில் ஒருவரும் மற்றவர்க்கு வேறுபட்டிருக்கவில்லை, அவர்கள் ஒவ்வொருவரும் வேற்பாடின்றி முழுமையாய் இருந்தனர்; மேலும் அவர்களில் ஒருவரும் மற்றவரைக் குறித்து ஒருபோதும் கேள்விப்பட்டதும் கூட இல்லை. 254 பவுல் புறப்பட்டுச் சென்று, அரேபியாவில் இருந்தான், பதினான்கு ஆண்டுகளாக எருசலேமிற்கு வருகைத் தரவில்லை, ஆனால் எருசலேமில் இருந்தான்…ஒருபோதும் எருசலேமிற்கு புறப்பட்டுச் செல்லவில்லை. ஆனால் அரேபியாவில் இருந்து விட்டு, பின்னர் பிரசங்கிக்கக் துவங்கினபோதும், பேதுருவையும், மற்றவர்களையும் பதினான்கு ஆண்டுகளாகப் பார்க்கவேயில்லை. அவர்கள் ஒன்றாக சேர்ந்தபோது, அதாவது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானம், தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமை போன்ற ஒரு காரியத்தையே அவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். 255 ஓ! நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்: அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; (அல்லேலூயா) அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பெந்தேகோஸ்தேவில் விழுந்த அக்கினியால், சுத்திகரிக்கப்பட்டு, சுத்தமான மக்கள் எங்கும் உள்ளனர். அவர்கள் இருதயங்கள் யாவும் அக்கினியால் ஜீவாலிக்கின்றன, ஓ, இப்பொழுது அது என் இருதயத்தில் கொழுந்து விட்டெரிகிறது. ஓ, அவருடைய நாமத்திற்கே மகிமை! நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் மேலறையில் ஒன்று கூடி, எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட ஊழியத்திற்காக வல்லமை வந்தது; அந்த நாளிலே அவர்களுக்காக அவர் என்ன செய்தாரோ இப்பொழுது அதையே அவர் உங்களுக்காகவும் செய்வார், நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூறமுடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். (அல்லேலூயா) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நான் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 256 கவனியுங்கள், நான் உங்களுக்காக ஒரு சிறு செய்தியை வைத்துள்ளேன்: என் சகோதரனே வந்து, இந்த ஆசீர்வாதத்தை தேடுவீர், அது பாவத்திலிருந்து உங்களுடைய ஆத்துமாவை சுத்திகரிக்கும், அது சந்தோஷ—மணிகள் ஒலிக்கத் துவங்கும் உங்களுடைய ஆத்துமாவை தொடர்ந்து அனல் மூட்டும்; ஓ, அது என்னுடைய இருதயத்திற்குள்ளாக இப்பொழுது கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கிறது, ஓ, அவருடைய நாமத்திற்கே மகிமை, நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 257 நீங்கள் அவர்களில் ஒருவராயிருப்பதனால் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? அது என்ன? அது வெளிப்படுத்துகிற ஆவியாயுள்ளது. அது, “இந்தக் கல்லின் மேல்” என்ற ஒரு தேவனுடைய வெளிப்பாடாய் உள்ளது. ஒரு தலைமைப் பேராயராயிருந்தாலும்…எனக்குக் கவலையில்லை. 258 அண்மையில் என்னுடைய வீட்டில் ஒரு கத்தோலிக்க பாதிரியார் அமர்ந்திருந்தார். அப்பொழுது அவர், “திரு பிரான்ஹாம் அவர்களே, நான் உங்களை ஒரு கேள்வி கேட்க வந்துள்ளேன்” என்றார். அதற்கு நானோ, “சரி, கேளுங்கள் ஐயா” என்றேன். மேலும் அவர், “பேராயரிடத்திலிருந்து உங்களுக்கு வந்துள்ள ஒரு கடிதத்தை நான் இங்கு வைத்திருக்கிறேன்” என்றார். அதற்கும் நான், “சரி, ஐயா” என்றேன். 259 அப்பொழுது அவர், “நீங்கள் கூறும் வாக்குமூலங்களுக்காக நீங்கள் உங்களுடைய கரத்தை வைத்து, நீங்கள் கூறப்போவது உண்மை என்று பயப்பக்தியோடு சத்தியம் பண்ணுவீரா?” என்று கேட்டார். 260 அதற்கு நானோ, “நான் சத்தியம் பண்ண மாட்டேன்.” என்றேன். மேலும் நான், “வேதம், ‘வானத்தின் பேரிலாவது அல்லது பூமியின் பேரிலாவது சத்தியம் பண்ணாதிருங்கள். (ஏனென்றால் அது அவருடைய பாதபடி) உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்,’ என்று உரைத்துள்ளதே. எனவே நான் கூறுவதை பேராயர் கேட்க விரும்பினால், அவர் என்னுடைய வார்த்தையை அதற்காக ஏற்றுக் கொள்ளட்டும், அவர் கேட்க விரும்பவில்லையென்றால், நான் அதற்காக சத்தியம் பண்ணமாட்டேன்” என்றேன். 261 புனித இருதய திருச்சபையிலிருந்து இங்கு வந்த இந்த கத்தோலிக்க குரு, “நீர் பவுலின் பிரேஸியர் அவர்களுக்கு இன்ன—இன்ன குறிப்பிட்ட தேதியில் ஞானஸ்நானங்கொடுத்தீரா?” என்று கேட்டார். 262 அதற்கு நான், “ஐயா, நான் ஓஹையோ நதியில் ஞானஸ்நானங்கொடுத்தேன்” என்றேன். 263 அப்பொழுது அவர், “நீர் அவளுக்கு எப்படி ஞானஸ்நானங்கொடுத்தீர்?” என்று கேட்டார். 264 அதற்கு நான், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அவளைத் தண்ணீரில் மூழ்க்கி அவளுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்” என்றேன். 265 அவர் அதை குறித்துக் கொண்டார். மேலும், “கத்தோலிக்க சபையானது முன்பெல்லாம் அந்த விதமாகவே ஞானஸ்நானங் கொடுத்து வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நான், “எப்பொழுது?” என்று கேட்டேன். அப்பொழுது அவர். “ஆதிகாலத்தில்” என்றார். அதற்கு நான், “எந்த ஆதிகாலத்தில்?” என்று கேட்டேன். அப்பொழுது அவர், “துவக்கத்திலே” என்றார். அதற்கு நான், “எந்த துவக்கத்தில்?” என்று கேட்டேன். அப்பொழுது அவரோ, “வேதத்தில்” என்றார். அதற்கு நான், “சீஷர்களிலிருந்த ஆரம்ப காலத்தையா…நீர் பொருட்படுத்திக் கூறுகிறீரரா?” என்று கேட்டேன். அப்பொழுது அவர், “நிச்சயமாக” என்றார். அப்பொழுது நான், “நீ கத்தோலிக்க…கூறுகிறீர், சீஷர்கள் கத்தோலிக்கராயிருந்தார்கள் என்று நீர் கூறுகிறீரே” என்றேன். அதற்கு அவர், “அவர்கள் நிச்சயமாகவே கத்தோலிக்கர்கள்” என்றார். அப்பொழுது நான், “கத்தோலிக்க சபை அதை மாற்றவில்லை என்று நான் எண்ணியிருந்தேனே?” என்றேன். அவர், “அது மாற்றவில்லையே” என்றார். 266 அப்பொழுது நான், “அப்பொழுது பேதுரு, ‘மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஏன் கூறினார்? நீங்களோ, அவன் ஒரு போப்பாக இருந்தான்…என்று கூறுகிறீர்களே?” என்று கேட்டேன். 267 அதற்கு அவரோ, “ஆம், போப்புதான்” என்றார். 268 அப்பொழுது நான், “அப்படியானால் நீங்கள் ஏன் ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்’ நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள்? அவன் தண்ணீரில் மூழ்க்கினான், நீங்களோ தெளிக்கிறீர்கள். இப்பொழுது என்ன சம்பவித்தது?” என்று கேட்டேன். 269 அதற்கு அவர், “ஆனால், நீங்கள் பாருங்கள், கத்தோலிக்க சபையானது அவர்கள் செய்யும்படி விரும்புகிற எந்தக் காரியத்தையும் செய்ய அதிகாரத்தை உடையதாயிருக்கிறது” என்றார். ஊ. 270 அப்பொழுது நான், “நீர் சீஷர்களை கத்தோலிக்கர்கள் என்று அழைத்தீரே?” என்று கேட்டேன். 271 அதற்கு அவர், “ஆம்” என்றார். 272 அப்பொழுது நான், “ஐயா, நான் ஜோசிபஸினுடைய புத்தகத்தை வைத்துள்ளேன், நான் பாக்ஸ் என்பவர் எழுதின இரத்த சாட்சிகளின் புத்தகத்தை வைத்துள்ளேன், நான் பெம்பர்மேன் என்பவரினுடைய ஆதிகாலங்கள் என்ற புத்தகத்தை வைத்துள்ளேன், நான் ஈஸ்ஸலப் என்பவரினுடைய இரு பாபிலோன்கள் என்ற புத்தகத்தை வைத்துள்ளேன், உலகில் உள்ள மிகப் பழமையான சரித்திரப் புத்தகங்களையும் வைத்துள்ளேன், எனவே எங்கே கத்தோலிக்க சபையானது நியமிக்கப்பட்டது இல்லை ஒரு ஸ்தாபனமானது என்று எனக்குக் காண்பியுங்கள்…கடைசி அப்போஸ்தலன் மரித்த பிறகு, ஆறு நூறு வருடங்கள் கழித்தே ஆனது” என்று கூறினேன். “ஓ” அவரோ, “நாங்கள் சபை கூறுகிறதையே விசுவாசிக்கிறோம்” என்றார். அதற்கு நான், “வேதம் கூறுகிறதையே நான் விசுவாசிக்கிறேன்” என்றேன். புரிகிறதா? “ஏன்?” அவரோ, “தேவன் தம்முடைய சபையில் இருக்கிறார்” என்றார். 273 நானோ, “தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார்” என்றேன். நான் கூறினேன், “இருந்தாலும்…” அவர் கூறினார்…நான், “தேவன் தம்முடைய சபையில் இருக்கிறார் என்று வேதம் கூறவில்லை, ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார் என்று கூறுகிறது. ‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது; நமக்குள்ளே வாசம்பண்ணினார்’” என்றேன். அது உண்மை. நான், “தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார்” என்றேன். 274 அவர் வெளியே போய் அதைக் கூறினார். அவர், “பரவாயில்லை, எங்களால் விவாதிக்க முடியவில்லை” என்று கூறிவிட்டு, “காரணம் நீங்கள் வேதத்தில் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள், நான் சபையில் விசுவாசங்கொண்டிருக்கிறேன்” என்று கூறிவிட்டார். 275 நான், “வேதம் தேவனுடைய ஏவப்பட்ட வார்த்தையாயிருக்கிறது என்றும், அதில் எந்த ஒரு முரண்பாடும் இல்லை என்றும் நான் விசுவாசிக்கிறேன். அது தேவனுடைய வார்த்தையாய், வரப்போகும் முழு காலங்களுக்குமான அவருடைய நித்திய திட்டங்களாயிருக்கின்றன. அவர், ‘வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை’ என்றார். அது உண்மை. நான் அந்த வார்த்தையை விசுவாசிக்கிறேன்” என்றேன். 276 அப்பொழுது அவர் திருமதி. பிரேஸியர் அவர்களிடம் சென்றார். அவர், “திருமதி. பிரேஸியர், உன்னுடைய மகள் கத்தோலிக்க சபையில் ஒரு அங்கத்தினராக இருக்கலாம் என்று சம்மதித்து ஒரு காகிதத்தில் நீ கையெழுத்திட்டு இங்கு தருவாயா?” என்று கேட்டார். 277 அதற்கு அவளோ, “நான் அதைப் பார்க்கிலும் அவளோடு கல்லறைக்கு நடந்து செல்வதே மேலானதாகும்” என்றாள். 278 அப்பொழுது அவர், “உனக்கு அவமானம்” என்றார். மேலும், “அந்த அர்த்தமற்ற காரியத்திலிருந்து அந்தப் பெண் வெளிவந்து, கத்தோலிக்க சபைக்குள்ளாக இருப்பதற்கு நீ நன்றியுள்ளவளாயிருக்க வேண்டாமா?” என்று கேட்டார். 279 நான் “உன்னுடைய பெண் என்னுடைய சபைக்கு வந்தால், நீ அதைக் குறித்து என்னக் கூறுவாய்?” என்று கேட்டேன். 280 “ஓ” அவர், “அப்படியானால் அது வித்தியாசமானது” என்றார். 281 மேலும், “இல்லை, அதுவல்ல” என்றார். அவர் அந்த சிறு பெண்ணை அங்கேயிருந்து செல்லவிட்டபோது, அவர் எங்கிருந்தோ வந்திருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் எங்கோ இருந்திருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். அப்பொழுது அவள், “இப்பொழுது, நீர் உள்ளே வருவதற்கும் அதே வாசல் திறந்துள்ளது” என்றாள். 282 பாருங்கள், அதுவே வழியாயுள்ளது. பயப்படாதீர்கள், நீங்கள் பயப்பட வேண்டாம். தேவன் உங்கள் பட்சத்தில் இருந்தால், உங்களை விரோதிப்பவன் யார்? சரியே! நீங்களோ ஒரு முதுகெலும்பிற்கு பதிலாக பறவையின் கவை எலும்பையேப் பெற்றுள்ளீர்கள், இன்றைக்கு அதுவே அதைக் குறித்த தொல்லையாயுள்ளது. தேவனுக்காக சரியாக உறுதியாய் நில்லுங்கள்! 283 அந்த அப்போஸ்தலர்கள் மேலும், முன்காலங்களிலும் இறங்கின அதே பரிசுத்த ஆவியானவர் இன்றைக்கு தம்முடைய சபையில் இன்னமும் இருக்கிறார், தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். “ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” அது தேவன் தம்முடைய தெரிந்து கொள்ளுதலினால் ஜனங்களைக் கொண்டுவந்து அவர்களுடைய கண்களைத் திறந்தலாகும். இல்லையென்றால் நீங்கள் ஒருபோதும் அதைப் புரிந்து கொள்ளவே முடியாது, நீங்கள் குருடாயிருக்கிறீர்கள், தேவன் உங்களுடைய மனக்கண்ணைத் திறந்ததாலொழிய நீங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் குருடராயிருக்கிறீர்கள், தேவன் உங்களுடைய மனக்கண்ணைத் திறந்தாலொழிய நீங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் குருடராயிருக்கிறீர்கள் என்றும், உங்களால் காண முடியாது என்றும் வேதம் உரைத்துள்ளது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதேயில்லை. எல்லா கல்வியறிவினாலும், நீங்கள் பெற முடிந்த எல்லா பாண்டியத்தியத்தினாலும் நீங்கள் அப்படியேத் தொடர்ந்து குருடாகவே இருந்து வருகிறீர்கள். 284 இப்பொழுது இங்கே உள்ள சர்ச் ஆப் கிரைஸ்ட் என்ற ஸ்தாபனத்தவராகிய நீங்கள் வேதம் எங்கு பேசுகிறதோ அங்கே நீங்கள் பேசுகிறீர்கள், வேதம் எங்கே அமைதியாயிருக்கிறதோ அங்கு நீங்களும் அமைதியாயிருப்பதாகக் கூறுகிறீர்களே, இதைப் பற்றின சிலவற்றைக் குறித்து என்ன? நீங்கள் அதன் பேரில் மிக அமைதியாயிருக்கிறீர்களே. சரி. 285 பாருங்கள், அதற்கு ஆவிக்குரியபிரகாரமான வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் தேவையாயிருக்கிறது. ஆகையால் தேவன் இறங்கி வந்து, தம்மை வெளிப்படுத்தி, அது சத்தியம் என்பதை ரூபகாரப்படுத்துகிறார். ஆமென்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நானும் அவ்வண்ணமாகவே நேசிக்கிறேன். ஆமென். 286 சரி, இப்பொழுது மெத்தோடிஸ்டுகளாகிய நீங்கள் எல்லோரும் பாப்டிஸ்டுகளோடு கரங்களைக் குலுக்க விரும்புகிறீர்களா? பிரஸ்பிடேரியன்களாகிய நீங்கள் அவ்வாறு விரும்புகிறீர்களா? 287 “இப்பொழுது,” நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், நீர் பாப்டிஸ்டுகளையும், பாப்டிஸ்டுகளோடு ஐக்கியப்படாத…பிரஸ்பிடேரியங்களையும் ஐக்கியத்திலிருந்து வெளியே தள்ளச் செய்கிறீரா?” என்று கேட்கலாம். 288 இல்லை ஐயா, நான் அவ்வாறு செய்கிறதில்லை. நான் அவர்களை என்னுடைய சகோதரர்களாக கருதுகிறேன். முற்றிலுமாக! நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கவில்லையென்றால் எனக்குக் கவலையில்லை. நீங்கள், “சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம்” என்னும் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருந்தால், அது…“பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டது போன்று எந்த நன்மையுமாயிருக்காது. அவை வெறுமென பட்டப்பெயர்களே. அவர் சாரோனின் ரோஜாவாயிருந்தார். அவர் அவ்வாறு இருந்தாரா? பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம், அந்த எல்லாமுமாயிருந்தார். நிச்சயமாகவே, அவர் அவ்வாறு இருந்தார். அப்படியே ஒரு காரியம் அல்லது மற்றொன்று. ஆனால் இங்குதான் அது உள்ளது: சரியான வேதப் பிரகாரமான முறையோ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உள்ளது. நீங்கள் வேதப்பிரகாரமான வழியை விரும்பினால், அதுவே சரியானது. அதுவே சரியான வழியாயுள்ளது. 289 இப்பொழுது, நீங்கள் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருந்தால், அதனால் பரவாயில்லை என்பது போல உணர்ந்தால், ஆமென். இது தேவனைப் பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்தால், ஆமென். தொடர்ந்து செல்லுங்கள், பாருங்கள். 290 ஆனால் என்னப் பொறுத்த மட்டில், என்னுடைய பாகத்தைப் பொருத்தவரையில், நீங்கள் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் மீண்டும் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டுமா?” என்று கேட்டால், அப்பொழுது நான், “ஆம்” என்றே கூறுவேன், ஏனென்றால் அது என்னுடைய பாகம். 291 அன்றொரு நாள் ஒரு ஸ்திரீ இங்கு வந்து, “என்னை ஒரு பிரசங்கியாயிருக்கும்படிக்கு கர்த்தர் அழைத்தார்” என்றாள். அவள் இங்கிருந்தே நிலவிற்கு குதிக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியாதது போல, என்னால் அவள் கூறின அதையும் நமப முடியவில்லை. அவள்… 292 நான், “நல்லது, சகோதரியே, அது மிக நன்றாயுள்ளது” என்றேன். மேலும் நான், “நீர் திருமணமானவரா?” என்று கேட்டேன். அதற்கு, “ஆம்” என்றாள். மேலும், “உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டா?” என்று கேட்டேன். அதற்கும், “ஆம்” என்றாள். அப்பொழுது நான், “என்ன…உங்களுடைய கணவர் இரட்சிக்கப்பட்டிருக்கிறாரா?” என்று கேட்டேன். அதற்கு, “இல்லை” என்றாள். அப்பொழுது நான், “அப்படியானால் நீங்கள் அவரோடு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அவரை வீட்டிலேயே விட்டு விட்டுச் செல்லப் போகிறேன்” என்றாள். 293 அப்பொழுது நான், “அதுவே பிசாசு எப்போதும் கொண்டுள்ள மிகச் சிறந்த தூண்டில். முதலாவது நீங்கள் ஒரு அழகான ஸ்திரீயாயிருக்கிறீர்கள், நீங்கள் இங்கிருந்து ஊழிய களத்திற்குள் செல்லும் போது நீங்கள் பிசாசிற்கான வழக்கமான ஒரு தூண்டிலாயும், ஒரு குறி இலக்காய் இருப்பீர்கள். உன்னுடைய கணவனை, வீட்டில், ஒரு வாலிபனை, நீ அவனை இந்த இரண்டு பிள்ளைகளோடு விட்டுச் செல்லப் போகிறாய்; அப்பொழுது அவன் மற்றொரு ஸ்திரீயோடு ஓடத் துவங்குவான், இந்தப் பிள்ளைகளோ இந்நாட்களில் ஒன்றில் மற்றொரு தந்தையை உடையவராயிருப்பரே” என்றேன். மேலும் நான், “முதலாவது காரியம், தேவன் ஒரு ஸ்திரீயை அழைத்திருந்தால், அவர் தன்னுடைய வார்த்தைக்கு முரண்பட்டுவிட்டாரே” என்றேன். தொடர்ந்து நான், “இப்பொழுது, நீங்கள் அவ்வாறு போக விரும்பினால், பரவயாயில்லை” என்று கூறி, “இப்பொழுது, பகுத்தறிதல், கர்த்தர் உனக்கு பகுத்தறிதலைக் கொடுத்திருக்கிறார் என்று நீ கூறுகிறாயே. அப்படியானால் நீ மேடையின் மேல் சென்று, அதை செய்ய முயற்சிக்க விரும்புகிறாயா?” என்று நான் கேட்டேன். 294 அதற்கு அவளோ, “சரி” என்றாள். என்ன சம்பவித்தது என்று நீங்கள் பாருங்கள். 295 நீங்கள் பாருங்கள், அது ஆர்வமிகுதியினாலுண்டானது. அது வார்த்தையின்படி வர வேண்டும். அது வார்த்தையின்படியில்லையென்றால், அப்பொழுது அது சரியானதல்ல. உங்களுடைய உணர்ச்சிகள் என்னவாயிருந்தாலும் நான் கவலைப்படுகிறதில்லை, அது சரியல்ல. ஆமென்! அது நன்மையாகவே தொனிக்கிறது. ஆமென்! 296 சரி: நாம் ஒளியில் நடப்போம், அப்பேர்பட்ட ஒரு அழகான ஒளி, அங்கிருந்து வருகிற இரக்கத்தின் பனித்துளிகளோ பிரகாசிக்கின்றன்; இரவும் பகலும் நம்மை சுற்றிப் பிரகாசிக்கிற இயேசுவே, உலகத்தின் ஒளி. இயேசுவே, உலகத்தின் ஒளியென, ஒளியின் பரிசுத்தவான்களே நீங்கள் எல்லோரும் பறைசாற்றுங்கள்; அப்பொழுது இயேசுவே, உலகின் ஒளியென்று, பரலோகத்தின் மணிகள் ஒலிக்கும். நாம் ஒளியில் நடப்போம், அப்பேர்ப்பட்ட அழகான ஒளி, அங்கிருந்த வருகிற பனித்துளிகள்… இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிற இயேசுவே,…ஒளி… 297 இப்பொழுது நாம் இதை மீண்டும் பாடுகையில், நீங்கள் திரும்பி நான்கு பக்கங்களிலும் உள்ள ஒவ்வொருவரோடும் இப்பொழுது கரங்களைக் குலுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்: நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளி, (ஆமென்) அங்கிருந்து வருகிற இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசிக்கின்றன; இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிற, இயேசுவே…ஒளி. 298 நீங்கள் மெத்தோடிஸ்டுகளை நேசிக்கிறீர்களா? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] பாப்டிஸ்டுகளையுமா? பிரஸ்பிடேரியன்களையுமா? கத்தோலிக்கரையுமா?…ஓ, நீங்கள் அவர்கள் எல்லோரையும் நேசிக்கிறீர்களா? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] நாம் ஒளியில் நடப்போம், அழகான…(நாம் செல்லுகையில் கரங்களைக் குலுக்குவோம்) ஓ, அங்கிருந்து வருகிற இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசிக்கின்றன; இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிற இயேசுவே…ஒளி 299 இப்பொழுது நாம் கலைந்து செல்லும் போது பாடும் நம்முடைய பாடலைப் பாடுவதற்கு முன்னர்…இப்பொழுது முடிந்தளவு நான் மீண்டும் ஞாயிறு இருங்கிருப்பேன். இப்பொழுது, அதற்குப் பின் கிறிஸ்துமஸிற்குப் பிறகு வரையிலும் நான் திரும்பி வரமாட்டேன். பாருங்கள், ஏனென்றால் நான் மிக்சிகனுக்கும், மிக்சிகனிலிருந்து கொலரோடாவிற்கும், கொலரோடாவிலிருந்து ஹைடஹோவிற்கும், ஹைடஹோவிலிருந்து கலிபோர்னியாவிற்கு செல்கிறேன், அதன்பின்னரே நாங்கள் திரும்பி வருவோம். கூடுமானால், (நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்) நான் ஜனவரி மாதம் இருபத்தி நான்கு முதல் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வரை லோவாவில் உள்ள வாட்டர்லூவில் இருப்பேன். பாருங்கள், அந்த பெரிய அரங்கம் அங்குள்ளது, சற்று முன் நான் அந்த தொலைபேசி அழைப்பைப் பெற்றுக் கொண்டேன், இப்பொழுதிலிருந்து ஞாயிறு வரை நான் ஜெபிக்க வேண்டும். பாருங்கள், லோவாவிலுள்ள வாட்டர்லூ, அதுவும் இப்பொழுது அதற்கு நெருக்கமாயுள்ளது. 300 ஆனால் இப்பொழுது, நினைவிருக்கட்டும், சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு ஒலிப்பரப்பாகும் சகோதரனுடைய ஒலிப்பரப்பைக் கவனித்துக் கேளுங்கள். நாங்கள் அவரை அழைத்து, அதை அவரை அறிந்து கொள்ளச் செய்வோம், அது WLRP என்ற ஒளிப்பரப்பில், சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நெவில் நால்வர் குழு சேர்ந்து பாடும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும். நாங்கள்…நான் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி எடுக்கவில்லையென்றால், அப்பொழுது சகோதரன் நெவில் அந்த கேள்விகளுக்கு பதிலளித்து முடித்துவிடுவார். சகோதரன் நெவில் ஞாயிறு காலை நீர் பதிலளிப்பீரா? [சகோதரன் நெவில், “பெரிய கட்டளை” என்று கூறி சிரிக்கிறார்—ஆசி.] நல்லது, பாருங்கள், நீங்கள் சிரமப்பட்டால், அப்பொழுது நான் உங்களோடு ஒத்துழைப்பேன். அவர் பார்த்துக் கொள்வார். சரி. 301 சரி: துயரமும் துக்கமுமான பிள்ளையே, இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், அது உனக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் அளிக்கும், ஓ, நீ எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அதை கொண்டு செல். விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே; விலையேறப் பெற்ற நாமம், விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே; 302 இப்பொழுது சத்தமிடுவதில் நம்பிக்கைக் கொண்டுள்ள ஒரு பாப்டிஸ்ட்டை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அந்த விதமாக சத்தமிடுவதில் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். அந்த வயோதிக தாயார் அங்கு அமர்ந்திருக்க, ஆவியானவர் அவள் மீது வந்தார். அவள் கூச்சலிட ஆரம்பித்துவிட்டாள், அவளால் அதை அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை, எனவே அவள் பின்னால் நடந்து சென்று தன்னுடைய மகளை கட்டிடத் தழுவினாள். அந்த விதமாகத்தான் நான் அதைக் காண விரும்புகிறேன். ஆமென். அதுவே உண்மையான நல்ல, பண்டைய மாதிரியைக் கொண்ட, இருதயத்தை தொடக்கூடிய உணர்வுகளாகும். ஓ, என்னே, பண்டைய—பண்டைய, பக்குவமடைந்த, முதிர்சியடைந்த பரிசுத்தவான் மகிமையில் உள்ள பரம் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாயிருக்கிறார். அப்படியே அழைப்பாணைகளுக்காக காத்திருங்கள், நீங்கள் பாருங்கள், அப்படியே ஒரு அற்புதமான நேரத்தை உடையவராயிருந்து கொண்டிருக்கிறீர்கள். சரி சகோதரன் நெவில், இப்பொழுது, அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ செய்யலாம்.